Friday, October 17, 2014

கருப்பு பண விவகாரம்: மத்திய அரசு திடீர் பல்டி

இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில், கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தெரிவிக்க முடியாது' என, மத்திய அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது



'வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரத்தை அறிந்து, அந்த பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.இதையடுத்து, கருப்பு பண மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கைகளில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால், ஒரு சில நாடுகளுடன், நாம், இரட்டை வரி விதிப்பு முறை ஒப்பந்தம் செய்துள்ளோம்.இந்த நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டாம் என, தெரிவித்துள்ளன. எனவே, அந்த நாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் விவரங்களை தெரிவிக்க முடியாது. இதையும் மீறி அந்த விவரங்களை தெரிவித்தால், மற்ற நாடுகள், இதுபோன்ற ஒப்பந்தங்களை நம்முடன் மேற்கொள்வதற்கு, தயக்கம் காட்டும்.இவ்வாறு, அந்த அறிக்கை யில் கூறப்பட்டிருந்தது.


கடிதம்:



அப்போது, மனுதாரரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ''அரசு தெரிவித்துள்ள இந்த விளக்கத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்க கூடாது. பணத்தை பதுக்கி வைத்துள்ள குற்றவாளிகள் என்ன கூறுவரோ, அதே பதிலைத் தான், அரசு கூறியுள்ளது,'' என்றார்.

விசாரணை முடிந்தபின், கோர்ட்டுக்கு வெளியில், ராம்ஜெத்மலானி கூறுகையில், ''கருப்பு பண விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்; அவரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்,'' என்றார்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, 'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்போம்' என, அந்த கட்சி தலைவர்கள் தெரிவித்து இருந்தனர்.

தற்போது, 'கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் விவரங்களை தெரிவிக்க முடியாது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறுகையில், ''வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள அனைத்து பணத்தையும் கருப்பு பணம் என, கூறி விட முடியாது. இந்தியர்கள், வெளிநாடுகளில் வங்கி கணக்கை துவங்குவது குற்றச் செயல் அல்ல,'' என்றார்.

ஆட்சிக்கு வந்தவுடன் கருப்பு பணத்தை மீட்க போவதாக தெரிவித்த பா.ஜ., தலைவர்கள், ஆட்சியில் அமர்ந்தவுடன் பல்டி அடித்து விட்டனர். அவர்கள் செய்வது ஒன்று, சொல்வது ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்டவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
அஜய் மேக்கேன்
காங்., பொதுச் செயலர்

முந்தைய காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு வெளிநாடுகளுடன் செய்த ஒப்பந்தங்கள் தான், கருப்பு பண விவரங்களை தெரிவிக்க முடியாததற்கு முட்டு கட்டையாக உள்ளது. ஒருவர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்ட பின் தான், அவர் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் பற்றிய விவரங்களை தெரிவிக்க முடியும்.
அருண் ஜெட்லி
மத்திய நிதி அமைச்சர் - பா.ஜ.,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...