அம்மா என்றழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா என்கின்ற பெண்மணி இன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்திருந்தா இப்படி மூளைக்கொரு போராட்டம் நடந்திருக்குமா????
ஆளாளுக்கு நானே கட்சி... என்னால் மட்டுமே கட்சியை நடத்த முடியும்... நானே அவரின் வாரிசு என்று சொல்லியிருக்க முடியுமா?
மத்திய அரசால் இவ்வளவு எளிதாக GST ஒப்புதல் வாங்கியிருக்க முடியுமா?
பாஜக இன்று நாங்கள்தான் மறைமுக ஆட்சி நடத்துகிறோம்.... தமிழகத்தை எங்களால் மட்டுமே காக்க முடியும் என்று கூறியிருக்க முடியுமா?
திமுகவிற்கும், செயல் தலைவரான இளைஞர் அணித்தலைவருக்கு தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்ற எண்ணம் வந்திருக்க முடியுமா?
மரங்களை வெட்டிய கட்சி, கள்ள தோணியேறிய கட்சி, தமிழன கட்சி, சமூக கட்சி, சிறுபான்மையினர் கட்சிகள் என அனைவரும் இப்படி துள்ளி குதித்து விளையாடியிருக்க முடியுமா?
ஆளுமை என்பது இறைவன் தந்த வரம்... மக்கள் விரும்பிய தலைமையின் தவறுகள் மக்களின் மனதில் நிற்பதில்லை. இதுதான் வாழ்வின் உண்மை...
#நினைத்தேன்சொன்னேன்................
No comments:
Post a Comment