ஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்தர் அறிவுரை கேட்க வந்திருந்தார். அவர் தயங்கித் தயங்கி கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை! என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! எப்பொழுதும் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை! எதிர்த்துப் பேசறா… எரிஞ்சு விழறா… கோபப்படறா… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்”.
கபீர்தாசர் பார்த்தார். “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்?”, யோசனை செய்து பதில் சொல்கிறேன்! என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து கொண்டுவந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். அந்த பெரிய நூல்கண்டு சிக்கலாயிருந்தது. அதனாலே கபீர்தாசர் அதில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தார். நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. மனைவியிடம் விளக்கை எடுத்துக் கொண்டுவா என்றார். அந்த அம்மாவும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டுவந்து அவர் பக்கத்திலே வைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். “இவ்வளவு வெளிச்சத்தில் விளக்கு எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை”.
சிறிது நேரம் கழித்து அந்த அம்மா இரண்டு டம்ளர் பாலைக் கொண்டுவந்து அவர்கள் முன்னால் வைத்தார்கள். இரண்டு பேரும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது… பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அம்மா பாலில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பைப் போட்டு இருந்தார்கள். வந்தவர், சரின்னு கபீர்தாசர் முகத்தைக் கவனித்தார். அவர் முகத்திலே எந்த வித்தியாசமும் இல்லை. அவர் அதை அப்படியே குடித்துவிட்டார். அந்த அம்மா, “பாலுக்குச் சர்க்கரை போதுமா?” என்று கேட்கிறார்கள்! அதற்கு கபீர்தாசர், “போதும்! இனிப்புச் சரியாக இருக்கு!” என்கிறார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதிரில் இருந்தவர்,
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதிரில் இருந்தவர்,
“இன்னும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லையே!” என்று கபீர்தாசரைப் பார்த்து விளவினார். அதற்கு கபீர்தாசர், “நான் இப்பொழுது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில் என்றார்”. யஜீர் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? “எந்தக் குடும்பத்திலே கணவனும் மனைவியும் ஒருத்தர் குற்றத்தை இன்னொருத்தர் பார்க்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் பூலோக கைலாசம்” என்றார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கபீர் வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு விளக்கை கேட்டபோது, அவர் மனைவி ஏதும் கேட்காமல் விளக்கை கொண்டு வந்து வைத்தார். கபீரின் மனைவி பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பை போட்டிருந்த போது, கபீர் ஏதும் கூறாமல் அதைக் குடித்தார். இதுவே இல்லற இன்பம்.
கபிலர்… நானும் என் மனைவியும் குடும்பத்திலே ஒருவரை ஒருவர் ரொம்ப “விட்டுக் கொடுத்து” நடந்து கொள்வோம். அதனால் எங்களுக்குள் மனஸ்தாபம் வருவதே இல்லை.

“இதுவே இல்லறம் இன்பம்”
No comments:
Post a Comment