அது என்னங்க ஜெ.ஏ. ஆப்ரேசன். அந்த புலனாய்வு வார இதழ் சொல்வதைப் பார்த்தால் தமிழக ஊழல் அரசியல்வாதிகள் யாரும் இனி ஒரு நாள் கூட நிம்மதியாகத் தூங்க முடியாது போல.
காரணம் பிரதமரின் ஜெ.ஏ.ஆப்ரேஷன் தான் காரணம். அதாவது ஜெயலலிதா அப்போலோ ஆப்ரேஷன் என்கிறது அந்த கட்டுரை.
தமிழக அரசியல் ஊழல், லஞ்ச லாவண்யங்களில் திளைத்து, கொழுத்துப் போய் இருக்கிறது என்பது, எப்போது வெளியே தெரிய ஆரம்பித்தது என்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை தனிமைச் சிறையில் வைத்தது மன்னார்குடி வகையறா. கவர்னர் முதல் தீபா வரை யாராலும் அந்த அப்போலோ கேட்டைக் கடந்து ஒரு விஷயமும் அறிந்து கொள்ள இயலவே இல்லை.
அந்த நேரத்தில் தான் கடைசி நேர வேட்டைகள் ஆரம்பமானது. ரெட்டி, ராம மோகன ராவ், பண மாற்றம், பேரங்கள், பெரிய பெரிய டெண்டர்கள் என்று புகுந்து விளையாடினார்கள்.
இது அத்தனையும் மத்திய உளவுப் பிரிவு உன்னிப்பாக கவனித்து பிரதமர் அலுவலகத்திற்கு கூறியபடியே இருந்தது.
ஜெ.,மரணம் அடைந்தார். அதன் பின் கோடான கோடி ரூபாய்கள் வாரி இறைக்கப்பட்டு காட்சியின் தலைமையை கைப்பற்ற போராடினார்கள்.
ஆட்சிக்கும் குறிவைத்தார் சசிகலா. பன்னீர் கட்சியை உடைத்து வெளியேறினார். கூவத்தூர் ஆட்டம் ஆரம்பமானது.
இதோ இடைத்தேர்தலில் கண் முன்னால் நூறு கோடி ரூபாய் புழக்கம் வாக்காளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வரை போய் இருக்கிறது.
இதையும் மத்திய உளவுப் பிரிவு நோட் செய்து டெல்லிக்கு அறிக்கை அனுப்பியது. இங்கு தான் பிரதமரின் பலே பிளான் வெளியே தெரிய ஆரம்பித்தது.
ஆர்கே நகர் தேர்தலுக்கு இரண்டே நாட்கள் இருக்கும் வரை அமைதியாக வேடிக்கை பார்த்த டெல்லி, பணப்பட்டுவாடா முடிந்து விட்டது என்று தெரிந்த அந்த நிமிடம் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடுகளில் ரெய்டுக்காக புகுந்தது. இதை சற்றும் எதிர் பாராத விஜயபாஸ்கர் கையும் களவுமாக சிக்கினார்.
தினகரன் சிக்கினார். தேர்தல் நின்று போனது. மக்களிடம் கொள்ளை அடித்த பணம் மக்களிடமே போய் சேரட்டும்.
இரண்டு ஊழல் செய்தவர்கள், கூவத்தூரில் பேரம் பேசி பல கோடிகள் பெற்றவர்கள், என எந்த அதிமுகவினரும் இனி ஒவ்வொரு இரவும் தூங்கக் கூடாது.
எந்த நேரம் என்ன நடக்குமோ என்று அலற வேண்டும்? இதுதான் ஆப்ரேஷன் ஜெ.ஏ. என்கிறது அந்தப் பத்திரிக்கை. என்னங்க தலை சுத்துதா..?
பொறுத்திருந்து பாருங்கள் அடுத்து இருபத்தி ஒன்பது அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு..!?

No comments:
Post a Comment