1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக் கூடாது.
2. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிட வேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போட வேண்டும்.
3. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின் போது, சொல்லுதல் கூடாது சுத்தமான இடத்தில் தான் ஜபிக்க வேண்டும்.
4. கற்பூர ஹாரத்தி - சூடம்காண்பித்தல் பற்றி
சூடம் காண்பிக்கும் போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்க வேண்டும், தொப்புளுக்கு இரண்டு தடவை காண்பிக்க வேண்டும், முகத்துக்கு ஒரு தடவை, கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.
5. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக் கூடாது.
6. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
7. தெய்வங்களின் புஷ்பங்கள்:-
சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்
விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்
விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்
பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இலை ஆகும்
இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது
8. கலசத்தின் அா்த்தங்கள்:-
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் – ப்ராணம் (மூச்சு)
உபசாரம் – பஞ்ச பூதங்கள்.
No comments:
Post a Comment