செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பில் கூறியுள்ளார்.
நீதிமன்றம் என்ன இலாப நட்டம் பார்க்கும் வியாபார தளமா? சட்டம் தான் அதன் மூலதனமா? அதை வைத்து 6 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட குன்கா முயன்றிருக்கிறாரா?
ஒரு வேளை செயலலிதாவை நிரபராதி என கருதி இருந்தால் இந்த 6 கோடி ரூபாயை யாரிடம் வசூலித்து இருப்பார்? செயலலிதாவை குற்றவாளி என்று தண்டித்தால் நீதிமன்றத்திற்கு 6 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். நிரபராதி என விடுதலை செய்தால் 6 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அப்படியானால் நீதிபதி இலாபத்தை பார்ப்பாரா நட்டத்தை பார்ப்பாரா?
நீதிதேவதையின் சின்னமான தராசை குன்கா தவறாக புறிந்துகொண்டாரோ?
நல்ல நீதிபதி. வளர்க்க நீதித்துறையின் மாண்பு.
எந்த அமைப்பும் மக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகும்போது தான் அதன் தவறுகள் சுட்டிக்காட்டப்படும். மேலும் அந்த அமைப்பை தூய்மைப்படுத்த முடியும். நீதிமன்றங்களும் அப்படி தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்திலேயே பல மாற்றங்களை கொண்டு வந்து விட்டோம். ஆனால் நீதிமன்றங்கள் மட்டும் 3 கோடி வழக்குகளை தேக்கிவைத்துக்கொண்டு பெருமை படுகின்றன.
எனக்கு தெரிந்து தீபாவளிக்கு பள்ளிகளுக்கு 1 நாள் விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு 2 நாள் விடுமுறை. ஆனால் நீதிமன்றத்திற்கு 10 நாள் விடுமுறை. என்னத்த வெட்டி முறிச்சிட்டாங்கனு இவங்களுக்கு இத்தனை நாள் விடுமுறை?
இந்த அநியாயத்தை எல்லாம் கேட்க நாட்டில் ஆளே இல்லையா?
செயலலிதா 18 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்தார் என்று வாய்கிழிய பேசுகிறோம். இந்த 18 வருடத்தில் நீதிமன்றத்தின் விடுமுறை நாட்கள் எத்தனை என கணக்கிட்டு சொல்ல முடியுமா? அப்படி பார்த்தால் செயலலிதாவை விட நீதிமன்றம் தான் அதிக வாய்தாக்கள் வாங்கி இருக்கும்.
நீதிமன்றத்தின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுங்கள். நீதிபதியை பாராட்டி எழுதும் அதே நேரம், நீதிபதியின் தவறுகளையும் சுட்டிக்கட்டுங்கள்.
No comments:
Post a Comment