Friday, April 21, 2017

இசைத்­துறை முன்­னோ­டி­க­ளைப் பெரி­தும் மதிப்­ப­வர் இளை­ய­ராஜா.

எந்த துறை­யில் இருப்­ப­வர்­க­ளும் தங்­கள் முன்­னோ­டி­களை மதிக்­க­வேண்­டும் என்­பது பொது­விதி. அப்­படி மதிக்­கா­த­வர்­கள் முன்­னேற முடி­யாது. முன்­னே­றி­னா­லும் நிலைத்­தி­ருக்க முடி­யாது. மாஸ்­டர் தன­ராஜ், ஜி.கே வெங்­க­டேஷ், எம்.எஸ். விஸ்­வ­நா­தன், கே.வி. மகா­தே­வன் போன்ற இசைத்­துறை முன்­னோ­டி­க­ளைப் பெரி­தும் மதிப்­ப­வர் இளை­ய­ராஜா. ஆயி­ரம் படங்­க­ளுக்­கு­மேல் இசை­ய­மைத்து, திரை உல­கில் புகழ்­பெற்று விளங்­கும் எம்.எஸ். விஸ்­வ­நா­த­னின் இசைக்­குத்­தான் ஒரு ரசி­கர் என்று கூறு­கி­ற­வர் இளை­ய­ராஜா. அப்­ப­டிப்­பட்ட எம்.எஸ் விஸ்­வ­நா­த­னுக்­குச் சொந்­தப்­ப­டம் எடுத்­துப் பெரும் நட்­டம் ஏற்­பட்டு வீடு கட­னில் மூழ்­கிப்­போ­கும் நிலை ஏற்­பட்­டது. அதைப்­பற்­றிக் கேள்­விப்­பட்ட இளை­ய­ராஜா, ஒரு பெருந்­தொ­கையை எம்.எஸ்­விக்கு அனுப்பி வீட்டை மீட்க உத­வி­னா­ராம். பின்­னர் எம்.எஸ்.வியின் சொந்­தப்­ப­டம் ஒன்­றுக்கு இசை­ய­மைத்­துக் கொடுத்­தும் உத­வி­னார் இளை­ய­ராஜா. இத­னால் மனம் நெகிழ்ந்து போன எம்.எஸ்.வி. குரு ஸ்தானத்­தி­லி­ருந்து இறங்கி வந்து சீடர் நிலை­யி­லி­ருந்த இளை­ய­ரா­ஜா­வோடு சேர்ந்து ஏவி.எம்.மின் மெல்­லத்­தி­றந்­தது கதவு" படத்­துக்­குக் கூட்­டாக இசை­ய­மைத்­தார். அது மட்­டுமா? 1986 தீபா­வ­ளிக்கு ஏகப்­பட்ட படங்­க­ளில் பணி­யாற்றி நேர­மில்­லா­மல் அவ­திப்­பட்ட இளை­ய­ரா­ஜா­வுக்கு உதவ, தன் கௌர­வத்­தைப் பற்­றிச் சற்­றும் கவ­லைப்­ப­டா­மல் ‘விடிஞ்சா கல்­யா­ணம்’ என்ற படத்­தின் பின்­னணி இசை­யை­யும் (ரீகார்­டிங்) செய்து கொடுத்­தார். அந்­தப்­ப­டத்­தின் இசையை அமைத்­த­வர் இளை­ய­ராஜா. பின்­னணி இசை­யை­யும் அவர் தான் அமைத்­தி­ருக்க வேண்­டும். அவ­ருக்கோ நேர­மில்லை. படமோ தீபா­வ­ளிக்கு வெளி­வந்­த­தாக வேண்­டும். அந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள்­வ­தற்­காக, ராஜாவை மீட்­ப­தற்­கா­கவே, குரு விஸ்­வ­நா­தன், சீட­ருக்­கும் சீட­ராக மாறி பின்­னணி இசையை அமைத்­துக் கொடுத்­தார். தன் பெயர் போட வேண்­டாம். ஊதி­ய­மும் வேண்­டாம்" என்­றார் எம்­எஸ்வி. ஆனால், பெரும் தொகை ஒன்றை வாங்­கிக் கொடுத்­த­தோடு, பின்­னணி இசை­ய­மைத்­துக் கொடுத்த எம்.எஸ்.விக்கு நன்றி" என்று தனி­யாக ஒரு டைட்­டில் கார்­டும் போட ஏற்­பாடு செய்­தார் இளை­ய­ராஜா.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...