Tuesday, February 21, 2017

🍀#மாசி 🍀#மாத #சிறப்புகள் 🍀

🍀மாக மாதம் என்று சொல்லப்படும் மாசி மாத முதல் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதை மகா ஸ்நானம் என்கின்றனர். 🍀
-
🍀குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது மக நட்சத்திரம் பௌர்ணமி திதியில் வருவதே மாசி மகம் என்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடினால் பாவங்கள் தொலைந்து புண்ணியம் சேரும். 🍀
-
🍀மாசிமக நீராடலை, பிதுர் மகா ஸ்நானம் என்று முன்னோர்கள் கூறுவதற்கேற்ப, மாசிமகத்தன்று, நம்மை விட்டு நீத்தாருக்கு, பித்ருக் கடனாக எள்ளும் நீரும் கொடுக்கும் சடங்கைச் செய்தால் பிதுர்தோஷம் விலகி, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். 🍀
-
🍀திருச்செந்தூரில் நடக்கும் மாசிமக திருவிழாவின்போது ஆறுமுக நாயினார் எனப்படும் பெரிய உற்சவமூர்த்தி பவனி வருகிறார். இவரை முன்புறம் ஆறுமுகராகவும் பின்புறம் நடராஜராகவும் அலங்கரித்து உலா வரச் செய்கின்றனர். 🍀
-
🍀மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக விழா ஒரு மண்டலம் நடைபெறும். விநாயகருக்கு 6 நாட்களும் முருகனுக்கு 6 நாட்களும் மூவர் முதலியவர்களுக்கு 3 நாட்களும் சந்திர சேகருக்கு 5 நாட்களும் விழா நடைபெறும். பஞ்ச மூர்த்திகள் உற்சவம் 10 நாட்களும் சுவாமிக்கு 3 நாட்களும் சண்டிகேஸ்வரருக்கு 3 நாட்களும் என 9 நாட்கள் நடைபெற்று 10ம் நாள் கொடியிறக்கி கணக்கு வாசிக்கப்படும். 🍀
-
🍀திருத்தவத்துறை, பூவாளூர், திருமங்கலம், சென்னிவளநாடு, கூகூர், இடையாற்று மங்கலம், மாந்துறை எனப்படும் ஏழு ஊர்களிலிருந்து பெருமான்களை ஒன்றுகூட்டி கொள்ளிடம் கரைக்கு அழைத்துச் சென்று, மாலையில், அங்கே அவர்களுக்குப் புனித நீராட்டு விழா நடைபெறுகிறது. அதன் பின்னர் ஏழூர் பெருமான்களும் உலாவாகத் தத்தம் ஊருக்குச் செல்கின்றனர். இது லால்குடியில், மாசிமக திருநாளின்போது காணக்கிடைக்கும் அற்புதக் காட்சி. 🍀
-
🍀திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் அப்பர் தெப்பம் என்ற பெயரில் மாசிமக நாளில் தெப்பவிழா நடைபெறுகிறது. 🍀
-
🍀கோவை மாவட்டம், திருமுருகன் பூண்டி முருகநாதர் ஆலயத்தில் மாசி மகத்தன்று தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 🍀
-
🍀தென்காசி விஸ்வநாதர் கோயிலில் மாசிமாதம் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. 🍀
-
🍀சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து மாசிமகத்தன்று சந்திரசேகர சுவாமி அஸ்திர தேவருடன் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு திரும்புவார். 🍀
-
🍀புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 🍀
-
🍀முதலாம் குலோத்துங்க சோழனின் தளபதியான நரலோக வீரன் என்பவன் சிதம்பரம் நடராஜப் பெருமான் மாசிக் கடலாட அமைந்த மண்டபம், அதற்காக அமைந்த கலைவழி ஆகியவற்றை நடராஜர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. 🍀
-
🍀திருச்சி உறையூரில், வல்லிநாச்சியார் உற்சவத்தில், மாசி மாதம் எட்டாம் திருநாள் நடைபெற்ற மாசிமகம் விழா பற்றிய தகவலை, விஜயநகர அரசரான கிருஷ்ண தேவராயர் காலத்து கல்வெட்டு கூறுகிறது. இவ்விழா திருமால் கோயில்களிலும் நடைபெற்றதாக தெரிய வருகிறது. 🍀
-
🍀முருகப் பெருமான் வள்ளியை கரம் பிடித்தது மாசி மாத பூச நட்சத்திரத்தில் தான்; சிவபெருமான் குழந்தையாக வந்து தம் திருவிளையாடல்களால் அருள் புரிந்தது இந்த மாதத்தில் தான்; மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தது மாசி மகத்தன்றுதான்; பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார். 🍀
-
🍀காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள் ஆகும். அன்னதானத்தின் பெருமையை விளக்குவதுடன், பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களை போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவதும் இம்மாதத்தில் தான். 🍀
-
🍀தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அகஸ்தியர் அருள் பெற்றது, எலும்புகள் பூக்களாக மாறிய அதிசயம், ஹிரண்ய கசிபு வதம் போன்ற அற்புதங்கள் நிகழ்ந்தது இம்மாதத்தில் தான். 🍀
-
🍀இந்நாளில் தான் முருகப் பெருமாள் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார். 🍀
-
🍀பார்வதி தேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காக தோன்றியது மாசி மகத்தன்றுதான். 🍀
-
🍀மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அன்று விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுபவர் என்று சொல்லப்படுகிறது. காமதகன விழா நடைபெறுவது மாசிமக நட்சத்திரத்தன்று. 🍀
-
🍀மாசிமகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய நினைப்பவர்கள் இன்று துவங்கினால் சிறந்து விளங்கலாம் என்று சொல்லப்படுகிறது. 🍀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...