கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயருடன் மத்திய, மாநில அமைச்சர்கள், பொலிஸ் ஐஜி ஆகியோர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சிடி தன்னிடம் இருப்பதாக பிஜு ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வீடு மற்றும் நிறுவனங்களில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சரிதா நாயர், அவரது 2வது கணவர் பிஜு ராதா கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முதல்வர் உம்மன்சாண்டியின் முன்னாள் உதவியாளர் பென்னி ஜோப்பனையும் பொலிசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பிஜு ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் ஜேக்கப் மேத்யூ நேற்று கொச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், கேரளாவில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் சரிதா நாயருடன் நெருக்கமாக இருந்துள்ளனர்.
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச் சர் வேணுகோபால், கேரள சுற்றுலா துறை அமைச்சர் அனில்குமார், முன்னாள் அமைச்சர் கணேஷ் குமார் மற்றும் குற்றப்பிரிவு ஐஜி அஜித்குமார் ஆகியோர் சரிதா நாயருடன் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.
இதை அவர்களுக்கு தெரியாமலேயே சரிதா நாயர் படம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள் அடங்கிய சிடி.யும், பென்டிரைவும் என்னிடம் உள்ளன, இவர்கள் தேக்கடியில் உள்ள சுற்றுலா விடுதி மற்றும் டெல்லியில் உள்ள ஹொட்டலில் சரிதா நாயரு டன் நெருக்கமாக இருந்துள்ளனர் என்றும் பிஜு ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அனுமதி அளித்தால் அந்த காட்சிகளை வெளியிட தயாராக உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment