தி.க.தேர்தலில் நிற்காது.எனவே பெரிய பதவிகளையும் அடைய முடியாது என்பதை உணர்ந்த அவரும் அவரது “தம்பிமார்கள்” களும் பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி “கண்ணீர்த்துளி”களோடு வெளியேறி,தி.மு.க வைத் தொடங்கினர்.
தி.க.வும் தி.மு.க வும் "இரட்டைக் குழல் துப்பாக்கி" என்றார்.
அதற்குப் பிறகு நாத்திகம் பேசுவதை படிப் படியாகக் குறைத்தார்.
"ஒன்றே குலம்,ஒருவனே தேவன்" என்ற திருமூலரின் சித்தாந்தத்தையே
தி.மு.க. வின் கொள்கையாக்கினார்.
பெரியாரின் "பிள்ளையார் உடைப்பு"ப் போராட்டத்தின் போது
"நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்,
பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று ஒரு
அந்தர் பல்டி அடித்தார்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்”
என்று கொள்கையில் சறுக்கினார்.
இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் “திராவிட நாடு” என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்று கூக்குரலிட்டார்."அடைந்தால் திராவிட நாடு,இல்லையேல் சுடுகாடு" என்று முழக்கமிட்டார்.இவரது திராவிட நாடு என்பதின்
எல்லைகளும் இவருக்கே தெரியாது.
சென்னை மாகாணமே திராவிட
நாடு என்றும்,ஆந்திரா தனி மாநிலமான பிறகு,கேரளம்,கர்நாடகம் தமிழ் நாடு ஆகிய நான்கு மாநிலங்களும் திராவிட நாடென்றார்.
இதில் வேடிக்கை என்னவென்றால்
இவர் திராவிட நாடு கேட்டது அந்த மூன்று மாநிலங்களுக்கும் தெரியாது என்பதுதான்.
பாராளுமன்றத்தில் சென்று
பெற்றுவிடுவேன் என்றும்
“ஐ.நா. சபையில் பேசிப் பெறுவேன்” என்றும்
.“ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்” என்றும்
“தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்க விட்டால், அடைவோம் திராவிடநாடு” என்றும் பிதற்றினார். சீனப் போரின் போது,
மத்திய அரசு கட்சியைத் தடை செய்து விடுமோ என்று பயந்து
கொள்கையையே கை விட்டு விட்டார்.ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம்
என்று சொல்லவில்லை;
ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன”
என்று சமாளித்தார்.
கொள்கைப் பிடிப்பில்லாமல்
ஆட்சியைப் பிடிப்பதையே
கொள்கையாகக் கொண்டவர்தான் அண்ணாதுரை. அவரது தி.மு.கவினரும்
இந்த ஆட்சிப்பிடிப்புக் கொள்கைக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள். இன்றும் திமுகவினர்
அந்தத் தலைவனின் இந்தக் கொள்கையைப்
பின்பற்றுகின்றார்கள்.....
..
No comments:
Post a Comment