Wednesday, October 29, 2014

சு.சுவாமியையும், ச.சாமியையும் பாதுகாத்தது யார்….? நரசிம்மராவா… அல்லது ….. ?

( ரங்கனாத் வாக்குமூலம் தொடர்ச்சி ) -
கேள்வி – சிவராசன் பத்திரமாகத் தப்பித்துச் செல்வது
குறித்து அவனுக்கு எத்தகைய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது ?
பதில் – சிவராசன், தான் ஜாப்னா திரும்பச் சென்றால்,
கொல்லப்படுவோம் என்று நினைத்தான். எனவே,
பங்களூரிலிருந்து நேரடியாக வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விடவே பங்களூர் வந்தான். ‘ஜெயின் முனி’ ( சந்திரா சாமியின் நிஜப்பெயர் “நேமி சந்த் “ஜெயின்” ) வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தனக்கு உதவி செய்வார் என்று கூறினான். (டெல்லியிலிருந்து எந்தவித பயண ஆவணங்களும் இல்லாமலேயே வெகு சுலபமாக நேபாளம் சென்று விடலாம்…)
முதலில், சந்திராசாமி, சிவராசனை டெல்லி வரச்செய்து, அங்கிருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி இருந்தார்.
கேள்வி – முழு உண்மையையும் சொல்லக் கூடாது என்று
சிபிஐ உங்களைத் தடுத்ததா …?
பதில் – ஆமாம். சிபிஐ என்னை முழு உண்மைகளையும்
சொல்ல விடாமல் தடுத்தது – பயமுறுத்தியது.
விடுதலைப் புலிகளைத் தவிர மற்றவர்கள் யாரும் இதில்சம்பந்தப்பட்டிருந்ததைப் பற்றி நான் எதுவுமே சொல்லக்கூடாது என்று என்னைத் தடுத்தது. கொலைக்கு காரணமானவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்று கூறக்கூடிய சாட்சியங்களை மட்டுமே சிபிஐ அனுமதித்தது. சதியின் பின்னணியில் இருந்தவர்களைப் பற்றி எல்லாம் பேசுவதை  அது விரும்பவில்லை.
கேள்வி – எத்தகைய உண்மைகளை சிபிஐ – பதிவு பண்ணவோ, ஏற்றுக் கொண்டு செயல்படவோ மறுத்தது ….?
பதில் – சிபிஐ-யின் தலைவர், ராஜீவ் கொலையில்,
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சந்திராசாமி ஆகியோரின் தொடர்பு பற்றிய எதையும் நான் பேசக்கூடாது என்று என்னை எச்சரித்தார். ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி பற்றிய முழு உண்மைகளையும், அதில் சம்பந்தப்பட்டிருந்த ‘சக்தி’களைப் பற்றியும் அவர் முழுமையாக அறிந்திருந்தார் என்றே எனக்குத் தோன்றியது.
மாஜிஸ்டிரேட்டிடமோ, வேறு யாரிடமாவதோ -
இது குறித்த விவரங்களைக் கூறினால், நான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் என்னை கடுமையாக எச்சரித்தார். அவர் என்னிடம் சொல்லிய விதத்திலிருந்து, அவர் சந்திராசாமியையும் இன்னும் சில காங்கிரஸ் தலைவர்களையும் பாதுகாக்க விரும்புகிறார்
என்றே தோன்றியது. நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் – சிபிஐ – சிறப்பு புலனாய்வுக் குழு என்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்து விட்டது.
நான் கர்னாடகா போலீசைச் சேர்ந்த DCP கெம்பையா
அவர்களை பங்களூரில் சிவராசனும், சுபாவும் மறைவாக
தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவரது வாக்குமூலம், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை…
( ரங்கனாத் வாக்குமூலம் இங்கு முடிவடைகிறது )
———————————
இந்த இடத்தில் முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது …
1990-ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கொல்லப்பட்டார்கள். இந்தக் குழுவில் சிவராசனும் ஈடுபட்டிருந்தது பற்றி சொல்லப்பட்டது.
அந்த சமயத்தில் இவர்கள் எல்லோரும்
கொலைச்சம்பவத்திற்குப் பிறகு, உடனடியாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றனர். அதே போல், ராஜீவ் கொலை நிகழ்வு முடிந்தவுடன் சிவராசன் குழுவினர்
உடனடியாக இலங்கைக்கு தப்பிச் செல்லாதது ஏன்
என்பது தான் அந்த கேள்வி…!!!
1991 மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொலை நடந்தது.கிட்டத்தட்ட ஜூன் 23-ம் தேதி வரை -
ஒரு மாதத்திற்கும் மேலாக – சிவராசன் சென்னையில்தான் இருந்திருக்கிறான். சம்பவம் நடந்த ஸ்ரீபெரும்புதூருக்கும் கடற்கரைக்கும் அதிக தூரம் கிடையாது.
புலிகள் படகில் பறப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். இருந்தும் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, சிவராசன் சாலை மார்க்கமாக டெல்லி செல்லவே திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகிறது….. அது ஏன்….?
இதில் எழும் இன்னுமொரு முக்கியமான சந்தேகம், சிவராசன் இரட்டை வேடம் போட்டானோ என்பது. சிவராசன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு 1991 மார்ச் மாதம் சிங்கப்பூர், சவூதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தது தெரிய வந்திருக்கிறது… இது விசாரணையின் ஒரு முக்கிய பகுதி. ஆனால், இதற்கான விளக்கங்கள் எதுவும் கூறப்படவில்லை.
சிவராசன் எல்.டி.டி.இ. இயக்கத்தில் சேரும் முன்னர்
‘டெலோ’ வில் இருந்திருக்கிறார். டெலோ இயக்கத்தை
சேர்ந்தவர்கள் பணம் பெற்றுக்கொண்டு, அந்நிய சக்திகளுக்காக சில செயல்களில் ஈடுபட்ட விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.சிவராசன் -எல்.டி.டி.இ-யிலும் இருந்து ண்டு மற்றவர்களுக்காகவும் செயல்பட்டு இருக்கலாம் என்கிற கோணமும் இங்கு தெரிகிறது.
ஜெயின் கமிஷன் ரிப்போர்ட்டின்படி பிரபல
ஆயுத வியாபாரிகளான அட்னன் கஷொகி (Adnan Khashoggi) மற்றும் எர்னி மில்லர் (Ernie Miller)
மற்றும் சாமியார் சந்திராசாமி போன்றவர்களுக்கிடையே
மில்லியன் கணக்கில் டாலர் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
(சில வருடங்களுக்குப் பின் ஆட்சி மாறிய பிறகு,
சந்திராசாமி ஆசிரமத்தில் ரெய்டு நடந்தபோது,
இது பற்றிய ஆவணங்கள் ( Adnan Khashoggi பெயரில்
ச.சாமி வைத்திருந்த ட்ராப்டு உட்பட ) கைப்பற்றப்பட்டன…
நீண்ட கால விசாரணைகளுக்குப் பிறகு அந்நியச் செலாவணி மோசடி குற்றங்களுக்காக – மொத்தம் 13 வழக்குகள் – சந்திராசாமிக்கு டெல்லி கோர்ட் ஒன்று ஜூலை 2011-ல் ஒன்பது கோடி ரூபாய் அபராதம் விதித்தது )
அவுட்லுக் ஆங்கில இதழ் கூறியதன்படி சில ஆவணங்கள், கோப்புகள் அழிக்கப்பட்டன அல்லது காணாமல் போயின. அவற்றில் இருந்த தகவல்களுள் -
sswamy and rajiv
                            -( நண்பரா – பகைவரா….? )-

ச.சாமி மற்றும் சு.சாமிக்கும் வெளிநாட்டு சக்திகள்
சிலவற்றிற்கும் இடையே நிகழ்ந்த ரகசிய உரையாடல்களை இந்திய உளவு அமைப்பான ‘ரா’ இடைமறித்துக் கேட்ட தகவல்களும், கொலை நிகழ்ந்த நாளில் இரண்டு சாமிகளும் போய் வந்த இடங்கள், பயணங்கள் குறித்த  தகவல்களும் அடங்கும்.
இந்த ஆவணங்கள் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில்
அழிக்கப்பட்டன அல்லது காணாமல் போயின என்றால் -
யாரைக் காப்பாற்றுவதற்காக, பாதுகாப்பதற்காக
அது நடந்திருக்கும் …?
ச.சாமியையா, சு.சாமியையா அல்லது
காங்கிரஸ் தலைவர்கள் வேறு யாரையேனுமா ……. ?
ஜெயின் கமிஷன் ச.சாமிக்கும் – சு.சாமிக்கும் இடையே
நிலவிய உறவைப்பற்றி பல துண்டு துண்டான
தகவல்களைச் சேகரித்திருக்கிறது. அதில் ஒன்று -
கொலை நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு
-1995-ல் ச.சாமியும், சு.சாமியும் ஒன்றாகச் சேர்ந்து
லண்டனுக்குச் சென்றிருக்கிறார்கள்.
இருவரும் Halkin Hotel என்கிற ஒரே ஹோட்டலில்
தங்கி இருந்திருக்கிறார்கள். இருவருக்குமான
ஹோட்டல் பில்’லை சந்திராசாமியே கொடுத்திருக்கிறார்.
இது குறித்து ஜெயின் கமிஷன் அறிக்கையில்
ஒரு பகுதி கூறுகிறது -
“Dr Swamy cannot be believed when he changes
his versions and when he is indefinite and
when he does not support his version by
any corroboratory evidence.
The divergence in the statements of Chandraswami
and Dr Swamy on the purpose of their joint visit to
London in 1995 does raise suspicions.”
……..
On the explanation of D.R. Karthikeyan, special director, CBI,
regarding the international ramifications, Jain writes that -
” it does not completely rule out the possibility of involvement beyond the LTTE.
If the SIT had investigated Chandraswami, Mahant Sewa Dass and interrogated ChandraShekhar, Swamy, T.N. Seshan and Narasimha Rao, it would have helped the Commission….”
ஜெயின் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட பின்னரும்
இவர்களது வெளிநாட்டு பயணங்கள், மற்றும் தொடர்புகள் பற்றிய தகவல்களை எல்லாம் சி.பி.ஐ-யும் சிறப்புப் புலனாய்வும் தீவிர கவனத்தில் எடுத்துகொண்டு விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
( நான் முன்னதாகச் சொல்லியிருந்த, (Part4)
தமிழக டிஜிபி மோகன் தாசின் ‘the Assasination’
நாவல் நினைவிற்கு வருகிறதா …?
அந்த நாவலின்படி பாதர் மூன்சைன்னுக்கு (சந்திராசாமி)
ஜார்வின் (ராஜீவ் காந்தி) மீது போபர்ஸ் இராணுவ பீரங்கி
பேரத்திலிருந்து விரோதம் தொடங்குகிறது.
டிஜிபி மோகன் தாஸ் கூறியிருந்த மற்றொரு முக்கியமான தகவல், சிறப்பு புலன் விசாரணைக்குழுவின் தலைவரை
திருமதி சோனியா காந்தி தான் தேர்ந்தெடுத்தார் என்பது….!!! )
புலன் விசாரணை தொடக்கம் முதல் – சுப்ரீம் கோர்ட் வரை – அனைத்து உண்மைகளையும் குழப்பி,
பல சாட்சியங்களையும் அழித்து அல்லது மறைத்து -
புலிகள் மட்டும் தான் இதற்குக் காரணம் என்கிற
பிடிவாதமான ஒரு முடிவு திணிக்கப்பட்டிருக்கிறது
என்று சி.பி.ஐ- மீது ஒரு சாரார் குற்றம் சாட்டினால் -
அதற்கான சரியான விளக்கங்களையோ, பின்னணிகளைக்
குறித்த காரணங்களையோ -
சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்காமல்,
இந்த வாதங்கள் புறம் தள்ளப்பட்டது ஏன்….?
யாரைக் காப்பாற்ற….?
சந்திராசாமியையா …?
சுப்ரமணியன் சுவாமியையா …?
அல்லது காங்கிரஸ் தலைவர் யாரையாவதா …?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...