Saturday, April 15, 2017

3 அமைச்சர்களை நீக்க நெருக்கடி: தமிழகம் வருகிறார் கவர்னர்....

 வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைக்கு இடைஞ்சலாக இருந்ததோடு, பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்ட புகாரின் பேரில், தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, தமிழகத்தின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது, சென்னை, அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அமைச்சர்களை அந்த பொறுப்பில் இருந்து நீக்கவும், டில்லி சிறப்புப் பிரதிநிதி பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரத்தை நீக்கவும், தமிழக அரசுக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக, அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் போனில் பேசியதாக கூறப்படுகிறது. மும்பையில் இருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ், வரும் 10ம் தேதி, சென்னை வரவிருப்பதாகவும் தெரிகிறது.அப்போது, தமிழகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோரை அழைத்து பேசக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. அதன்பின், அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அழைத்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அப்போது, வருமான வரித் துறை அதிகாரிகளிடம், சோதனையின் போது மோதல் போக்கை கடைபிடித்த மூன்று அமைச்சர்கள் மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவார் என்றும் கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.


3 அமைச்சர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு...
அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு...

அமைச்சர்கள் மீது சட்டப்பிரிவு 183, 186, 189, 448ன் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...