Tuesday, April 11, 2017

தெரிந்து கொள்ள வேண்டிய இருவகை கடன் வகைகள்.

தெரிந்து கொள்ள வேண்டிய இருவகை கடன் வகைகள்

தெரிந்து கொள்ள வேண்டிய இருவகை கடன் வகைகள்
இந்த உலகத்தில் கடன் வாங்காதவர்கள் எவருமே இல்லை. ப‌லருக்கு பிறப்பு முதல்
இறப்புவரை ஆடம்பரத்தேவைகளுக்காக வேண்டி கடனோடு தான் வாழ்க்கை ஓடுகிறது. சிலருக்கு அத்தியாவசிய தேவை களுக்காக கடன் ஒருஅற்புத வரமாக அமைகிறது. அந்த வகையில் கடன் வகைகளை பற்றி இங்கு தெரிந்து கொள் வோம்.
கல்விக்கடன், தனிநபர் கடன், தொழில் கடன், திருமண கடன், வேலைக்கான கடன், மருத்துவ கடன் என்று இருந்தா லும் கடன்களில் இருவகை மட்டுமே உண்டு. அதாவது 1. அடமானமில்லாத கடன் (Unsecured Loan) 2. அடமானக் கடன் (secured Loan) ஆகும். இவற்றை பற்றி பார்ப்போம்.
அடமானமில்லாத கடன் ( Unsecured Loan)
ரூ.10லட்சம் வரைக்குமான தொழில்கடனுக்கு எந்தவிதமான அடமானமு ம் கேட்கக்கூடாது என்பது R.B.I. விதி. இந்த விதி காரணமா க, 10லட்சம்வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடை க்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதி யை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் (Sidfi)சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (Credit Guaran- tee Scheme CGS)கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன்பெற பதிவுசெய்யவேண்டும். இதுபற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழுவிவரங்களைத் தருவார்கள்.
அடமானக் கடன் (Secured Loan)
அடமானக் கடன் (Secured Loan) ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன்பெற முடியும். ஒருவேளை இரண்டுகோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்து க்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...