இவ்வளவு சீக்கிரம் ஜெயலலிதாவை அனாதையாக்குவார்கள் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்..!
நான் இல்லாவிட்டாலும் எனக்குப் பின்னாலும் 200 ஆண்டுகள் அதிமுக இருக்கும் என்று சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கம்பீரமாக பேசினார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதா மரணமடைந்து 5 மாதங்களுக்கு உள்ளாகவே அவரது நினைவிடத்தை சரியாக கவனிக்காமல் விட்டுள்ளனர்.
அதிமுக கட்சிக்கொடி கிழிந்து பறக்கிறது உண்மையான தொண்டர்களை அதிர்ச்சிடைய வைத்துள்ளது.
ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குப் போனால் நல்லாதாக நடப்பதில்லையே என்று நினைத்தோ என்னவோ அதிமுக பெருந்தலைகள் யாரும் இப்போது ஜெயலலிதா நினைவிடம் பக்கம் செல்வதில்லை.
விவிஐபிக்கள் வரும் போது மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா நினைவிடம் இப்போது கேட்பாரற்று கிடக்கிறது.
அதிமுக கட்சிக்கொடியே கிழிந்து பறக்கிறது. இத்தனை சீக்கிரம் ஜெயலலிதாவை அநாதையாக்குவார்கள் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
அதிமுக என்ற கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வைத்து விட்டார்கள்.
கட்சி யாருக்கு, பதவி யாருக்கு தலைமை அலுவலகத்தை யார் கைப்பற்றுவது என்று நடக்கும் சண்டையிலேயே இப்போது இரு அணிகளுக்கும் நேரம் சரியாக இருக்கிறது.
இதில் எங்கே ஜெயலலிதா சமாதிக்கு போக நேரம் கிடைக்கப் போகிறது?
No comments:
Post a Comment