Monday, April 24, 2017

தரகர் சுகேசுடன் பேசியதை டி.டி.வி.தினகரன் ஒத்துக்கொண்டார்.

: சுகாஷை ஐகோர்ட் ஜட்ஜ் என்று நினைத்து பேசினேன், குற்றத்தை ஒப்புக் கொண்ட டிடிவி தினகரன்😲😲😲😲😲😲😲😲😲😲😲! டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீஸ் முன்பு அவர் ஆஜரானார். முதல் நாள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு விசாரணை நீண்ட நேரம் நீடித்தது. இந்த 17 மணி நேர விசாரணையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு திருப்தி தரும் வகையில் பதில்கள் கிடைத்துள்ளன. நிறைய கேள்விகளுக்கு டி.டி.வி.தினகரனிடம் இருந்து அவர்களால் உரிய பதில் பெற முடிந்தது.
இந்த விசாரணைகளின் போது தினகரனின் வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல் பரிமாற்றங்களையும் டெல்லி போலீசார் காண்பித்து கேள்விகள் கேட்டனர்.
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் பிடிபட்டது பற்றி தொலைக்காட்சிகளில் பரபரப்பாக செய்திகள் வெளியான போது, சுகேஷ் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்ததே இல்லை என டி.டி.வி.தினகரன் கூறினார். விசாரணைக்கு புறப்பட்டு சென்ற போதும் அவர் அதையே கூறினார். டெல்லி போலீசாரிடமும் முதலில் தினகரன் அந்த பதிலையே தெரிவித்தார். ஆனால் தொலைபேசியில் பேசியதை போலீசார் போட்டுக்காட்டியதும் வேறு வழியின்றி தரகர் சுகேசுடன் பேசியதை டி.டி.வி.தினகரன் ஒத்துக்கொண்டார்.
சுகேஷ் சந்திரசேகரை அவர் ஐகோர்ட்டு நீதிபதி என்று நினைத்தாராம். அதனால்தான் போனில் பேசியதாக தினகரன் போலீசாரிடம் தெரிவித்தார். தினகரனிடம் நடந்த இந்த விசாரணை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் அந்த விசாரணை முடியவில்லை. இதையடுத்து  (திங்கட்கிழமை) மூன்றாவது நாளாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...