Monday, April 10, 2017

*ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில நல்லொழுக்கங்கள்...

1; எப்போதுமே சட்டை பையில் ஒரு பேனா இருப்பது மிகவும் நல்லது.
2; ஒருநாள் உடுத்திய உடையை மறுநாளும் உடுத்துவதை தவிர்க்கலாம்,
3; சட்டை, மற்றும் கால் சட்டை பணியன்,... போன்ற ஆடைகளை வீட்டின் கதவுகளில் தொங்கவிடும் பழக்கம் கூடாது,
4; எப்போது சட்டையோ அல்லது கால்சட்டையோ நீங்கள் அணியும்போது ஒரு பார்வை உடையை காண்பது மிகவும் நல்லது,
5; உங்கள் கால்சட்டையை அணியும்போது நீங்கள் அமர்ந்துகொண்டு அணிவது மிக நல்லது, சிலர் கால்சட்டை அணியும்போது கீழே விழுந்ததுண்டு,
6; முக அழகை விட ஆடை அணியும் அழகைத்தான் பெண்கள் அதிகம் ரசிப்பார்கள். உங்கள் நிறத்திற்கு ஏற்ற சரியான ஆடையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்,
7; துவைத்த ஈரமான உள்ளாடை அணிவதையும் தவிர்க்கவும்,
8; பருத்தி வெள்ளை சட்டை அணியும் பழக்கம் நம் நாட்டின் கலாச்சாரம் ஆதலால் வாரத்திற்கு ஒருநாளாவது வெள்ளை சட்டை அணியும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்,
9; கடைத்தெருவில் நடந்து செல்லுபோது நிமிர்து பார்க்கும் நடையும் எதிரே தெரிந்தவர் தெரியாதவர் என யாரு வந்தாலும் உங்கள் அழகிய புன்னகையை வீசிவிடுங்கள்,
10; இரு கைகளை கொண்டும் உங்கள் தலையை சொரிவது கூடாது,
11; ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி எச்சில் துப்பியபடி பேசக்கூடாது,
12; நீங்கள் பேசப்போகும் வார்த்தையை ஒரு நிமிடம் யோசித்து பிறகு பேசவேண்டும்,
13; முழுமையான வார்த்தை உண்மையான தவகல் எது என தெரியாமல் அதை பிறரிடம் பகிர்ந்துகொள்ள கூடாது,
14; ஏதேனும் சுப நிகழ்ச்சிக்கு செல்லும்போது இடது கையில் கடிகாரம், வலது கையில் மோதிரம், சட்டையில் வாசணை, என உங்கள் மதிப்பை நீங்கள்தான் உயர்த்தி காட்டவேண்டும்,
15; சூடான உணவை அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது,
16; எப்போது வீட்டில் நீங்கள் சாப்பிட்டாலும் பரிமாறுகிறபவர்களை நீங்கள் சாப்பிட்டீர்களா! என கேட்டறிய வேண்டும்,
17; தாடி வைக்க விருப்பம் என்றால் அழகிய முறையில் அதை கத்தரித்து வைத்துக்கொள்ளுங்கள்,
18; வீட்டில் அமர்ந்து தாடி நிகம் வெட்ட நினைத்தால் வீட்டில் நிகம் முடி விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,
19; சாப்பிட்டவுடன் முக சவரம் (சேவிங்) செய்யாதீர். ஏனென்றால் விக்கலோ ஏப்பமோ வந்தால் கத்தி உங்கள் கண்ணத்தை வெட்டிவிடும்
20; பெண்கள் விசயத்தில் அவர்களுக்கு கொடுத்த வார்த்தையை மீறாதீர் முடிந்த வரை அதை நிறைவேற்ற முயற்சியுங்கள்,
((அழகான உடை, கண்ணியமான பேச்சு, சொன்ன வார்த்தையை மீறாத குணமேதான் "ஆண்" என்ற அந்த கம்பீரமான சொல்லின் அர்த்தம்.))

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...