Wednesday, October 8, 2014

இப்படியெல்லாம் கேள்விகேட்டா என்னா பண்ணுவீங்க?



மத்திய அரசு நடத்திய ஸ்டாஃப் செலெக்ஷன் கமிஷனின் சி.சி.எல் தேர்வில் இந்த ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் நிஜமாலுமே செம ஷாக்.
கீழ்க்கண்ட நடிகைகளில் யார் உயரமானவர்?
ஏ. கத்ரினா கைஃப்
பி. தீபிகா படுகோனே
சி. பிரீத்தி ஜிந்தா
டி. ஹியூமா குரேஷி
இதுபோல கேள்விகள் இதற்கு முன் கேட்கப்பட்டிருக்கிறதா என விசாரித்ததில் சிக்கியவை இவை.
கீழ்க்கண்ட நடிகைகளில் யார் நான்கு முதல்வர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்?
எ. பண்டரிபாய்
பி. கமலா பாய்
சி. மனோரமா
டி. சச்சு
- இப்படி ஒரு கேள்வியை ஒருமுறை டி.என்.பி.எஸ்.சி எக்ஸாமில் கேட்டிருக்கிறார்கள்.
மனோரமா சரியான விடை.
பொருத்துக:
மதுவகை தயாரிக்கப்படும் பொருள்
பீர் -                      பார்லி அரிசி
பிராண்டி -         திராட்சை
விஸ்கி -            சோளம்
ரம்-                        கரும்பு  
சில வருடங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் இப்படியும்கூட கேட்டிருக்கிறார்கள்.
விசாரித்தவரையில் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனின் இன்டர்வியூக்களிலும்கூட சமயங்களில் கில்மா கேள்விகள் கேட்கப்படுமாம். அது எல்லாமே உங்களின் பொறுமையையும் ஒளிவு மறைவில்லாமல் பேசும் குணத்தைப் பிரதிபலிப்பதற்காகவுமாம்.  ஷாக் ஆகாமல் படிச்சிக்கோங்க.
'உங்களுக்குப் பிடித்த போர்ன் ஸ்டார் யார்?’
'அடல்ட் மூவீஸ் பார்த்தது உண்டா?’
'உங்கள் நண்பர்கள் குடிக்கும்போதும் புகைக்கும்போதும், நீங்கள் ஏன் அதைச் செய்ய மறுக்கிறீர்கள்?’
'உங்களுக்கு காதலர்/காதலி உண்டா?’
'எதனால் பிரேக்-அப் ஆனது?’
'யாரிடமாவது பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் உண்டா?’
கடைசியாய் ஒரு கேள்வி... 
இது வதந்தியாகவும் இருக்கலாம். ஆனால், 80-களில் ஐ.ஏ.எஸ் இன்டர்வியூவின்போது ஒருமுறை கேட்கப்பட்டதாம். ''திடீரென ஒருநாள் காலையில் நீங்கள் கண்விழித்து பார்க்கும்போது கர்ப்பமாய் இருக்கிறீர்கள். எப்படி ரியாக்ட் செய்வீர்கள்?'' என்று ஒரு பெண் ஒருவரிடம் கேட்டார்களாம். 'கணவரை எழுப்பி ஸ்வீட் கொடுப்பேன்’ என்று பதில் சொன்னாராம் அந்தப் புத்திசாலிப் பெண்!
அவ்வ்வ்வ்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...