தமிழகத்திலிருந்து ரயில் மூலம் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படும் மணல் (ஒளிப்படம்)
கருவறுக்கப்படும் கொள்ளிடம் ஆறு - (காணொளி)
காவிரி, பாலாறு என தமிழகத்திலுள்ள எல்லா ஆற்றிலும் மணல் சுரண்டப்படுகிறது.
இப்படி எடுத்தால் ஆற்றிலிருந்து ஏரி குளம் குட்டைகளுக்கு கால்வாயில் எப்படி தண்ணீர் செல்லும்.
அருகில் உள்ள மாநிலங்கள் அவர்கள் ஆற்று மணலை பாதுகாப்பாக காப்பாற்றுகிறார்கள். நம் மாநில அரசோ ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும், ஆந்திராவிற்கும், மாலத்தீவிற்கும் பிற வெளிநாடுகளுக்கும் லாரியில், ரயிலில், கப்பலில் பேராசை பிடித்த அரசியல், அதிகாரவர்க்கத்தினால் விற்று காசாக்கி கொள்ளையடிக்கப்படுகிறது.
JCB வாகனம் பயன்படுத்தக்கூடாது
ஒரு மீட்டர் மட்டுமே மணல் எடுக்கவேண்டும்
காலை முதல் மாலைவரை மட்டுமே எடுக்கவேண்டும்
என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக இயற்கை வளங்கள் வரைமுறையின்றி 40, 50 அடி ஆழம்வரை சுரண்டி அழிக்கப்படுகிறது.
எல்லா மணலும் சுரண்டப்பட்டபின் தமிழக அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகளே எழுதிவைத்துக்கொள்ளுங்கள்
அண்டை மாநிலங்களிலிருந்து ஒரு பிடி மணல்கூட உங்களுக்கு கிடைக்காது.
No comments:
Post a Comment