Thursday, April 20, 2017

மூடநம்பிக்கை எல்லா மதங்களிலும் இருக்கிறது.

பொதுவாக கருணாநிதி மட்டுமல்ல, தி.மு.க-வில் பெரும்பாலோர் இந்துமதத்தைக் கடுமையாக எதிர்ப்பதுதான் முஸ்ஸீம்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஒரு மார்க்கம் என்கிற தவறான கருத்தில் இருந்தார்கள். ரம்ஜான் நோன்பு விழாவில் ஒரு முறை கருணாநிதி பேசுகின்றபோது, ‘முஸ்ஸீம்களாகிய நீங்கள் இருப்பது நோன்பு, இந்துக்கள் செய்வது வம்பு’ என்று பேசினார். முஸ்ஸீம் சமுதாயக் கூட்டத்தில் போய் இந்துக்களை இழிவுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் காலத்திலிருந்தே திமுக-வில் நிலவி வந்த போக்கு இது.
என்னுடைய அனுபவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்…
அண்ணா பேசவிருந்ந்த பொறையார் கூட்டத்தில் போய் நான் அமர்ந்தேன். கூட்டத்திற்கு அண்ணா வருவதற்குக் காலதாமதமாயிற்று. நாகூர் ஹனீஃபா, இயக்கப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். ஒரு பாட்டில் இந்துக் கடவுள்களான விநாயகர், முருகன் ஆகியோரைக் கேவலமாக வர்ணித்துப் பாடியதுடன் அந்தக் கடவுள்களை வழிபடுகின்ற இந்துக்களைப் ‘பொச கெட்டப் பசங்களா’ எனக் கேலிசெய்தும் பாடினார். கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது. ஒரு முஸ்ஸீம் இந்துக் கடவுள்களைக் கேவலப்படுத்திப் பாடுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் பொறுமையுடன் இருந்தேன்.
அண்ணா வந்து பேசினார்.

கூட்டம் முடிந்தவுடன் இரவு உணவு பொறையார் ஜம்பு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு அருந்திவிட்டு அண்ணா வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் நாகூர் ஹனிஃபா உட்கார்ந்திருந்தார். எதிர்த் திண்ணையில் நான் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். அண்ணா ஹோம்லேண்ட் இதழ் பற்றி சற்றுநேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். அதைப் பற்றி அவர் பேசி முடிந்தவுடன், கூட்டத்தில் நாகூர் ஹனிஃபா இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பாடியதைப் பற்றிச் சொல்லிவிட்டு மூடநம்பிக்கை எல்லா மதங்களிலும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு முஸ்ஸீம், இந்துமதத்தைப் பற்றி மட்டும் இழிவாய் பாடுவது என்ன நியாயம்? வேண்டுமானால், ஹனிஃபா இஸ்லாமிய மதத்திலுள்ள பிற்போக்கான கோட்பாடுகளைப் பற்றிப் பாடலாமே என சற்றுக் காரசாரமாகவே கேட்டேன்.

அண்ணா புன்முறுவலுடன் ஹனீஃபாவைப் பார்த்து, ’கணேசன் எனக்குச் சொல்லவில்லை, உனக்குத்தான் சொல்கிறார்’ எனச் சொல்லி, அவருக்கே உரிய ராஜதந்திரத்துடன் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இந்துமத எதிர்ப்பும், ஏனைய மதச்சார்பும் ஒருபோதும் பகுத்தறிவுக்கு விளக்கமாகிவிட முடியாது.
– பி.சி. கணேசன் / பக். 186/191 திரும்பிப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு பகுத்தறிவாளரும் பதில்சொல்லவேண்டிய கேள்வியைத்தான் பத்திரிகையாளர் பி.சி. கணேசன் கேட்டிருக்கிறார்.
இந்து முஸ்லிம் விரோதத்தைத் தேவையில்லாமல் கிளரும் விவகாரத்தில் அண்ணாதுரை அமைதியாக இருந்திருக்கிறார், கருணாநிதி கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார். கண்மணிகள் கைதட்டி ரசித்திருக்கிறார்கள்.
ஆகமொத்தம் பகுத்தறிவு அகராதியில் இஸ்லாம் என்றால் இனிப்பு, இந்து என்றால் கசப்பு என்று ஆகிவிட்டது. சீர்திருத்தத்தைப் பற்றி அவர்கள் மற்ற மதத்தவரிடம் வாய் திறக்கவே வெட்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...