Saturday, April 15, 2017

தலைவன் மீதும் தலைவி மீதும் பாசம் கொண்ட தொண்டர்கள் இடிந்து போய் சோகத்துடன் வலம் வருகிறார்கள்.

ஒரு வலிமையான முதல்வர் இல்லை.
அரசு இயந்திரம் இயங்கவில்லை.
ஒரு இடைத்தேர்லுக்காக 89 கோடி செலவிட்டுள்ள அவலம்.
அமைச்சர்கள் வீடுகளில்
வருமானவரித் துறையினர் சோதனை.
எம்.எல்.ஏக்களும் இன்னதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தலைநகர் டெல்லியில் தமிழர்களின் மானத்தை காவு கொடுத்துக்கொண்டிருக்கும் கும்பலை அடக்க முடியாமல் ஆனால் ஆதரிக்கும் அரசு.
தொண்டர்கள் ஆதரவும் இல்லாமல்
மக்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே இறுமாப்போடு ஆளுங்கட்சி.
தலைவன் மீதும் தலைவி மீதும் பாசம் கொண்ட தொண்டர்கள் இடிந்து போய் சோகத்துடன் வலம் வருகிறார்கள்.
நாங்கள் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கௌரவமாக வலம் வந்த தொண்டர்கள் இன்று அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று உதட்டளவில் சொல்லிக்கொள்ள முடியாத சூழ்நிலை
கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் பொதுவாகவும் துணைப் பொதுவாகவும் அதிகாரத்தைச் செலுத்தும் துர்ப்பாக்கிய நிலை.
என்று மீளும் தமிழகம்?
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும்
சாஸ்திரங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...