Thursday, April 27, 2017

நம்ம தமிழக அரசு என்ன புடிங்கிட்ருக்குனு பாருங்க பாஸ்....



1156 கோடி பில் பாக்கி! - நள்ளிரவில் பிடிங்கப்பட்ட 'பீஸ்'!*
சென்னையை அடுத்த வல்லூரில் தலா 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்று அலகுகளில் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழகத்தின் பங்காக, 1063 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு நவம்பர் முதல் கடந்த மார்ச் 17-ம் தேதி வரை பெற்ற மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை செலுத்தவில்லை. பாக்கித் தொகை 1156 கோடியே 5 லட்சமாக உயர்ந்து நிற்கிறது.
ஏப்.26-ம் தேதிக்குள் இந்த பாக்கித் தொகையை கட்டவில்லை என்றால், கரண்ட் கட் செய்யப்படும் என்று அனல் மின் நிலையம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனாலும், குறித்த காலத்திற்குள் பாக்கித் தொகையை கட்டத் தவறிவிட்டதாம் மின்சார வாரியம். இதனால் 26-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து சென்னைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் அதிரடியாக நிறுத்தப்பட்டதாகத் தகவல்.
சென்னையின் 80% பகுதிகள் இருளில் மூழ்கியது. புழுக்கம் காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வயதானோர், குழந்தைகளின் பாடு தான் மிகவும் பரிதாபம்.
தற்போது, பாக்கி கட்டண தொகையை எப்படி செலுத்துவது, மின்சாரத்தை உடனே எப்படி பெறுவது என்று மின்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் அண்ணாசாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...