Saturday, April 22, 2017

பிரபல விஞ்ஞானியுமான செல்லூர் ராஜூ அவர்கள் ............

வைகை அணை நீர் ஆவியாகாமல் இருக்க அதன்மேல் தெர்மாகோலை கொண்டு மூடும் திட்டத்தை அமைச்சரும்,பிரபல விஞ்ஞானியுமான செல்லூர் ராஜூ அவர்கள் அமல்படுத்த, அந்த தெர்மாகோல்கள் கொஞ்சமும் அந்த அறிவியல் விஞ்ஞான அமைச்சரின் திட்டத்தை மதிக்காமல் கரை ஒதுங்கியது ஒரு மாபெரும் வரலாற்று சோகம், மறைந்த புரட்சித்தலைவருக்கும்,தலைவிக்கும் விசுவாசமில்லா தெர்மாகோல்கள் செய்த துரோகம் அது,
போனவாரம் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தால் அண்ணாசாலையில் விழுந்த பெரும்பள்ளத்தை கண்டு தானே நேரடியாக களமிறங்கிய பிரபல விஞ்ஞானியும்,அமைச்சருமான ஜெயக்குமார் வெயிலில் பாலைவனம் போல காய்ந்து கொண்டிருக்கிற சென்னை மண்ணின் ஈரப்பதத்தால் தான் இந்த பெரியபள்ளம் ஏற்ப்பட்டது என அவர் அளித்த விஞ்ஞான விளக்கத்தை கேட்டு அறிவியல் உலகம் அரண்டுபோய் இப்போதுதான் தங்கள் சகஜ நிலைக்கு திரும்பின.அதற்குள் அடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள்,
மாண்புமிகு புரட்சித்தலைவியின் புகழுக்கு மேல் தங்கள் புகழ் ஒரு சொட்டுக்கூட மேலே வந்துவிடக்கூடாது என தங்கள் அறிவுத்திறனை அடக்கி வாசித்து தங்கள் தியாக உணர்வை மறைத்த இந்த அறிவியல் விஞ்ஞானிகளின் தியாகத்தை ஜிப்ரீஷ் மொழியில் எழுதி நாசா உதவியுடன் விண்வெளியில் வைத்தால் வருங்காலத்தில் ஏதாவது இந்த பால்வெளியில் வாழ சாத்தியமுள்ள ஏலியன்களுக்கு உதவலாம் என்பது இந்த கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்தகுடி தமிழனின் சிறு வேண்டுகோள்.
உலகெங்கும் விஞ்ஞானிகள் அரசியல்வாதிகள் ஆவது பற்றி கேள்விப்பட்டிருக்கும் இத்தமிழ்சமூகம்,மொத்த அமைச்சர்களும் அறிவியல் விஞ்ஞானிகளாவே இருப்பது தமிழகம் செய்த பெரும்பேறு ஆகும்.
கடைசியாக தமிழகத்தில் நிலவும் கடுமையான வெயிலை கட்டுப்படுத்த நம் தமிழக விஞ்ஞான அமைச்சரவை சூரியனுக்கு குளிர்கண்ணாடி அணிவிக்கும் மாபெரும் அறிவியல் விஞ்ஞான திட்டத்தை அமல்படுத்த தீவிர விவாதத்தில் இருப்பதாகவும் தகவல். இதனை கண்காணிக்க இரு அறிவிற் சிறந்த குழுக்களை இன்று அமைத்திருப்பதாகவும் கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...