Wednesday, April 19, 2017

பாஜகவின் சாதனைகளை எந்த ஊடகங்களும் சொல்வது இல்லை.

கசப்பான செய்தியை பாஜக நிர்வாகிகளின் கவனத்திற்கு எழுதுகிறேன்.
மத்தியில் மோடி அவர்களின் நல்லாட்சிக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்தது.
ஜெ மறைவுக்கு பிறகு அதிமுகவின் ஓட்டுகள் எங்கே பஜகவுக்கு போய்விடுமோ என்று பஜகவின் எதிரிகள் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
மேலும் ஜெ மரணத்தில் உள்ள சந்தேகங்கள் மற்றும் தொண்டர்கள் விருப்பத்திற்கு மாறாக அதிமுகவை கைப்பற்றிய சசிகலா குடும்பத்தினர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்பதால் சசிகலாவின் பினாமி அரசின் மறைமுக ஒத்துழைப்புடன் தமிழ் ஆர்வலர்கள் போர்வையில் தனி தமிழ் நாடு கோரிக்கையை வலியுறுத்தும் இயக்கங்கள் சிறுபான்மை இயக்கங்கள் எல்லாம் முன்னின்று போராட்டங்களை ஒவ்வொன்றாக தூண்டி விட்டு விசுவரூபம் எடுக்க வைக்கிறார்கள்.
திராவிடகட்சிகள், கம்யுனிட்ஸ்டுகள், தனி தமிழ்நாடு அமைப்புகள், சிறுபான்மை இயக்கங்கள், என்று பல்வேறு சித்தாந்தகளை உடையவர்களும் சமூக வலைதளங்களில் பஜகவை கடுமையாக எதிர்த்து திட்டமிட்டு அவதுறு பரப்புகிறார்கள்.
பாஜக தலைவர்களின் ஒவ்வொரு பேட்டியும், ஒவ்வொரு வார்த்தைகளையும் எதிர்மறையான கருத்துக்களாக திசை திருப்பி தமிழர்களுக்கு எதிராக திரிக்கபடுகின்றன.
பாஜகவின் சாதனைகளை எந்த ஊடகங்களும் சொல்வது இல்லை.
மாறாக பொய்கள்தான் மிகைப்படுத்தப்பட்டு ஜோடிக்கப்பட்டு பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள்.
இன்னோருபக்கம் சமூகவளைதளங்களில் பாஜகவின் ஆதரவாளர்கள் போடும் பதிவுகளை பாஜகவின் நிர்வாகிகள் கூட பகிராமல் புறக்கணித்து கடந்து செல்கிறார்கள்.
"எது ஒன்று சோசியல் மீடியாவில்" திரும்ப திரும்ப அதிகமாக பகிர படுகிறதோ அதையே உண்மை என்று மக்கள் ஏற்று கொள்கிறார்கள்.
அது சரியா இல்லை தவறா என்று அவர்கள் யோசிக்க முடியாத அளவுக்கு நிர்பந்தம் போல் தமிழர் தமிழர் என்று உணர்ச்சிகளை தூண்டி விடப்படுகிறது.
பொது சமூகத்தில் நல்ல கருத்தியலை கட்டமைப்பதில் சமூக ஊடகங்களும், சோசியல் மீடியாவும் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை சரியாக பயன்படுத்தி தான் வட மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தார்கள். இதனால்தான் மோடியும் மத்தியில் ஆட்சியை பிடித்தார். வடமாநிலங்களிலும் ஆட்சியை பிடித்து பாஜக முதல்வர்கள் பதிவியேற்று சிறப்பாக ஆட்சி செய்கிறார்கள்.
ஆனால் தமிழக பாஜக நிர்வாகிகள் இதை உணர்ந்ததாக தெரியவில்லை.
நேற்று கட்சி ஆரமித்த சீமானுக்கு கூட சமூக வலைதளத்தில் மிக அதிக ஆதரவு உள்ளது.
சீமானுக்கு ஆதரவாக ஏகப்பட்ட தமிழ் தேசிய பேஸ்புக் குழுக்கள் இயங்கி வருகின்றன, தமிழ்நாடும் அரசியலும், தமிழ் தேசியம் போன்றவை அவற்றுள் சில தான். இதேபோல் பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் மிக தீவிரமாக இயங்கி வருகின்றன.
பேஸ்புக்கில் திராவிட உணர்வுகளை தூண்டி விடும் குழுக்கள், தனி தமிழ் நாடு உணர்வுகளை தூண்டி விடும் குழுக்கள், இடதுசாரிகள் ஆதரவு குழுக்கள், சிறுபான்மை இயக்கங்களுக்கு பிரச்சாரம் செய்யும் குழுக்கள் என்று ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது 50000 பேர்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரி ஆயிரக்கணக்கானவர்கள் குழுக்கள் ஆரம்பித்து பாஜக வுக்கு எதிராகவும், இந்திய எதிர்ப்பு இனவெறி பிரச்சாரம் சிறுபான்மை மத வெறி பிரச்சாரம் மிகத்தீவிரமாக செய்கிறார்கள்.
இரவு ஒரு மணி, இரண்டு மணிக்கு கூட பேஸ்புக்கில் ஸ்டேடஸ்ட் போடுகிறார்கள்.
இவர்கள் பஜக எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார்கள் என்பதை நடைமுறை எதார்த்தில் உணர்கிறேன்.
இதுதான் உண்மை.
பாஜக நிர்வாகிகள் ஒரு கசப்பான செய்தியை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். எப்போதும் நமது பலவீனத்தை ஒப்புக்கொண்டு அந்த குறைகளை சரிப்படுத்த வேண்டும்.
 ஐந்து மாதங்களுக்கு முன் கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையில் மோடி அவர்களின் நல்லாட்சிக்கு தமிழ்நாட்டில் நடுநிலையானவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உருவானது.
ஆனால் இன்று பாஜகாவை பற்றி நல்ல கருத்துடன் இருந்த என் நண்பர்கள் என் மாணவர்கள் எல்லாம் கூட இன்று பாஜவை தீவிரமாக வெறுக்கிறார்கள். நான் அவர்களிடம் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறிய பிறகுதான் புரிந்து கொண்டார்கள்.
இன்னும் சிலர்
நான் பஜகவுக்கு ஆதரவாக ஒரு ஸ்டேடஸ்ட் போட்டால் கூட என்னை வசைபாடுகிறார்கள்.
இதற்கு காரணம் சமூக ஊடகங்கள் தான். இவர்கள் அனைவரும் எந்த கட்சியையும் சாராத நடுநிலையாளர்கள்.
இதை அவர்களின் பேஸ்புக் ஸ்டேடஸில் இருந்தே அறிய முடிகிறது.
தமிழக சிறுபான்மையினத்தவர்கள் பாஜவை தங்களின் மத எதிரியாக பார்கிறார்கள்.
அதனால் சிறுபான்மை இயக்கங்கள் சிறுபான்மை இளைஞர்களை மிகவும் தீவிரமாக அவர்களின் முழு திறமையும் பயன்படுத்தி தமிழக இந்து இளைஞர்களின் மத்தியில் பாஜக தமிழர்களின் எதிரி என்று மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யபடுகிறது.
தமிழ்நாட்டில் மிக அதிகமாக இளைஞர்களின் ஓட்டு தான் அடுத்த 10 ஆண்டுகளில் இருக்கும். இவர்களின் கருத்து தான் தமிழ்நாட்டின் பொது கருத்தாக மாறும். நான் பார்த்தவரை கிராமத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் கூட வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிபடி இலவச ஸ்மார்ட்போன் கொடுத்தால் பெண்களும் பயன்படுத்த ஆரமிப்பார்கள். இவர்கள் இந்த விஷம பிரச்சாரத்துக்கு அதிகமாக பலியாவார்கள்.
"வாட்ஸ் அப் மக்களின் மனதை இப்படி முழுமையாக மாற்றும் என்று நான் நினைக்கவில்லை" என்று பத்ரி சேஷாத்ரி தனது கவலையை சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தார்.
பாஜக தலைவர்களே 25 வருடத்துக்கு முன் அத்வானி சென்ற மாதிரி ரதயாத்திரிய‌ை இன்று மீண்டும் சென்று ஒரு பயனும் இல்லை.
தமிழகத்தின் மக்கள் மனநிலையை உளவுத்துறையினர் மூலம் அறிந்து கொண்டு பாஜக அதற்கு ஏற்ப செயல்பட வியூகத்தை வகுத்து செயல்பட வேண்டும்.
மத்தியில் மிகப்பெரிய அதிகாரத்தில் உள்ள கட்சி பாஜக. 13 மாநிலங்களில் ஆட்சி பிடித்து இந்திய நிலப்பரப்பில் 86சதவீதம் இடங்களில் ஆட்சியில் உள்ள மிகப்பெரிய கட்சி பாஜக.
ஆனால் தமிழ் நாட்டில் வளர-வளர வெட்டி-வெட்டி ஒடுக்கப்படுகிறது.
இதற்கு காரணம் தமிழகத்தின் பாஜக வின் அலட்சியம் தான்.
தமிழகத்தின் நிர்வாகிகள் மீம்ஸ் போட பயிற்சி கொடுக்க கூட பணம் இல்லையா?
ஐடி டீம் என ஒன்று இருக்கா இல்லையா தமிழக பாஜகவிடம்.
என்னை போன்ற தனி மனிதர்கள் தான் பாஜகவுக்காக சமூக வலைதளங்களில் போரா‌டி கொண்டு இருக்கிறோம்.
ஆனால் ஒன்று இதே நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக தமிழகம் அடுத்த காஷ்மீராவது உறுதி.
பாஜக நிர்வாகிகளே நான் உங்களின் கெஞ்சி கேட்டு கொள்வது ஒன்று தான்.
தயவு செய்து மாவட்டத்துக்கு 100 இளைஞர்களையாவது தேர்வு செய்து மீம்ஸ் உருவாக்க மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த பயிற்சி தாருங்கள்.
தமிழ் நாட்டில் கீழ் கண்டவாறு வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள 12606 ஊராட்சிகளில் ஒரு லட்சம் வார்டுகள் உள்ளது. இதில் வார்டுக்கு ஒரு வாட்ஸ்அப் குழு என ஒரு லட்சம் வாட்ஸ்அப் உருவாக்கிட வேண்டும்.
560 பேரூராட்சிகளில் 8,500வார்டுகள் உள்ளது. இதில் வார்டுக்கு 5 வாட்ஸ்அப் குழு என 40ஆயிரம் குழு உருவாக்கிட வேண்டும்.
148 நகராட்சியில் 4,000 வார்டுகள் உள்ளது.இதில் வார்டுக்கு 10 வாட்ஸ்அப் குழு என 40ஆயிரம் குழுக்கள் உருவாக்கிட வேண்டும்.
12 மாநகராட்சிகளில் 1000வார்டுகள் உள்ளது. இதில் வார்டுக்கு 50வாட்ஸ் குழு என உருவாக்கி 50ஆயிரம் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கிட வேண்டும்.
இப்படி
வார்டு வார்டாக உள்ஊர் வார்டு பகுதிவாசிகளை ஒரு வாட்ஸ்அப் குழுவில் 250 பொதுமக்களை இணைத்து தமிழ் நாடு முழுவதும் 2,30,000 வாட்ஸ்அப் குழு உருவாக்கிட வேண்டும்.
இதனை மாவட்ட தலைமை IT'wing உடன் இணைத்திட வேண்டும்.
அதனை
மாநில தலைமை-IT'wings உடன் இணைத்து விட வேண்டும்.
இப்போது ஒரு செய்தியை மாநில தலைமை பகிர்ந்தால்
 230000×250 =5,75,00,00 (ஐந்து கோடியே எழுபத்தைந்து லட்சம்) நபர்களுக்கு செய்தி சென்று விடும்.
இதில் நெட் கார்டு போடாமல் இருப்பார்கள் அல்லது
ஸ்மார்ட் போன் கூட இல்லாமல் இருப்பார்கள் இவர்களுக்கு ரெக்கார்டிங் வாய்ஸ் மற்றும் குறுந்தகவல் sms அனுப்பி எதிக்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை பற்றி விழிப்புணர்வு செய்து பாஜகவுக்கு ஆதரவு தேட வேண்டும்.
தமிழகத்தில் மணல் கொள்ளையர்கள், கல்வி கொள்ளையர்கள், கருப்பு பணம் கொள்ளையர்கள், ஊழல்வாதிகள் சின்ன கட்சி முதல் பெரிய கட்சிகள் வரை ஆண்ட கட்சிகள் ஆள்கின்ற கட்சிகள் என வந்தவன் போனவன் எல்லாம் தமிழகத்தில் தனக்கு என்று பல TVசேனல் ஆரம்பித்து பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் 13 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சி மத்தியில் சர்வ வல்லமையுடன் ஆட்சி செய்கின்ற பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு TV சேனல் கூட இல்லை. தமிழ்நாட்டில்
"நியூஸ் சேனல்" ,
"மியூசிக் சேனல்",
 "விளையாட்டு சேனல்",
"சிறுவர் கார்ட்டூன் சேனல்" ,
"மாணவர்களுக்கான கல்வி & வேலை வாய்ப்பு சேனல்"
"மருத்துவ சேனல் "
"வியாபார சேனல்"
"மகளிர் சேனல் "
மற்றும் "பொழுதுபோக்கு சேனல்" என்று 10-வகையான TV சேனல்கள் ஆரம்பித்து இந்த எல்லா சேனல்களும் உண்மையான செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்த்து எதிக்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை பற்றி விழிப்புணர்வு செய்து பாஜகவுக்கு ஆதரவு தேட வேண்டும்.
பாஜக இப்போதே விழிக்காவிட்டால் இழப்பு மிக அதிகமாக இருக்கும். அந்தஇழப்பு கட்சிக்கு மட்டும் அல்ல இந்த நாட்டுக்கும் தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு missed called தந்தால் உறுப்பினராக ஆக முடியும். missed called செய்தவர்களுக்கு உள் ஊர் நிர்வாகிகள் வாயிலாக உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 50 லட்சம் நபர்கள் வரை missed called கொடுத்து விட்டு காத்திருந்தார்கள் ஆனால் உறுப்பினர் அட்டை இன்று வரை வரவில்லை.
அதில் எங்கள் குடும்பத்தினரும் ஏமாற்றம் அடைந்தவர்களில் ஒருவர்.
உணர்வு உள்ள பாஜக ஆதரவாளர்களின் ஏகோபித்த கருத்தை தான் நான் எழுதி உள்ளேன். பாஜக நிர்வாகிகளே உடனடியாக செயல்படுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...