❁ கடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது.
வீடு வாங்க ஹோம் லோன்,
கார் வாங்க கார் லோன்,
வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என அத்தனைக்கும் கடன்தான். இந்தக் கடன்களுக்காக விண்ணப்பிக்கும் போது முதலில் கேட்கப்படுவது CIBIL சிபில் ஸ்கோர். CIBIL சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால்தான் ஒருவருக்கு உடனடியாகக் கடன் கிடைக்கும். எனவே, CIBIL சிபில் ஸ்கோரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
வீடு வாங்க ஹோம் லோன்,
கார் வாங்க கார் லோன்,
வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என அத்தனைக்கும் கடன்தான். இந்தக் கடன்களுக்காக விண்ணப்பிக்கும் போது முதலில் கேட்கப்படுவது CIBIL சிபில் ஸ்கோர். CIBIL சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால்தான் ஒருவருக்கு உடனடியாகக் கடன் கிடைக்கும். எனவே, CIBIL சிபில் ஸ்கோரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
CIBIL சிபில் என்றால் என்ன?
❁ சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம். CIBIL சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை, கடன் வழங்கிய வங்கிகள் CIBIL சிபில் அமைப்புக்கு தெரிவிக்கும். இந்த தகவல்களை சிபில் அமைப்பு சேமித்து வைக்கும். இதனால் கடன் வாங்குபவர்கள் சரியாக பணத்தை திரும்ப செலுத்துகிறார்களா என்பதைத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.
ஏன் CIBIL சிபில் வேண்டும்...?
❁ கடன் வாங்கி தனது தேவைகளை நிறைவேற்றுபவர்கள் பெற்ற கடனை எப்படித் திரும்பச் செலுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் தான் அடுத்து அவர்களுக்கு கடன் கிடைக்கும். வாங்கிய கடனை ஒருவர் சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், வங்கியிலோ அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே கடன் தர வங்கிகளுக்கு உதவுவதற்காக இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் ஸ்கோர்!
❁ கடனுக்கான இஎம்ஐ தொகையை சரியான தேதியில் திரும்பச் செலுத்துவதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும். குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான இஎம்ஐ தொகையை ஒருமுறை சரியாகச் செலுத்தவில்லை என்றால்கூட அதனுடைய பாதிப்பு கிரெடிட் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.
கடனின் கால அளவும், தொகையும்!
❁ கடன் கால அளவின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, வீட்டுக் கடன் நீண்ட காலத்தில் இருக்கும். எனவே, இஎம்ஐ தொகை குறைவாக இருக்கும். நீண்ட காலத்தில் வருமானம் உயரும்போது எளிதாகக் கடனை அடைக்க முடியும்.
❁ கடன் தொகையின் அளவானது கடன் வாங்குபவரின் சம்பள தொகையில் அதிகபட்சம் 60 சதவீதம் அளவுக்கே இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் தொகை அதிகரிக்கும் போது, அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.
கடனை முடித்தபிறகு!
❁ வங்கிக் கடனை சரியாகத் திரும்பச் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது சிபில் ரிப்போர்ட் எடுப்பது. கடனை கட்டி முடித்த 3-6 மாதங்கள் கழித்து சிபில் ரிப்போர்ட்டுக்கு விண்ணப்பித்து சிபில் ஸ்கோர் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சில நேரங்களில் கடனை சரியாக கட்டாமல் அல்லது முன்கூட்டியே கட்டி விடுதல், இது போன்ற சமயத்தில் எல்லாம் உங்களின் சிபில் ரிப்போர்ட்டுக்குத் தேவையான தகவல்களை வங்கி சரியாக அளித்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.
❁ சிபில் ரிப்போர்ட்டில் உள்ள எந்தத் தகவலையும் தனிநபரால் மாற்ற இயலாது. கடனை முடித்தவுடன் சிபில் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்து, அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை வங்கியுடன் பேசி திருத்த முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment