Tuesday, April 25, 2017

தமிழக அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - செய்தி.

தமிழக அரசின் வருவாயின் மிகப்பெரும் பங்கு இவர்களின் நலனுக்காகவே செலவாகும் நிலையில் வேலைநிறுத்தம் என்பது அயோக்கியத்தனம் மட்டுமல்ல, ஒருவகை மிரட்டல் சர்வாதிகாரமே. பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும், அவர்கள் மேல் இன்னல்களை திணிக்கும் எந்தவொரு செயலும் மிகத் தீவிரமாக எதிர்கொண்டு ஒடுக்கப்பட வேண்டியதே.
2003 ல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு அப்படியே தான் உள்ளது. தயவு தாட்சண்யம் பாராமல் டெஸ்மா சட்டத்தை பயன்படுத்தி வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே எடப்பாடி அரசு அம்மா வழி செயல்படும் அரசு.
In T.K. Rangarajan v. Government of Tamilnadu and Others (i), Justice M. B. Shah, speaking for a Bench of the Supreme Court consisting of himself and Justice A. R. Lakshmanan, said, "Now coming to the question of right to strike - in our view no such right exists with the government employee.". அரசு ஊழியருக்கு போராட்டத்தில் ஈடுபட எந்தவித உரிமையும் இல்லை என பொட்டில் அடித்து சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இது ஒருவகையில் உச்சநீதிமன்ற அவமதிப்பும் கூட. நிச்சயமாக யாராவது நீதிமன்றத்தை அணுகினால் உறுதியாக மிக அருமையான தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...