Sunday, October 26, 2014

ஜெயலலிதாவுடன் “தேசபக்தி கூட்டணி” – சுப்ரமணியன் சுவாமியின் 02/02/2009 -ந்தேதி பேட்டி…..

jj and sswamy
 ( இது என்ன “போஸ்” ….? 
கூட்டணி வேண்டுமென்றால்
காலிலும் விழுவாரோ …? ….? )
“சாமிகளின் சாகசங்கள்” இடுகைத் தொடர் சம்பந்தமாக
சில ஆவணங்களை சேகரித்துக் கொண்டிருந்தேன்.
எதேச்சையாக கண்ணில் பட்டது திருவாளர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பிப்ரவரி 2, 2009 – அன்று -
(அதாவது மே 2009 ) தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்னதாக – கொடுத்திருந்த ஒரு பேட்டி.
சு.சுவாமி பல விஷயங்களைப் பற்றி பதிலளித்திருக்கிறார் அதில். மற்ற விவரங்களைப் பின்னர் தருகிறேன்.
இன்று, சுப்ரீம் கோர்ட்டில், ஜெ.வழக்கில் வாதாட
தன்னை எதிர்மனுதாரராக அனுமதிக்க வேண்டும் என்று பெட்டிஷன் போட்டிருக்கிறார் சு.சுவாமி.
இந்த சூழ்நிலையில், அன்றைய பேட்டியைப் படித்தால், திருவாளர் சுப்ரமணியன் சுவாமியின் குணாதிசயங்களைப் பற்றி மக்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவும் என்பதால், தொடர்புடைய பத்தியை மட்டும்,
கீழே தருகிறேன். ( மற்றவை பிற்பாடு …..)
—————————————————–
02.02.2009 அன்று சென்னையில் இருக்கும் தனது இல்லத்தில்,
பத்திரிகையாளர்களிடம் பேசிய சுப்பிரமணியசாமி -
xx xx xx xx
வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து
என்ன நினைக்கிறீர்கள்?
“தீவிரவாதிகளால், நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்
ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா தேசபக்தி மிகுந்தவர்.
எனவே நாட்டைக் காப்பாற்றுவதற்காக அ.தி.மு.க
ஒரு தேசபக்திக் கூட்டணியை உருவாக்க வேண்டும்.”
(சாமி, இந்த பதிலைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது
ஒரு நிருபர் குறுக்கிட்டு, ‘‘ஜெயலலிதா மீது
ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதே…?’’ என்றார்.)
அதற்கு சாமி, ‘‘ஊழல் மட்டுமே ஒரு குற்றம் இல்லை.
ஏன் கருணாநிதி ஊழல் செய்யவில்லையா?
ஜெயலலிதாவுக்கு தேசபக்தி அதிகம். அதனால் அவர்
தலைமையில் கூட்டணி உருவாகவேண்டும்
என்கிறேன்’’ 
என்றார்.
தொடர்ந்து கேள்வியெழுப்பிய அந்த நிருபர்,
‘‘அப்படியானால், தேசபக்தி இருந்தால் போதும்
ஊழல் செய்யலாம் என்கிறீர்களா? 

தேசத்தை சுரண்டுபவர்கள் தேசபக்தி
மிகுந்தவர்கள் என்கிறீர்களா?’’ என்றார்.
‘‘அப்படிச் சொல்லவில்லை. ஜெயலலிதா ஆட்சி செய்த
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது ஒரு ஊழல்
குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டுள்ளதா?
அவர் பதவியில் இருந்தபோது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது. தேசவிரோத சக்திகளை அவர் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்தார்.
ஆக, இந்த தேர்தலில் கடைசி ஐந்து ஆண்டுகளைத்தான் பார்க்கவேண்டும். பழசை மக்களே மறந்துவிட்டார்கள்.’’
என்று பதிலுரைத்தவர்,
‘‘தேசபக்தி கூட்டணி அமைந்தாலும், நாங்கள்
ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பது குறித்து
இப்போதைக்கு சொல்ல முடியாது. அதே சமயம்
வீட்டில் சும்மாவாச்சும் தூங்குவேனே ஒழிய, கண்டிப்பாகக் கருணாநிதியுடன் கூட்டணி வைக்க மாட்டேன்’’ என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...