Friday, April 28, 2017

இது அந்தக்காலம்...............

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.
ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”
சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?
திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.
சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.
திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.
சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”
திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.
சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.
மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.
அது என்னடி கதை? என்றான்.
ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.
“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.
இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு.
ராஜா: நில், யார் அங்கே?
திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.
ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்
திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.
ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.
இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.
திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.
ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?
திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?
ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.
மறு நாள் அரசவை கூடியது.
ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.
நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.
அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.
அரசவைக்கு ஓடோடி வந்தார்.
நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.
ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?
நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்
ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?
அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.
குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.
திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)
ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.
திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)
ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)
நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.
நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்
ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.
நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.
ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.
முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.
அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!
புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.
சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)
என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்.

ஐஸ்வர்யம் பெறுவதை விட்டு விட்டு நகை கடையில் மண்டி இடுவதுதான் அட்சய திருதியை தினமா மேன்மை மக்களே!!.

திதிகளில் பவுர்ணமி அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதி ‘திருதியை’ ஆகும். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திருதியை திதி ‘அட்சய திருதியை’ எனப்படுகிறது...
பாண்டவர்கள் வனவாசத்தின் போது உணவுப் பொருட்களை அள்ள, அள்ள குறையாத அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் இந்தநாளில் தான். மகாவிஷ்ணுவின் மார்பில் திருமகள் என்றும் நீங்காமல் இருக்கும் வரத்தை அட்சய திருதியை தினத்தன்று பெற்றாள். வேதவியாசர் சொல்லச்சொல்ல விநாயகர் மகா பாரதத்தை எழுத தொடங்கியதும், குபேரன் மகா லட்சுமியை வணங்கி வற்றாத செல்வமுள்ள சங்க நிதி, பதுமநிதியை பெற்றதும், பகிரதன் தவம் இருந்து புண்ணிய நிதியான கங்கை நதியை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வரவழைத்ததும் இந்த நாளில் தான் எனக் கூறப்படுகிறது.
அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வரிய லட்சுமி, தானிய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அன்றைய திருதியை நாளில் புதிதாக தொழில் தொடங்குவதும், பூமி பூஜை செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கும். அன்றைய தினம் ஏழைகளுக்கு செய்யும் தானம், பன் மடங்கு புண்ணியத்தை தரும். அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பலதலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த நமது மூதாதையர்களுக்கு போய் சேரும். அன்று பித்ரு கடன் கொடுப்பது முக்கியமாகும். இதனால் வறுமை நீங்கி வளமான வாழ்க்கை அமையும்.
அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை வணங்கி துதி பாடல் பாடி பூஜிக்க வேண்டும். இதனால் செல்வம் பெருகும். அன்று செய்யும் அதான, தர்மத்தால் மரண பயம் நீங்கும். குழந்தைகளின் கல்வி மேம்படும்.
மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பரமசிவன், பார்வதி, அன்னபூரணி, கலைமகள், குபேரன் ஆகியோரை வணங்கி நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும்.
திருமாலை நெல், அரிசியுடன் வணங்கி விரதம் இருக்க வேண்டும்.
நதிகளில் நீராடுவது விசே‌ஷம்.
முக்தி தரும்.
விசிறி, அரிசி, உப்பு, நெய், சர்க்கரை, காய்கறிகள், புளி, பழம் ஆகியவற்றை தானமாக வழங்கலாம்.
தனி சந்நிதி உள்ள தஞ்சாவூர் தஞ்ச புரீஸ்வரர் ஆலயம் சென்று குபேரரை வழி பட்டு முக்தி பெறுங்கள்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விளாங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ஈசன் அருளால் சனீஸ்வரர் ஊனம் நீங்கப் பெற்றார். இவரை அட்சய திருதியை அன்று வணங்கி சனீஸ்வரனுக்கு சந்தனகாப்பு செய்து வழிபட்டாலும், இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டாலும் செல்வச் செழிப்பு ஏற்படும்.
அட்சய திருதியை நாளில் குல தெய்வ வழிபாடு முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள்கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் விபத்து, அகால மரணத்தை தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால் வாழ்வு வளம் பெரும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பு கிடைக்கும்.
விரதம் இருப்பது எப்படி?
அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்து அதில் கோலம்போட்டு, ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போடவும். சொம்பில் நீர்நிரப்பி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு அதன்மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து கலசமாக தயார் செய்து பலகை மீது வைக்கவும்.
இதற்கு முன் கோலம் போட்டு நுனிவாழை இலையில் அரிசியை பரப்பி அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள் மற்றும் புதிதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனை முடிந்த பிறகு தூப, தீபம் காட்டி பால்பாயசம், நைநேத்தியம் செய்யலாம். இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
அன்று மாலை சிவாலயம் சென்று தரிசனம் செய்யலாம். அன்று ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம் பல மடங்கு வளர்ந்து புண்ணியத்தை கொடுக்கும். இந்நாளில் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். மகாலட்சுமி படம் முன்பு நெய்தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பின்னர் கலசத்துக்கு தீபாராதனை செய்துவிட்டு கலசத்தை வடக்கு பக்கமாக நகர்த்தி வைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த நாளில் திரவ உணவு மட்டும் உட்கொள்வது சிறப்பான பலனைத் தரும்.
பெருமை மிகுந்த பொன் நாள்
தர்மர், கவுரவர்களுடன் நடந்த சதுரங்க ஆட்டத்தில் நாட்டையும், தன்னையும், தன் தம்பிகளையும் இழந்ததுடன், மனைவி பாஞ்சாலியையும் சூதாடி இழந்தார். இதையடுத்து துரியோதனன், பாஞ்சாலியை சூதாட்டம் நடந்த இடத்திற்கு இழுத்து வந்து துகிலுரிக்க உத்தரவிட்டான். அந்த அவையில் பீஷ்மர், துரோணர் என பல அறிஞர்கள் இருந்தும், அந்த உத்தரவை தடுக்க யாருக்கும் தைரியமில்லை. துச்சாதனன், பாஞ்சாலியின் சேலையை பிடித்து இழுக்க, அவள் கிருஷ்ணனை நினைத்து மனமுருக வேண்டினாள்.
Image may contain: one or more people
இதையடுத்து கிருஷ்ணர் ‘அட்சய’ என்ற படி கையை காட்ட, பாஞ்சாலியின் சேலை வளர்ந்து கொண்டே சென்றது. துச்சாதனன், சேலையை இழுத்து இழுத்து அது முடிவுறாத நிலையில் மயங்கி கீழே விழுந்து விட்டான். கிருஷ்ணர், பாஞ்சாலியின் மானம் காத்த அன்றைய தினம் ‘அட்சய திருதியை’ நாள் ஆகும்.
இதே போல் தனது பால்ய நண்பர் குசேலனுக்கும், கிருஷ்ணர் அருள் புரிந்தார். வறுமையில் வாடிய குசேலர், கிருஷ்ணனை சந்திப்பதற்காக வந்திருந்தார். நண்பனைப் பார்க்கும் போது வெறும் கையுடன் செல்லக்கூடாது என்பதற்காக, பக்கத்து வீட்டில் இருந்து கொஞ்சம் அவல் கடன் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். குசேலரை பார்த்ததும், ஓடோடி வந்து அணைத்துக் கொண்ட கிருஷ்ணர், அவர் கொண்டு வந்த அவலை ‘அட்சய’ என்று உச்சரித்து வாயில் போட்டார். மறு வினாடியே குசேலரின் வீட்டில் செல்வம் குவிந்தது. குசேலர் செல்வம் பெற்ற திருநாளும் ‘அட்சய திருதியை’ தான்.

சின்ன சின்ன மருத்துவ குறிப்பு............

1. பல் வழி நீங்க சிறிது ஆப்பசோடாவை எடுத்து ஈறின் மீது அழுத்தி தடவவும்
2. காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஆப்பசோடாவை கலந்து வாய் கொப்பளித்தால்
பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்
3. தக்காளி சூப்புல் ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை போட்டு குடித்தால் புளித்த ஏப்பம் உடனே
சரியாகிவிடும்
4. வேர்க்குரு நீங்க ஒரு ஸ்பூன் ஆப்பசோடாவை சிறிது தண்ணீ கலந்து பூசினால் சரியாகிவிடும்
5. நல்லெண்ணெய் (அ) தேங்காயெண்ணெயில் ஏதாவது ஒரு எண்ணெயில் மிளகைப் போட்டு நன்கு
காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு, குளித்து
வாருங்கள். வாரம் ஒரு முறை போதும். தலைக்கனம், நாட்பட்ட வலி, நோய்கள், பாண்டு இருமல்,
தலைவலி, நீர்க்கோவை ஆகிய பிணிகள் பறந்தோடி விடும்.
6.வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை
பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
நீர்கடுப்பா
நீர்கடுப்பு ஏற்பட்ட சமயம்1 கிளஸ் தண்ணீரை சூடு செய்து 2 தேக்கரண்டி சீரகத்தை எடுத்து அதில் போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி ஆறவைத்து குடித்தால் உடனே நீர்கடுப்பு கேட்க்கும்.
நம்மால் செய்யக்கூடிய சில கை வைத்தியம் !!!!
1.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
2.இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்
3.சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை
அளிக்கும்.
4.தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5.அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
6.அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மைவராது .
7.மருதாணிப் பூவின் வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும் அரைத்துத் தலையில் தடவி ஊறிக குளித்தால், பேன் மறைந்து
8.கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்
9.பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும்.
ஆரோக்கிய டிப்ஸ் !!!
1.வண்டு கடித்த இடத்தில் வெங்காயத்தை வெட்டி சூடு பறக்க தேய்த்தால் வலி போய்விடும்.
2.மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.ரத்தம் சுத்தமடையும்.
3.துளசி இலையை தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் நீங்கி விடுமாம்.
4.மோரின் அவ்வப் போது முருங்கை இலை போட்டு குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் வராது.
5.இரவு உறக்கம் வராமல் தவிப்பவர்கள்,ஒரு கப் சூடான பாலில் சிறிதளவு தேன் கலந்து பருக தூக்கம் வரும்.

Thursday, April 27, 2017

சிக்கினார் வண்டு முருகன்...!!!

கர்நாடகாவில் ப.சிதம்பரத்தின் உறவினர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு.. கல்யாண கோஷ்டி வேஷத்தில் நுழைந்தனர்
கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகள், தொழில் நிறுவனங்களில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதி, மாவட்டமான குடகு மாவட்டத்தின், குஷால்நகர் பகுதியில் எஸ்.எல்.என் குரூப் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனத்தில் 11 கிளைகளிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டுகளை நடத்தியுள்ளனர்.
இந்த குரூப், விஸ்வநாதன் மற்றும் சாத்தப்பன் என்பவர்களால் நடத்தப்படுகிறது. இவர்கள், சிதம்பரத்தின் சகோதரி மகன்களாகும்.
எஸ்.எல்.என் குரூப் நிறுவனங்கள் காபி யூனிட், மரம் அறுவை தொழிற்சாலை, பெட்டோல் பங்க், ஆடம்பர ஹோட்டல், ரிசார்ட்டுகளை நடத்தி வருகிறது.
மைசூரிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வாடகை கார்கள் மூலம் அதிகாரிகள் குடகு மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.
யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக திருமண கோஷ்டி வாகனம் போல கார்களில் மலர் அலங்காரம் செய்ததோடு...
Image may contain: 1 person, closeup
திரேஷ்-கஜோல் என்ற பெயரில், போலியாக மணமகன்-மணமகள் பெயர்களையும் காரில் ஒட்டிக்கொண்டு அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.
குடகு மாவட்ட காவல்துறைக்கு தெரிந்தால் கூட விஷயம் லீக் ஆகிவிடும் என்பதால் மைசூர் மாவட்ட போலீசாரை பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர் ஐ.டி., அதிகாரிகள்.
சுமார் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த ரெய்டுகளை நடத்தியுள்ளனர்.
ரெய்டின்போது பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் அதிகாரிகள் அண்மையில் ரெய்டு நடத்தியிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக இந்த ரெய்டு நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

'என்னது சிவாஜி செத்துட்டாரா?'

அக்யூஸ்ட் தினகரன் கட்சி சின்னத்தை வாங்க லஞ்சம் கொடுக்க முற்பட்டது வீடியோ ஆடியோ டேப் ஆதாரங்கள் மூலமாக உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
முதலில் 'சுகேஷா யாரது? டீவியில் பார்த்துதான் நானே தெரிந்து கொண்டேன்' என்று 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்ற ரேஞ்சுக்கு பீலா விட்ட தினகரன் விசாரணையில் 'கவனிச்ச' பிறகு சுகேஷை நீதிபதி என்று நினைத்து பேசினேன் என்று படு கேவலமாக மழுப்பி பின் டேப் ஆதாரங்களை போட்டுக் காட்டியபின் லஞ்சம் கொடுத்ததை ஒத்துக்கொண்டான் குற்றவாளி.
இதற்கிடையில் கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் , FIR போடபட்ட முறை சரியில்லை , விசாரணை முறை சரியில்லை என்று நொட்டை சொல்பவர்கள் தினகரனின் ஜால்ராக்களாக இருப்பது திண்ணம்.
முறைகளில் தவறு இருக்கலாம் ஆனால் குற்றவாளி என்பது நிரூபிக்கப்படவே இத்தனை பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.
75 நாள் சிகிச்சையையே மறைத்த தில்லாலங்கடி, சிசிடிவி யே இல்லாமல் செய்த நரித் தந்திரம், பெரா கேசில் தப்பிக்க தான் இந்தியனே அல்ல தான் சிங்கப்பூர் சிட்டிசன் என்ற மொள்ளமாரித்தனம் இதெல்லாம் கிரிமனல் புத்தி என்பது ரத்தம் நாடி நரம்புகளில் ஊறிய ஒருத்தரால்தான் சாத்தியம்.
இப்பேர்ப்பட்ட தில்லாங்கடியை சிக்க வைக்க வியூகம் அமைக்கப்பட்ட ராஜ தந்திரம் தேவைதான்.
முறையாக விசாரிக்கப்பட்டிருந்தால் நம் நாட்டின் அவலமான சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்து வழக்கை இன்னுமொரு 20 வருடங்களுக்கு இழுத்தடித்திருப்பான் இந்த கேடி.
கழகமும் நாசமாய் போய் தமிழகம் மொத்தமும் சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட்டிருக்கும்.
மக்கள் விரோத அராஜக அடக்குமுறை ஆட்சி நடந்திருக்கும்.
இவன் கைகளில் கழகம் இருந்திருந்தால், அஇஅதிமுக என்ற மாபெரும் பிரம்மாண்டம் 4 வருடங்களுக்கு பிறகு அஸ்திவாரமே இல்லாமல் போயிருக்கும்.
4 வருடங்கள் பதவியை தக்க வைத்து சம்பாதித்து விட்டு செட்டில் ஆகிவிடலாம் கழகமானது மண்ணாவது என்ற மன நிலையில் புரட்சி தலைவர்களின் கனவை அழிக்க துணிந்தவர்கள் தான் தினகரனை இன்னும் தூக்கி பிடித்து ஆதரிக்கின்றனர்.

மணல் சுரண்டப்படுகிறது.

தமிழகத்திலிருந்து ரயில் மூலம் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படும் மணல் (ஒளிப்படம்)
கருவறுக்கப்படும் கொள்ளிடம் ஆறு - (காணொளி)
Image may contain: outdoor
காவிரி, பாலாறு என தமிழகத்திலுள்ள எல்லா ஆற்றிலும் மணல் சுரண்டப்படுகிறது.
இப்படி எடுத்தால் ஆற்றிலிருந்து ஏரி குளம் குட்டைகளுக்கு கால்வாயில் எப்படி தண்ணீர் செல்லும்.
அருகில் உள்ள மாநிலங்கள் அவர்கள் ஆற்று மணலை பாதுகாப்பாக காப்பாற்றுகிறார்கள். நம் மாநில அரசோ ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும், ஆந்திராவிற்கும், மாலத்தீவிற்கும் பிற வெளிநாடுகளுக்கும் லாரியில், ரயிலில், கப்பலில் பேராசை பிடித்த அரசியல், அதிகாரவர்க்கத்தினால் விற்று காசாக்கி கொள்ளையடிக்கப்படுகிறது.
JCB வாகனம் பயன்படுத்தக்கூடாது
ஒரு மீட்டர் மட்டுமே மணல் எடுக்கவேண்டும்
காலை முதல் மாலைவரை மட்டுமே எடுக்கவேண்டும்
என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக இயற்கை வளங்கள் வரைமுறையின்றி 40, 50 அடி ஆழம்வரை சுரண்டி அழிக்கப்படுகிறது.
எல்லா மணலும் சுரண்டப்பட்டபின் தமிழக அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகளே எழுதிவைத்துக்கொள்ளுங்கள்
அண்டை மாநிலங்களிலிருந்து ஒரு பிடி மணல்கூட உங்களுக்கு கிடைக்காது.

நம்ம தமிழக அரசு என்ன புடிங்கிட்ருக்குனு பாருங்க பாஸ்....



1156 கோடி பில் பாக்கி! - நள்ளிரவில் பிடிங்கப்பட்ட 'பீஸ்'!*
சென்னையை அடுத்த வல்லூரில் தலா 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்று அலகுகளில் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழகத்தின் பங்காக, 1063 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு நவம்பர் முதல் கடந்த மார்ச் 17-ம் தேதி வரை பெற்ற மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை செலுத்தவில்லை. பாக்கித் தொகை 1156 கோடியே 5 லட்சமாக உயர்ந்து நிற்கிறது.
ஏப்.26-ம் தேதிக்குள் இந்த பாக்கித் தொகையை கட்டவில்லை என்றால், கரண்ட் கட் செய்யப்படும் என்று அனல் மின் நிலையம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனாலும், குறித்த காலத்திற்குள் பாக்கித் தொகையை கட்டத் தவறிவிட்டதாம் மின்சார வாரியம். இதனால் 26-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து சென்னைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் அதிரடியாக நிறுத்தப்பட்டதாகத் தகவல்.
சென்னையின் 80% பகுதிகள் இருளில் மூழ்கியது. புழுக்கம் காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வயதானோர், குழந்தைகளின் பாடு தான் மிகவும் பரிதாபம்.
தற்போது, பாக்கி கட்டண தொகையை எப்படி செலுத்துவது, மின்சாரத்தை உடனே எப்படி பெறுவது என்று மின்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் அண்ணாசாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நடந்து வருகிறது.

"DEDICATED TO ALL MARRIED COUPLES"

திரு. கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..?
தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..
ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..
காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு
அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு
அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்
கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..
கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது
"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்.."எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு.."சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது
"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.."இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...
மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
No automatic alt text available.
கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..
மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி
BedRoom இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது..கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது..
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..
முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது
முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..
ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்
இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..
"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..
வாழ்க இல்லறம் !

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).
9. நீயும் கடவுள்,
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,
பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,
மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,
கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பகவதம்,
அரசியலுக்கு
👉அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு
👉வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.
11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
13. முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.
14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்...

இருக்கு ஆனா இல்லை..

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?
தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்! இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.
இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..
விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.
சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.
இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.

Wednesday, April 26, 2017

செந்தில் பாலாஜி மூலம் ஆட்சிக்கு செக்- திட்டத்தில் தி.மு.க....!

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் இணைப்பதற்கு ஒரு புறம் முயற்சிகள் நடைபெற்று வரும் நேரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து அ.தி.மு.க தரப்பிற்கு அடுத்த ஷாக் கொடுக்க தி.மு.க திட்டமிட்டு வருகிறது.....
இரும்புக் கோட்டையாக சித்தரிக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஆனால், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அந்த கட்சியின் அடித்தளமே ஆட்டம் காண துவங்கிவிட்டது. அ.தி.மு.க-வில் இருந்த கட்டுக்கோப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைய ஆரம்பித்தது..
சசிகலா குடும்பத்தை பார்த்து பவ்வியம் காட்டியவர்கள், அந்த குடும்பத்திற்கு எதிராகவே போர்க்கொடி துாக்கியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் மத்திய அரசு, ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.கவை தங்களது கைப்பாவையாக மாற்றுவதற்கு திட்டமிட்டது. அ.தி.மு.க இரண்டு அணிகளாக உடைந்து ஆட்சிக்கே ஆபத்தும் வந்தது. ஒரு வழியாக எம்.எல்.ஏ-க்களை சரிகட்டி ஆட்சியை தற்காலிகமாக காப்பாற்றினார்கள் சசிகலா தரப்பினர்.
கரணம் தப்பினால் மரணம் என்பது போல 122 எம்.எல்.ஏக்களோடு ஆட்சியை காப்பாற்றியது சசிகலா தரப்பு......
முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். ஆட்சியின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும் என்று நினைத்த தி.மு.கவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் ஆட்சியிலோ, முதல்வருக்கு கட்டுப்படாத அமைச்சர்களும், அமைச்சர்களை உதாசினப்படுத்தும் எம்.எல்.ஏ-க்கள் என கட்சியும் ஆட்சியும் திண்டாடி வந்தன. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே அரசு அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.....
அந்த விவகாரம் முடிந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அடுத்த அதிரடியை கிளம்பியுள்ளார். இதை தங்களுக்கு சாதகமாக்கி வளைக்க தி.மு.க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
அ.தி.மு.க வின் இரண்டு அணிகளும் இணைவதிலே பல்வேறு கருத்து வேறுபாடுகள் தொடர்ச்சியாக இருந்துவரும் நிலையில் ஒவ்வொரு அமைச்சரும், தங்கள் கைவசம் எம்.எல்.ஏக்களை வைத்துக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால், செந்தில் பாலாஜி பவர்ஃபுல் அமைச்சராக பவனி வந்த நேரத்திலேயே தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி இருந்தார். .....
ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களில் ஐந்து பேர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களாம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும், தம்பிதுரை மீதும் மீடியாவில் குற்றச்சாட்டு கூறுவதற்கு முன்பே முதல்வரிடம் செந்தில் பாலாஜி சொல்லியுள்ளார். ஆனால், முதல்வர் தரப்பில் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். அதனால் இப்போது இரண்டு அணியிலும் இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி என்கிறார்கள்.....
செந்தில் பாலாஜியின் மனவருத்தத்தை தி.மு.க தரப்பு மோப்பம் பிடித்துள்ளது. அதன்பிறகு தான் செந்தில் பாலாஜியை தங்கள் பக்கம் இழுக்க முடியுமா என்ற ஆலோசனைக்கு வந்துள்ளது தி.மு.க தமைமை. .....
யாரை வைத்து இந்த பேச்சுவார்தை நடத்துவது என்று ஆரம்பத்தில் யோசித்த தி.மு.க தலைமை, இறுதியாக தி.மு.கவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரிடம் இந்த அசைன்மென்ட்டை கொடுத்துள்ளது. இவரும், செந்தில் பாலாஜியும் நண்பர்கள் என்பது ஸ்டாலினுக்கு தெரியும் என்பதால் அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவரும், செந்தில் பாலாஜியிடம் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. ஐந்து எம்.எல்.ஏக்களை மட்டும் இப்போது அழைத்து வாருங்கள் என்று தி.மு.க தரப்பில் கேட்டுள்ளனர்.....
122 எம்.எல்.ஏக்களில் ஐந்து எம்.எல்.ஏக்கள் வந்தால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று தி.மு.க திட்டமிடுகிறது.
தினகரனுக்கு ஆதரவான சில எம்.எல்.ஏக்கள் தினகரனை ஒதுக்கி வைத்த மனவருத்தில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள தி.மு.க திட்டமிடுகிறது. இந்த நேரத்தில் செந்தில் பாலாஜியை வைத்து போர்க்கொடி துாக்கினால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் வெளியே வந்துவிடுவார்கள் என்று கணக்கு போடுகிறார்கள் தி.மு.கவினர்....
செந்தில் பாலாஜி போர்க்கொடி தூக்கி அ.தி.மு.கவில் இருந்து வெளியேறினால் அவரை தி.மு.க அரவணைத்து கொள்ளத் தயாராக இருக்கிறதாம். கரூர் மாவட்டத்தில் கே.சி.பழனிச்சாமியை தவிற சொல்லிக்கொள்ளும்படி தி.மு.கவிற்கு ஆட்கள் இல்லை என்பதால் செந்தில் பாலாஜி வந்தால் ஏற்றுக்கொள்ள நினைக்கிறது. செந்தில் பாலாஜியிடம் இந்த டீலிங் குறித்து பேசப்பட்டுள்ளதாம் ஆனால் முடிவு சொல்லாமல் செந்தில் பாலாஜி இழுக்கிறார் என்கிறார்கள் தி.மு.க வினர். ....
அ.தி.மு.க-வின் தலைமை மீதான வருத்தத்தை வெளியே காட்டிவிட்டதால் செந்தில்பாலாஜி எப்படியும் தங்கள் பக்கம் வந்துவிடுவார் என்று பலமாக நம்புகிறது தி.மு.க.
இன்னும் சில தினங்களில் மீடியாவில் அதிகமாக அடிபடும் நபராக செந்தில் பாலாஜி இருக்கப் போகிறார் என்பது தான் கடைசி கட்ட தகவல் ......

உண்மையே சொ ன்னான்............

பீதியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அம்மா அணி எம்எல்ஏக்கள்!!!
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப் பட்டு உள்ள தினகரன் கைது செய்யப்பட்டதன் முக்கிய ஆதாரம் அவரின் செல்போன் உரையாடல் மற்றும் வாட்ஸ் ஆப் உரையாடல் தான் முதலில் இது எனது குரல் அல்ல என்று மறுத்த தினகரனை டெல்லி போலீசார் "உண்மையை ஓத்துக்கொண்டால் இதோடு முடிந்து விடும் இல்லை எனில் தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரிடமும் உரையாடியது முதல் கூவத்தூர், சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபித்தது வரை நடந்த பேரம் பற்றிய உரையாடல் வரை வெளியிட வேண்டி வரும்" என்று பயம் காட்டியது அலறிய தினகரன் தனது முழு அரசியல் வாழ்க்கை அஸ்தனமாகி விடுமோ என்ற பயத்தில் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன!!
Image may contain: 1 person, closeup

மிகவும் சீரியசான பதிவு இது...

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கான புவியியல் ரீதியான ஆய்வுகளை மெட்ரோ கட்டுமான நிறுவனம் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்து இருந்தது..
நாசா உதவியுடன் புவியில் ஏற்படும் புயல், மழை, சுனாமி ஆகியவற்றை சாட்டிலைட் மூலம் துல்லியமாக அறிந்து சொல்லும் அந்நிறுவனம்..
இந்த பள்ளத்திற்கான காரணம் பூமியின் அடிப்புறத்தில் உள்ள பாறைத் தட்டுகள் விலகியதால் ஏற்பட்டது என்பதும்;
இது.. திடீர் என நிகழ்ந்தது அல்ல 
ஒரிரு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பலத்த அதிர்வு அல்லது 
ஒரு சிறு பூகம்பத்தின் விளைவே எனவும் முதலில் கண்டு பிடித்தது.. இந்தியாவின் கிழக்கு திசையில் இந்த அதிர்வு ஏற்பட்டதாக 
அடுத்து கண்டு பிடித்தது...... இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட பூகம்பம்தான் சுனாமியாக மாறியது என்பதால் அதிர்ந்த அந்நிறுவனம்
மீண்டும் சுனாமி வருமோ என அச்சத்துடன் ஆராய்ந்த போது மேலும் திடுக்கிட்டது.....
அந்த அதிர்வு சென்னையிலேயே ஏற்பட்டது என்பதை கண்டு பிடித்தது......
அது எந்த இடம் என கூகுள் உதவியுடன் துல்லியமாக கண்டுபிடித்து அதிர்ச்சியில் உறைந்தது..! 
ஆம் அது மெரினா கடற்கரை.!
அன்று அங்கு பூமிக்கு கீழே
3 முறை பூகம்பம் அடுத்தடுத்த 
சில விநாடிகளில் நடந்திருப்பது
தெரிய வந்தது..
விஞ்ஞானிகள் பரபரப்பாக
விடை தேடியதில்........
அன்று தான் 'அம்மா சமாதி'யில் "சின்ன அம்மா" 3 முறை சத்தியம் செய்தார்கள் எனக் கண்டறிந்து....
அந்த நேரத்தை ஆராய்ந்தபோது
பூகம்ப மையத்தில் உள்ள
ரிக்டர் "அடி" ஸ்கோலில்
சின்ன அம்மா அறைந்த...
அதே நேரத்தில் 9.4 என்னும்
ரிக்டர் அளவில் 2 முறையும்,
10.5 என்னும் அளவில் கடைசி முறையும்,
அதிர்வு பதிவாகியிருந்தது.....!
அந்த அதிர்வால் விலகிய
பாறைத்திட்டுகள்தான்
மெல்ல மையம்கொண்டு
விலகி விலகி போயஸ் கார்டன் நோக்கி செல்லும் வழியில்
அண்ணா சாலையில்
பள்ளம் ஏற்படுத்தி
அமெரிக்க தூதகரம்வரை பாதிப்புக்குள்ளாக்கியது....... அங்கிருந்து லெஃப்ட் எடுத்தால் போயஸ் கார்டன் வரும்..
'சிங்கம் சூர்யா'கூட
ஒன்றரை டன் வெயிட்டில் தான் அறைவார்....
ஆனால் "சின்ன அம்மா"
10 ரிக்டர் வெயிட்டில் அறைவார் என
அவர் பவரை தெரிந்து கொண்ட நாசாவே அலறி அதிர்ந்து இருக்கிறது..
இது எப்படி இருக்கு.....
வெய்யில் அதிகமா இருக்கு.....
என்னத்த செய்ய.................. 😭😭

CIBIL சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

❁ கடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது.
வீடு வாங்க ஹோம் லோன், 
கார் வாங்க கார் லோன்,
வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என அத்தனைக்கும் கடன்தான். இந்தக் கடன்களுக்காக விண்ணப்பிக்கும் போது முதலில் கேட்கப்படுவது CIBIL சிபில் ஸ்கோர். CIBIL சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால்தான் ஒருவருக்கு உடனடியாகக் கடன் கிடைக்கும். எனவே, CIBIL சிபில் ஸ்கோரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

CIBIL சிபில் என்றால் என்ன?
❁ சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம். CIBIL சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை, கடன் வழங்கிய வங்கிகள் CIBIL சிபில் அமைப்புக்கு தெரிவிக்கும். இந்த தகவல்களை சிபில் அமைப்பு சேமித்து வைக்கும். இதனால் கடன் வாங்குபவர்கள் சரியாக பணத்தை திரும்ப செலுத்துகிறார்களா என்பதைத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.
ஏன் CIBIL சிபில் வேண்டும்...?
❁ கடன் வாங்கி தனது தேவைகளை நிறைவேற்றுபவர்கள் பெற்ற கடனை எப்படித் திரும்பச் செலுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் தான் அடுத்து அவர்களுக்கு கடன் கிடைக்கும். வாங்கிய கடனை ஒருவர் சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், வங்கியிலோ அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே கடன் தர வங்கிகளுக்கு உதவுவதற்காக இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் ஸ்கோர்!
❁ கடனுக்கான இஎம்ஐ தொகையை சரியான தேதியில் திரும்பச் செலுத்துவதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும். குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான இஎம்ஐ தொகையை ஒருமுறை சரியாகச் செலுத்தவில்லை என்றால்கூட அதனுடைய பாதிப்பு கிரெடிட் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.
கடனின் கால அளவும், தொகையும்!
❁ கடன் கால அளவின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, வீட்டுக் கடன் நீண்ட காலத்தில் இருக்கும். எனவே, இஎம்ஐ தொகை குறைவாக இருக்கும். நீண்ட காலத்தில் வருமானம் உயரும்போது எளிதாகக் கடனை அடைக்க முடியும்.
❁ கடன் தொகையின் அளவானது கடன் வாங்குபவரின் சம்பள தொகையில் அதிகபட்சம் 60 சதவீதம் அளவுக்கே இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் தொகை அதிகரிக்கும் போது, அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.
கடனை முடித்தபிறகு!
❁ வங்கிக் கடனை சரியாகத் திரும்பச் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது சிபில் ரிப்போர்ட் எடுப்பது. கடனை கட்டி முடித்த 3-6 மாதங்கள் கழித்து சிபில் ரிப்போர்ட்டுக்கு விண்ணப்பித்து சிபில் ஸ்கோர் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சில நேரங்களில் கடனை சரியாக கட்டாமல் அல்லது முன்கூட்டியே கட்டி விடுதல், இது போன்ற சமயத்தில் எல்லாம் உங்களின் சிபில் ரிப்போர்ட்டுக்குத் தேவையான தகவல்களை வங்கி சரியாக அளித்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.
❁ சிபில் ரிப்போர்ட்டில் உள்ள எந்தத் தகவலையும் தனிநபரால் மாற்ற இயலாது. கடனை முடித்தவுடன் சிபில் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்து, அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை வங்கியுடன் பேசி திருத்த முயற்சிக்கலாம்.

🎯🎯🎯 *இறைவன் வகுத்த நியதி:-*

*🌼ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று இறைவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்🌼*
*🌼அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.*
*🌼மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.*
*🌼""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.*
*"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்.* *இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன்.*
*அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.*
*🌼இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.*
*""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்...*
*🌼 உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.* *அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.*
*நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.* *அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து*
*விடுவோம்.* *அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்...*
*🌼 இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''*
*மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான்.* *ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.* *மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும்* *காட்டில் கிடைக்கும்*
*காய் கனிகள்தான்* *உணவு.* *மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்...*
*🌼அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.*
*முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.* *நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.*
*சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்...*
*🌼இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? அப்படியே செய்தார் அந்த மகானுபாவர். அவர் ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்...*
*🌼மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.*
*மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்...*
*🌼""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.* *அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.* *சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்.* *அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''*
*மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை.* *ஐந்தே நாட்களில் அவர் பசி*
*தாங்காமல் மாண்டுவிட்டார்...*
*🌼இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.* *ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்...*
*🌼முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார்.* *தான் சேகரித்த தரமான*
*காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்...*
*🌼மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.*
*இந்தக் கதையின் சம்பவம் வாழ்வியல் தத்துவத்தை* *நச்சென்று விளக்குகிறது...*
*🌼வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.*
*நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா,* *தீமை செய்கிறோமா என்று*
*இறைவன் கண்காணிப்புக் கேமரா* *வைத்துக் கொண்டு*
*பார்ப்பதில்லை.* *நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.*
*🌼நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. *சருகுகளையும் அழுகிய பழங்களையும் *போடுகிறீர்களா என்று யாருமே*
*கண்காணிப்பதில்லை...* *ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்...*
*🌼"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று இறைவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்...*
*🌼 விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும்...*
*🌼இது*
*மனிதன் இயற்றிய சட்டம் இல்லை;* *இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை. நன்றி.

Tuesday, April 25, 2017

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு :
பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.
தோடு :
மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.
கண்பார்வை திறன் கூடும் .
நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை
சரி செய்கிறது.
மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..
ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு
அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.
செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .
வங்கி :
கையின் புஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது
கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி
பதற்றம் , படபடப்பு, பயம்குறைகிறது .
மார்பக புற்று நோய் வருவது
தவிர்க்க படுவதாக ஆய்விலே
உறுதிபடுதப்பட்டிருக்கிறது
லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.
காரணம்
மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு
மேல்வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.
வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.
முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.
இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும்
நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.
வயிற்று பகுதிகள் வலுவடையும்.
மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்
பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும்நெருக்கமான
தொடர்பு உண்டு.
அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது
அது சம்மந்தமான நோய்கள்
குணமாகும் .
மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .
கொலுசு :
கல்லீரல்,
மண்ணீரல்,
பித்தப்பை,
சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,
வயிறு போன்ற
மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன்
கொலுசு.
கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.
*வாழ்க வளமுடன்*

#தினகரன் கைது:

இன்று(ஏப்.26) தினகரன் கோர்ட்டில் ஆஜர்; ஜாமீன் கிடைக்குமா?
இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன், இன்று(ஏப்.,26) மதியம் 2 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அங்கு அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
#தினகரன் கைது:
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக, 4- வது நாளாக, நடந்த விசாரணையின் முடிவில், தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவு, டில்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்த இடத்திலிருந்த காவல்நிலைய சிறையிலேயே தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டில்லியிலுள்ள திசஜாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தினகரன் நேரில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஒருவேளை போலீசார் தினகரனிடம் மேலும் விசாரணை நடத்த விரும்பினால் போலீஸ் காவலில் எடுக்கப்படுவார். போலீஸ் காவலில் எடுக்க நீதிபதி மறுத்தால், இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்கள்.
#ஜாமீன் கிடைக்குமா?
சுகேஷ் உடன் தொடர்பு உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்படுவார். முதல் குற்றவாளியாக சேர்க்கப்படும்பட்சத்தில் தினகரன் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். எனினும், தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது, அவர் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்படும் என தினகரன் வக்கீல் தெரிவித்துள்ளார்.
ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் குமாரிடமும் டில்லி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். இடைத்தரகர் சுகேஷிடம் விசாரணை நடத்துவதற்காக ஏப்.,28ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. தினகரனுடனான பேரத்தின் போது, தான் சந்தித்து பேசிய, ஷா பைஸல் என்பவரை, சுகேஷ் சந்தர் அடையாளம் கண்டு உறுதிப்படுத்தினார். இதையடுத்து, பைஸலிடமும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக பைஸல் இன்று டில்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராவார் என தெரிகிறது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...