Friday, February 17, 2017

எடப்பாடி ஜெயித்தாலும் நிலைத்து நிற்க மாட்டார்-



இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச் சாமி ஒரு வேளை வெற்றி பெற்றாலும் நிச்சயம் இது கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்படும்.இதற்கு முக்கிய காரணம் அதிமுக கொறடாவான ராஜேந்திரனுக்கு அதி முகவின் பொது செயலாளர் சசிகலா உத்தரவு கொடுப் பதோ அல்லது சசிகலாவினால் நியமிக்கப்பட்ட துணைப்
பொது செயலாளர் தினகரனோ உத்தரவு போட முடியாது
என்று கட்சி ரூல்ஸை எடுத்து விட்டால் எடப்பாடிக்கு
சிக்கல் தான்.
இந்த கொறடா என்று சொல்கிற WHIP பதவி பிரிட்டிஷ்
நாடாளுமன்ற நடை முறையை பின்பற்றி நம்முடைய சட்டமன்றம் பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சி களின் உறுப்பி னர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உருவாக்கப் பட்டது.
இந்த whip என்பதற்கு சவுக்கை என்கி ற பொருள்.அதாவது கட்சி சட்ட மன்ற பாராளு மன்ற உறுப் பினர்கள் சட்ட சபை மற்றும் பாராளுமன்றத்தில் கட்சியை மீறி நடக்கும் பொழுது அவர்களை சாட்டையை சுழற்றி கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக உருவாக் கப்பட்ட பதவியே கொறடா பதவி.
அதாவது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற நாடாளு மன் ற உறுப்பினர்களை அந்த கட்சிக்கு அடிமைகளாக வைக்க ஒரு கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு.இந்த கொறடா உத்தரவை மீறிசெயல்படும் உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார் கள் என்பது விதி.இந்த கொறடா பதவி என்பது ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ மற் றும் எம்பி யாக இருக்க வேண்டும்.
இப்பொழுது அதிமுகவின் கொறடா ராஜேந்திரன் எடப் பாடி அரசுக்கு ஆதரவாக நடக்கும் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டு போட சொல்லியிருக்கி றார் திமுகவின் கொறடா சக்கரபாணி நம்பிக்கை தீர்மா னத்திற்கு எதிராக திமுக உறுப்பினர்களை ஓட்டுப்போட
சொல்லியிருக்கிறார்காங்கிரஸ் கட்சி கொறடா விஜய தாரிணி இன்னும் முடிவு அறிவிக்கவில்லை.
இப்போதைய சூழலில் பன்னீர் தலைமையில் 11 எம்எல்ஏ க் கள் எடப்பாடியை எதிர்த்துகொறடா உத்தரவை மீறி ஓட்டுப் போடுவார்கள் என்று வைத்துக்கொள்வோம். பன்னீர் உட்பட 11 எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும்.இது
தான் சட்டம் சொல்லும் விதி முறை.
ஆனால் இந்த கொறடாவுக்கு எடப்பாடியை ஆதரிக்க எம்எல்ஏக்களுக்கு உத்தரவிடுங்கள் என்று அதிகாரம் கொடுப்பவர் யார் தெரியுமா? அதிமுகவின் பொது செய லாளர்.அதாவது சசிகலா.சசிகலாவின் உத்தரவின் பேரி லேயே அதிமுக கொறடா ராஜேந்திரன் அதிமுக உறுப்பி
னர்களுக்கு எடப்பாடியை ஆதரிக்க உத்தரவிடுகிறார்.
இங்க தான் சிக்கலே இருக்கு.அதிமுகவின் பொது செய லாளர் சசிகலா தேர்வே செல்லாது என்று தேர்தல் கமி ஷன் விசாரித்து வரும் பொழுது சசிகலா அதிமுகவின் பொது செயளாளராக தேர்வானது செல்லாது என்று தேர் தல் கமிஷன் அறிவித்துவிட்டால் அவ்வளவு தான் சசிகலா கட்சிக்கு உத்தரவிட்ட அனைத்து உத்தரவுக ளும் வாபஸ் தான்.
இதனால் தான் பன்னீர் அணியினர் சசிகலாவை மட்டு மல்ல அதிமுக கொறடாவையும் நீக்கிவிட்டனர்.இனி
எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும்
பன்னீர் கோஸ்டி எடப்பாடியை ஆதரிக்க உத்தரவிட்ட
கொறடா ராஜேந்திரனின் உத்தரவு செல்லாது என்று
கோர்ட்டுக்கு போகும்.அங்கே கொறடாவுக்கு உத்தரவு
போட்ட சசிகலாவே பொது செயலாளராக இருக்க முடியா து என்று தேர்தல் கமிஷன் பதில் சொல்லும்.
ஆக நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்தாலும் எடப்பாடி
நீண்ட நாள் முதல்வர் பதவியில் இருக்க முடியாது. இரு க்க விட மாட்டார்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...