Wednesday, April 19, 2017

சசிகலாவிடம் இருக்கும் பணம் அவ்வளவு எளிதாக அண்ணா திமுகாவை விட்டுவிடுமா என்ன?

என் அனுமானம் சரியாக இருந்தால், சசிகலா அணியில், சசிகலாவின் ஆளுமை எள்ளவும் நீங்கவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.
தினகரனும் அவரது குடும்பம் மட்டுமே ஒதுக்கி வைக்கபட்டுள்ளது என்றே எடுத்துக்கொள்ள முடியும் இப்போதைக்கு…
ஊகிக்க காரணமான சில விஷயங்கள்…
1. ஜெயக்குமார் ஊடக சந்திப்பின் பொழுது சசிகலா பெயரை கூறுவதை தவிர்த்தார். மக்களால் சசிகலாவையும் சேர்த்துதான் சொல்கிறார் என்று தப்பாக ஊகிக்க மட்டுமே முடிந்தது, அவர் வெளிப்படையாக சொல்லாமல் தவிர்த்ததாகவே தோன்றுகிறது.
2. அரசாங்கத்தை நடத்துபவர்கள் சசிகலாவால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் ( Hand Picked). எனவே சசிகலாவின் high command இன்றி இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை!
3. அப்படி ஒருவேளை இந்த முடிவை அவர்களாகவே எடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு கொடுத்து பார்த்தால் ……
4. தினகரன் எப்படி என்னையும் என் சித்தியையும் விலக்கலாம் என்று ஆட்டமாய் ஆடியிருப்பார், அவர் தரப்பு பண பலம் அப்படி, ஆனால் அவர் பெட்டி பாம்பாய் ஆணைக்கு தலை வணங்குகிறேன் என்ற ரீதியில் அடக்கி வாசிப்பதை பார்த்தால்……
5. சசிகலாவை பார்க்க சென்றவர், பார்க்க முடியாது போய்விட்டது முதல் கேள்விகுறி. அங்கு போகும் வழியிலேயே சித்தி ஆதரவு பறிபோயிருக்கலாம். பின் சசிகலா உத்தரவு முக்கிய அமைச்சர்களை வந்து அடைந்து இருக்கலாம். Perfect timings.
6. நேற்று தினகரனுக்கு வேண்டப்படும் எந்த MLAஉடனும் இந்த முடிவை சசிகலா அணி விவாதிக்கவில்லை
7. அதனால்தான் என்னவோ நேற்று தினகரனுக்கு வேண்டிய MLAக்களெல்லாம் கொதிப்படைந்து இது அநியாயம் அக்கிரமம் என்று பேட்டி கொடுத்துவிட்டு பின் இன்று உண்மை தெரிந்த உடன், கட்சி ஒன்றுபட்டால் நல்லது என்று அந்தர் பல்டி அடிக்க காரணமாக இருக்கலாம்
இது எல்லாம் ஊகமே! சந்தேகத்தின் பலனாய் தோன்றுகிற கேள்விகள், பதில்கள் தன்னால் போக போக வெளிப்படும். பார்க்கத்தானே போகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...