பங்கு போடும் முதலாளித்துவம்!
‘குரோனி கேப்பிட்டலிசம் என்றால் என்ன?
இதை சமீப காலத்தில் உபயோகிக்க காரணம் என்ன?
நம் நாட்டில், ‘குரோனி கேப்பிட்டலிசம் எந்த அளவில் உள்ளது, அரசியல்வாதிகள் ஏன் இந்த வார்த்தையை உபயோகிக்கின்றனர்?
அரசு தொழிற்துறையில் இறங்கினால், லஞ்சம் தான் ஏகமாக பரவுகிறது. ‘தனிப்பட்ட தொழில் முனைவோர், இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த முறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
இதை நான் ஆதரிக்கிறேன்; ஆனால், குரோனி கேப்பிட்டலிசத்தை அல்ல என்று சமீபத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.
வாழ்க்கை தரம்:
யார் கோடீஸ்வரர்?:
வாழ்க்கை தரம்:
அதிகார வர்க்கமும், தொழில் முனைவோரும் கை கோர்த்து, ஏகபோக வர்த்தகத்தை வளர்த்து தொழில் சலுகைகளைப் பெற்று, தாம் செய்யும் தொழிலில் போட்டிகளையும் கூடியவரை தவிர்த்து, கொள்ளை லாபம் சம்பாதித்து, அதை இரு சாராரும் பங்கு போட்டுக் கொள்வது தான், ‘குரோனி கேப்பிட்டலிசம்! அதாவது, கை கோர்க்கும் அல்லது பங்கு போடும் முதலாளித்துவம் என்று கூறலாம்.
நம் நாட்டில் செல்வம், எந்த அளவுக்கு ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி உள்ளது அல்லது பரவலாக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
நம் நாட்டில் செல்வம், எந்த அளவுக்கு ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி உள்ளது அல்லது பரவலாக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
எவ்வளவு செல்வம், யாரிடம் உள்ளது?
நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் தான், நாட்டின் வளர்ச்சிக்கு அளவுகோல். பொருளாதார வளர்ச்சியின் பயன், பரவலாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறதா அல்லது மிகச் சில பேர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பெரும்பகுதி பலன்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனரா என்று கண்டறிய வேண்டும்.
நம் நாட்டின் செல்வம், எந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி உள்ளது அல்லது பரவலாக்கப்பட்டுள்ளது? எவ்வளவு செல்வம் யாரிடம் உள்ளது? இதைப் பார்க்கும்போது, நம் நாட்டின் செல்வம் மிகக் குறைவான கோடீஸ்வரர்களிடமே மையம் கொண்டுள்ளது.

வெளிநாட்டுப் பத்திரிகையான, ‘போர்ப்ஸ் வெளியிட்டுள்ள ௨௦௧௧ம் ஆண்டிற்கான பணக்காரர்களின் பட்டியலின்படி,
நம் நாட்டின் மொத்த செல்வத்தில், 17 சதவீதம், 55 பெரிய கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. ஆனால், நம்மை விட பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் சீனாவில், 4 சதவீத்தைத் தான், 115 கோடீஸ்வரர்களும் சேர்ந்து அனுபவிக்கின்றனர்.
யார் கோடீஸ்வரர்?:
சர்வதேச மதிப்பில், ஒரு பில்லியன் டாலர், அதாவது, 6,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் எனப்படுகின்றனர். நம் நாட்டை விட, சீனாவின் பொருளாதாரம் நான்கு மடங்கு பெரிதாக இருப்பினும், 2014-ம்ஆண்டின், ‘போர்ப்ஸ் செல்வந்தர்களின் பட்டியலின்படி, மூன்று இந்தியர்கள் சீனாவின் மிகப்பெரிய செல்வந்தரைக் காட்டிலும் பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர்.
2013 ம் ஆண்டு இந்திய செல்வந்தர்களின் மதிப்பு, சீனாவின் செல்வந்தர்களைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
நாம் அமெரிக்கா, சீனா அல்லது ஐரோப்பிய நாடுகளின் செல்வந்தர்களின் பட்டியலை ஆராய்ந்தால், ஆண்டுகள் செல்லச் செல்ல புதுப்புது பெயர்களும் வெளிவரும்.
நாம் அமெரிக்கா, சீனா அல்லது ஐரோப்பிய நாடுகளின் செல்வந்தர்களின் பட்டியலை ஆராய்ந்தால், ஆண்டுகள் செல்லச் செல்ல புதுப்புது பெயர்களும் வெளிவரும்.
தர வரிசையில் ஏற்ற இறக்கங்களும் சகஜம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, கோடீஸ்வரர்களின் பட்டியலில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. மாறாக, அதே கோடீஸ்வரர்களே மேலும் மேலும் வளர்கின்றனர். இந்திய செல்வந்தர்களின் இத்தகைய கெட்டிக்காரத்தனம், மகிழ்ச்சி அளிக்கக் கூடியதோ அல்லது பாராட்டப்படக் கூடியதோ அல்ல.
மாறாக, இது மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம்.
எந்த பொருளாதார அமைப்பிலும், அளவுக்கு மீறி மக்கள் வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும், பொருளாதாரத்தின் அளவுக்கு அதிகமான விகிதத்தில் கோடீஸ்வரர்கள் தோன்றினாலும், அந்த பொருளாதாரத்தில் தேங்கும் நிலை ஏற்படலாம் அல்லது தொடர்ந்து அந்த நிலை நீடித்தால் பொருளாதார அமைப்பு, ஒட்டுமொத்தமாக தடுமாறி கவிழ்ந்துவிடும்.
நாம் சுதந்திரம் அடைந்தவுடன் சோஷலிசத்தை உருவாக்குகிறோம் என்று பறைசாற்றிவிட்டு, எல்லா தொழில் முயற்சிகளிலும் அனுமதிகளையும், கட்டுப்பாடுகளையும் மாறி மாறி ஆட்படுத்திய தவறான பொருளாதாரக் கொள்கை தான், நம் இந்தியா ஏழ்மை நாடாகவே இருப்பதற்குக் காரணம்.
பல ஆண்டுகளாக, சில வேண்டியவர்களுக்கு மட்டும் உற்பத்தியை கட்டுப்படுத்தும் விதத்தில் உரிமங்களும், லைசென்ஸ்களும் கொடுத்ததால், அவர்கள் பாதுகாப்பாக, போட்டியின்றி தொழில் செய்வதுடன், அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை, போட்டியாளர்கள் இல்லாத காரணத்தால், ஏகபோக சந்தையில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடைந்தனர்.
இதன்மூலம், தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை;

தொழில்நுட்பமும் வளரவில்லை.
நாம் தொழில்நுட்பத்தில் பின்தங்கி விட்டது தான் மிச்சம்,
அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டப்பட்ட தொழில் அதிபர்கள் மட்டுமே, கோடீஸ்வரர்கள் ஆக முடிந்தது.
கனிம வளங்கள்:
கனிம வளங்கள்:
தொழில் துவங்க அனுமதி, சலுகைகள் போன்றவை, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரிடம் தொடர்பும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைத்தன. கட்டுப்பாடுகளுடன் கூடிய லைசென்ஸ் ராஜ் காரணமாக, பல முனைப்புள்ள, துடிப்பான தொழில் முனைவோர், தொழில் துவங்க முன்வரவில்லை.
சிறந்த புத்திக்கூர்மையுள்ள தொழில் முனைவோர்களாக வாய்ப்பு பெற வேண்டிய இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு அவர்களின் சிந்தனைக்கேற்றவாறு வேலை வாய்ப்புகளையும், சந்தைப் பொருளாதாரத்தையும் தங்களுக்கு சாதகமாக்கி, தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இரும்புத்தாது, நிலக்கரி சுரங்கங்கள், கனிம வளங்கள் மற்றும் தாதுப் பொருட்களை எடுக்கும் உரிமை, பெரிய சிறிய மின் உற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு துறைகளில் அனுமதி, எண்ணெய் வளங்கள், மின்சார உற்பத்தி போன்ற துறைகளில் அரசின் தயவும் அனுமதியும் பெற்று, அந்த அரசின் பாதுகாப்போடும், அனுசரணையோடும் தொழில் செய்து, அதன்மூலம் முன்னேறியவர்கள் தான் பெருவாரியாக இந்திய கோடீஸ்வரர்கள்.
லைசென்ஸ் முறையின் மூலம் தங்களுக்கு போட்டியாளர்கள் வராமல் பார்த்துக் கொண்டனர்.
லைசென்ஸ் முறையின் மூலம் தங்களுக்கு போட்டியாளர்கள் வராமல் பார்த்துக் கொண்டனர்.
அதனால், அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் தரம் குறைவாக இருப்பினும், அதிகமான விலைக்கு விற்றனர்.
இறக்குமதி, ஏற்றுமதிக்கான வரிகளிலும், முறைகளிலும் இவர்களுக்காக அரசு வளைந்து கொடுத்ததும் உண்டு.
போட்டியில்லாத காரணத்தால், செயற்கையான தட்டுப்பாடுகளையும் உண்டாக்கி இரும்பு, சிமென்ட் மற்றும் பல உலோகப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதும் உண்டு. 1947க்குப் பின், 40 ஆண்டு காலம் இந்திய மக்கள் புதிய காரோ அல்லது இருசக்கர வாகனமோ வாங்க ஐந்தாண்டுகள் முதல், பத்தாண்டுகள் வரை காத்துக்கிடந்ததும் உண்டு.

இருப்பினும், புதிய வாகன உற்பத்திக்கு யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட பின்னர், இத்துறையை பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி, அதன் பலனை அனுபவிக்கின்றனர்.
ஆனால், அன்றும் சரி, இன்றும் சரி... சோஷலிசத்தை கைவிட்டு விட்டோம் என, வெளிப்படையாக சொல்ல எந்த அரசியல்வாதிக்கும் தைரியமில்லை. அது மட்டுமல்ல, இந்தியா முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட பிறகும், அதை வெளியே சொல்ல பயன்படுகின்றனர்.
ரகசிய உடன்பாடு:

முதலாளித்துவத்தின் முக்கிய அம்சம், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் தான். இதற்கு தேவை மாற்றங்களும், புதிய முறைகளும். இதன் சிறப்பே தொடர்ந்து நடைமுறைக்கு வரும் மாற்றங்களும், புதிய முறைகளும் தான். ஜோசப் சம்டரர் என்ற பொருளாதார நிபுணர், ‘காலாவதியான தொழில்முறைகளும், கோட்பாடுகளும் காணாமல் போவது ஆக்கபூர்வமான அழிவு – அது நல்லது என்று கூறுகிறார்.
ஆம்; அது ஆரோக்கியமான போட்டிகளால் ஏற்படும் நல்ல மாற்றம்.ஆனால், நம் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த செல்வந்தர்கள் கொள்கைகளை உருவாக்கும் அரசியல்வாதிகளுடன் ஒன்று கூடி, ரகசியமாக உடன்பாடு ஏற்படுத்தி, அவர்களுடைய போட்டிக்கு எல்லை வரையறுத்துக் கொள்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள், ஆக்கப்பூர்வமான முதலாளிதுவத்தையும், நடைமுறைகளையும் பாதிக்கின்றன.

ஆகவே, இந்தியாவின் கைகோர்க்கும் அல்லது பங்கு போடும் கோடீஸ்வரர்கள், உண்மையிலேயே முதலாளித்துவத்தின் நல்ல அம்சங்களுக்கு முக்கிய விரோதிகளாக திகழ்கின்றனர்.
இது, இந்திய நாட்டின் இன்றைய நிலை. வாய்ப்புகளிலும், வசதிகளிலும், கல்வி, அடிப்படை சுகாதாரம் போன்றவற்றிலும் இருப்போருக்கும், இல்லாதவர்களுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்கும் போன்றது. இன்று ஆட்சி மாறிய சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்கால பாதை எது? இந்திய தொழில் முனைவோர் என்ன செய்யப் போகின்றனர்?சிந்திக்கலாம்...

No comments:
Post a Comment