Thursday, April 27, 2017

'என்னது சிவாஜி செத்துட்டாரா?'

அக்யூஸ்ட் தினகரன் கட்சி சின்னத்தை வாங்க லஞ்சம் கொடுக்க முற்பட்டது வீடியோ ஆடியோ டேப் ஆதாரங்கள் மூலமாக உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
முதலில் 'சுகேஷா யாரது? டீவியில் பார்த்துதான் நானே தெரிந்து கொண்டேன்' என்று 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்ற ரேஞ்சுக்கு பீலா விட்ட தினகரன் விசாரணையில் 'கவனிச்ச' பிறகு சுகேஷை நீதிபதி என்று நினைத்து பேசினேன் என்று படு கேவலமாக மழுப்பி பின் டேப் ஆதாரங்களை போட்டுக் காட்டியபின் லஞ்சம் கொடுத்ததை ஒத்துக்கொண்டான் குற்றவாளி.
இதற்கிடையில் கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் , FIR போடபட்ட முறை சரியில்லை , விசாரணை முறை சரியில்லை என்று நொட்டை சொல்பவர்கள் தினகரனின் ஜால்ராக்களாக இருப்பது திண்ணம்.
முறைகளில் தவறு இருக்கலாம் ஆனால் குற்றவாளி என்பது நிரூபிக்கப்படவே இத்தனை பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.
75 நாள் சிகிச்சையையே மறைத்த தில்லாலங்கடி, சிசிடிவி யே இல்லாமல் செய்த நரித் தந்திரம், பெரா கேசில் தப்பிக்க தான் இந்தியனே அல்ல தான் சிங்கப்பூர் சிட்டிசன் என்ற மொள்ளமாரித்தனம் இதெல்லாம் கிரிமனல் புத்தி என்பது ரத்தம் நாடி நரம்புகளில் ஊறிய ஒருத்தரால்தான் சாத்தியம்.
இப்பேர்ப்பட்ட தில்லாங்கடியை சிக்க வைக்க வியூகம் அமைக்கப்பட்ட ராஜ தந்திரம் தேவைதான்.
முறையாக விசாரிக்கப்பட்டிருந்தால் நம் நாட்டின் அவலமான சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்து வழக்கை இன்னுமொரு 20 வருடங்களுக்கு இழுத்தடித்திருப்பான் இந்த கேடி.
கழகமும் நாசமாய் போய் தமிழகம் மொத்தமும் சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட்டிருக்கும்.
மக்கள் விரோத அராஜக அடக்குமுறை ஆட்சி நடந்திருக்கும்.
இவன் கைகளில் கழகம் இருந்திருந்தால், அஇஅதிமுக என்ற மாபெரும் பிரம்மாண்டம் 4 வருடங்களுக்கு பிறகு அஸ்திவாரமே இல்லாமல் போயிருக்கும்.
4 வருடங்கள் பதவியை தக்க வைத்து சம்பாதித்து விட்டு செட்டில் ஆகிவிடலாம் கழகமானது மண்ணாவது என்ற மன நிலையில் புரட்சி தலைவர்களின் கனவை அழிக்க துணிந்தவர்கள் தான் தினகரனை இன்னும் தூக்கி பிடித்து ஆதரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...