Wednesday, October 29, 2014

சாமிகளின் சாகசங்கள் தொடர்கிறது…… சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா …?

chandra and subramanian swamy
(  சேர்ந்தே இருந்தவர்கள் தான்  –  சந்திராசாமியும் அவரது நண்பர் சுப்ரமணியன் சுவாமியும் …….  !!!  )
——-
அரசியல்வாதி என்கிற போர்வையில் இயங்கிக்
கொண்டிருக்கிற ஒரு political blackmailer பற்றிய
இடுகைத் தொடர் இது. பயங்கரமான கிரிமினல் மூளை,
பல முக்கிய மனிதர்களைப் பற்றிய தனிப்பட்ட
ரகசியங்கள் கைவசம், (தற்போதைக்கு மத்தியில்
ஆளும் கட்சியின் அதிகாரத் துணை ) ஆகியவை
இந்தப் பெரியமனிதரின் பலம்.
நான் இந்த இடுகைத் தொடரில் தரும் தகவல்களை
ஏதோ எரிச்சல் காரணமாக எழுதப்படுகிற இடுகை என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் இங்கு எழுதும் அத்தனை விஷயங்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. (பல விஷயங்கள் பப்ளிக் டொமெய்னிலேயே உள்ளன ). பெரும்பாலான மக்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட மற்றும் பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாத பல தகவல்களை சேகரித்து நான் இங்கு தருகிறேன். இதில் எதுவுமே என் கற்பனை அல்ல.
இந்த தலைப்பில் நான் இதற்கு முன் தந்த தகவல்களுக்கும் இனி தரவிருக்கின்ற தகவல்களுக்கும் இது பொருந்தும்.
முதலில் தனித்தனியான சில தகவல்கள் -
—————
அமெரிக்காவில் BCCI bank scam-ஐ விசாரிக்க
William Carry என்கிற அமெரிக்க செனட்டர் தலைமையில்
ஒரு சப்-கமிட்டி நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டி
BCCI bank-ன் கணக்குகளை பரிசீலித்த பிறகு
சில தகவல்களை வெளியிட்டது. அதன்படி -
உலக அளவில் அறியப்பட்ட ஆயுத வியாபாரிகளான -
(international arms dealers )
Adnan Khashoggi,
Ernie Miller
ஆகியோர் அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தது
கண்டறியப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால், இவர்கள் இருவரும் சாமியார் சந்திராசாமியின் சீடர்கள்.
இந்த கமிட்டி மேலும் வெளியிட்ட தகவல் -
இவர்களது கணக்கிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு
84 மில்லியன் டாலர் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.
அந்தப் பரிமாற்றம் ராஜீவ் கொலை தொடர்புடையதாக
இருக்கலாம்….
——————-
ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின் போது
ஜூலை 17, 1991 அன்று – மிராசுதார் ஷண்முகம் என்பவர் SIT யிடம் சிக்கினார்.
மே 1, 1991 -அன்று சிவராசன் குழுவினர் இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக தமிழகம் வந்து சேர்ந்தபோதுஷண்முகம் தான் அவர்களை வரவேற்று அதன் பின் பல விஷயங்களில் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்.
அவர் வசம் ராஜீவ் கொலைக்கான சதித்திட்டம் மற்றும்
அதில் சம்பந்தப்பட்டிருந்த இந்திய அரசியல்வாதிகள் பற்றிய சில தகவல்கள் ரகசிய குறிப்புகளாக (coded messages ) இருந்தன என்று ஒரு செய்தி. SIT அவரை விசாரணைக்காக பிடித்து, தன் பாதுகாப்பில் வைத்திருந்தபோது, அவர் தப்பித்து ஓடி விட்டதாக SIT- யால் பிறகு சொல்லப்பட்டது.
பிற்பாடு அவர், பிணமாக ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரிடமிருந்த ராஜீவ் கொலை பற்றிய விவரங்கள் அடங்கிய ரகசியத் தகவல்கள் என்ன ஆயின என்பது பற்றிய விஷயம் எதுவுமே பின்னர் வெளிவரவில்லை.
முன்னாள் தமிழக டிஜிபி மோகன் தாஸ் இது பற்றிக்
கூறும்போது,
“சண்முகம் தற்கொலை செய்துகொண்டிருக்க முடியாது -
அவர் நிச்சயமாகக் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார்.
SIT பிடியிலிருந்தபோதும், அங்கிருந்து தப்பி ஓடியபோதும், வெள்ளை வேட்டி கட்டியிருந்த சண்முகம் – பின்னர் பிணமாகத் தொங்கும்போது லுங்கியில் தொங்கிக் கொண்டிருந்தது எப்படி ..?” என்று வினா எழுப்பினார்…. ஆனால் – பதில் ஏதும் கிடைக்கவில்லை….
——————–
முன்னாள் மத்திய அமைச்சர் கே.கே.திவாரி
“ராஜீவ் கொலைக்கான சதித்திட்டம் உதித்தது
சந்திராசாமியிடமிருந்து தான். அவருடன் சில
அந்நிய சக்திகளும் சேர்ந்திருந்தன” என்று கூறினார்.
ஆனால், இது அவரது அனுமானம் மட்டுமே. அவரால்
ஆதாரங்கள் எதையும் கொடுக்க முடியவில்லை.
————–
இந்த கொலையில் புலிகள் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருந்தனரா அல்லது இதன் பின்னணியில் உள்நாட்டு, வெளிநாட்டு சதி எதாவது இருக்கிறதா என்பதைப் பற்றி,
இந்தக் கொலை பற்றி தீவிரமாக விசாரித்த ஜெயின் கமிஷனால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.
ஆனால், நரசிம்ம ராவ் அரசு ஜெயின் கமிஷனிடமிருந்த
பல தகவல்களை மறைத்ததும்,
கமிஷனின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தராததும்,
கொலைக்குற்றத்தின் பின்னணியில் இருந்த சில முக்கிய மனிதர்களை பாதுகாக்க நரசிம்ம ராவ் அரசு முயன்றதோ என்கிற எண்ணத்தை உண்டு பண்ணுவது உண்மை.
சந்திராசாமிக்கும், சுப்ரமணியன் சுவாமிக்கும்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்த தொடர்புகள்
குறித்து பலர், ஜெயின் கமிஷன் உட்பட பல இடங்களில் கேள்விகள் எழுப்பினர்.
ஜெயின் கமிஷன், சுப்ரமணியன் சுவாமியை தீவிர சிபியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தது.
ஆனாலும், சிபிஐ இவர்களை விசாரிப்பதில் அக்கரை
காட்டவில்லை. ஏனோ …?
அந்த சாமிக்கும், இந்த சாமிகளுக்கும் தான் வெளிச்சம்….!!!
————————
ஜெ. ரங்கனாத்….40 வயதுடைய இவர்
கர்னாடகாவில் வசித்து வந்த ஒரு தமிழர்.
சிவராசனும், சுபாவும் – தன்னுடைய வீட்டில் இருக்கிறார்கள் என்ற தகவலை போலீசுக்குத் தெரிவித்தவரே இவர் தான்.
ஆனால், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக
ஆகஸ்டு 18,1991-அன்று, SIT யால் இவரும் கைது
செய்யப்பட்டு, ராஜீவ் கொலைவழக்கில் ஒரு குற்றவாளியாக ( 26வது எண் ) சேர்க்கப்பட்டு, அவருக்கும், முதலில் சிறப்பு நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ( பின்னர், ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பிறகு, அப்பீலில் – 1998, மே 11 அன்றுசுப்ரீம் கோர்ட்டால் ரங்கனாத் விடுவிக்கப்பட்டார்.)
வழக்கு நடந்து கொண்டிருந்த போது, ஜெயிலில் இருந்தே இந்த ரங்கனாத் ‘Outlook,’ ஆங்கில செய்தி இதழில் பணிபுரிந்து வந்த செய்தியாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் மூலமாக ஜெயின் கமிஷனுக்கு ஒரு வாக்குமூலம் கொடுத்தார்.
கொலைக்கும்பலைச் சேர்ந்த சிவராசன், சுபா ஆகியோரும், அவர்களைச் சேர்ந்த இன்னும் 5 பேரும்,
1991, ஆகஸ்ட் 6-ந்தேதி – ரங்கனாத் வீட்டின் பின்புற வாசல்
வழியே, பலவந்தமாக உள்ளே நுழைந்து ஆகஸ்ட்            20-ந்தேதி பிணமாகப் பிடிபடும் வரை அங்கேயே தங்கி இருந்தனர்.
அவர்கள் தன் வீட்டில் தங்கி இருக்கும் விவரத்தை
போலீசுக்குத் தெரிவித்தவரே ரங்கனாத் தான். பின்னர்,
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது
செய்யப்பட்டு தண்டனை பெற்றவரும் அவரே.
அவர் வீட்டில் தங்கி இருந்தபோது, சிவராசன், சுபா
ஆகியோர் பேசிக்கொண்டிருந்த பல விஷயங்களைப்
பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் இந்த
ரங்கனாத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மட்டுமே.
ஜெயின் கமிஷன் முன்னர் ரங்கனாத் கொடுத்த
வாக்குமூலத்தில் அவர் சிபிஐ மீது பல குற்றச்சாட்டுக்களை கூறி இருக்கிறார்.
சிவராசனும், அவனது கூட்டாளிகளும், பத்திரமாக
இந்தியாவை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச்செல்ல உதவுவதாக சந்திராசாமி கூறி இருந்தாராம்.
சந்திராசாமி மற்றும் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தனக்கு தெரிய வந்தது என்றும்,
ஆனால் இந்த தகவல்களை எல்லாம் ரங்கனாத் சிபிஐ யிடம் கூறியபோது, அவர்கள் பதிவு செய்ய மறுத்து விட்டனராம்.
ராஜீவ் காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் காரணம் என்கிற தியரியை விட்டு வெளியே வழக்கை கொண்டு செல்ல சிபிஐ விரும்பவில்லை -என்று புகார் சொல்லி இருக்கிறார் ரங்கனாத். எந்தவித அரசியல் தொடர்போ, பின்னணியோ இல்லாத தன் சாட்சியத்தை, ஜெயின் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ரங்கனாத்.
அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்டிருந்த பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரங்கனாத், சிறை அதிகாரியின் ஒப்புதல் கையெழுத்துடன், தன்னிடம் பேட்டி கண்ட outlook -இதழின் செய்தியாளர் திரு பன்னீர்செல்வம் கேட்ட பல கேள்விகளுக்கு
பதில் கூறி இருக்கிறார்.
பொதிந்திருக்கும் மிக முக்கியமான ரகசியங்கள் பல
அவற்றிலிருந்து வெளி வருகின்றன -
கேள்வி – சிவராசனும், சுபாவும் – தங்களுக்கு சந்திராசாமியுடன் உள்ள தொடர்பு பற்றி உங்களிடம் கூறினார்களா …?
பதில் – அவர்கள், சந்திராசாமியோடு தங்களுக்குள்ள
தொடர்புகளைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதோடு,  கர்னாடகாவைச் சேர்ந்த, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்த ஒரு காங்கிரஸ் தலைவரைப் பற்றியும் – அவர் மூலம் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்கள் தங்களுக்கு எப்படிக் கிடைத்தன என்பதைப்பற்றியும் கூட கூறினாகள்.
அதுமட்டுமல்லாமல், சிவராசன், சந்திராசாமியை
தன்னுடைய ‘God Father’ என்றும் கூறினான்.,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...