செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்தவருக்கு சாமீன் வழங்க கோரினால் நாங்கள் ஊழலுக்கு எதிராக உள்ளோம் என்று சுய தம்பட்டம் அடித்திருக்கிறார் நீதிபதி சந்திரசேகரா
சந்திரசேகரா போன்ற நீதிபதிகள் உண்மையில் ஊழலுக்கு எதிராக இருந்தால் தங்கள் சொத்துப்பட்டியலை முதலில் பொதுத்தளத்தில் வெளியிடட்டும். வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரரிடம் வாங்கும் பணத்துக்கு ரசீது தரட்டும்.
நீதிமன்றம் என்பது நீதியை நிலைநாட்டும் அமைப்புதானே தவிர, ஓய்வுக்கு பின்னர் பதவி கிடைக்க சால்ரா போடும் தளம் அல்ல.
இரு கட்சியினர் தங்கள் வாதத்தை முன்வைக்கும்போது பிரதிவாதங்களை கேட்டு நீதியை வழங்குவது தான் ஒரு நீதிபதியின் வேலை. ஆனால் சந்திரசேகரா ஊழலை எதிர்க்கிறேன் என்று கூறி சாமீன் மறுத்திருக்கிறார். சாமீன் அடிப்படை உரிமை இல்லையாம். இது ஒன்றே போதாதா இவர் ஒரு அடி முட்டாள் என்று கூற. இவர் எந்த சட்டக் கல்லூரியில் படித்தார் என்று தெரியவில்லை.
சாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று சொல்பவர் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனம் பரிசீலிக்க வேண்டும். சாமீனின் அர்த்தம் தெரியாதவர் எல்லாம் நீதிபதி பதவியில் இருப்பது தான் காலத்தின் கொடுமை.
அரசியலில் ஊழல்வாதிகள் பெருகிவிட்டார்கள் என்றால், நீதித்துறையில் முட்டாள்கள் பெருகிவிட்டார்கள்.
தண்டனை என்பது குற்றவாளி திருந்திவாழ கொடுக்கும் ஒரு வாய்ப்பு. ஆனால் குன்காவும், சந்திரசேகராவும் கர்நாடக ஊழல்வாதிகள் திருந்துவதற்காக செயலலிதாவை தண்டித்திருக்கிறார்கள். செயலலிதாவை தண்டித்தால் கர்நாடக ஊழல்வாதிகள் திருந்துவார்களா?
கிடைத்தவரை பிடித்து தண்டிப்பதால் மீதியுள்ளவர்கள் திருந்துவார்கள் என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். அதைத்தான் பெரும்பான்மையான இந்திய நீதிமன்றங்கள் செய்கின்றன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பதை தடுக்க வேண்டும் என்றால் முதலில் நீதிபதிகள் தங்கள் சொத்துப்பட்டியலை காட்ட வேண்டும். - அதை கேட்க எந்த இந்தியனுக்கும் திராணி இல்லை.
ஒவ்வொரு வழக்கறிஞரும் கட்சிக்காரரிடம் பெரும் பணத்திற்கு உரிய ரசீது தரவேண்டும். - இதை கேட்க எந்த இந்தியனுக்கும் திராணி இல்லை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அம்பானி முதல் டட்டா, பிர்லா, மல்லையா, இன்னும் எத்தனையோ பண முதலாளிகள் உள்ளார்கள். அவர்கள் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். - இதை செய்ய எந்த இந்திய நீதிமன்றத்திற்கும் திராணி இல்லை.
ஊழலை விட, தவறான தீர்ப்புகள் தான் மனித குலத்துக்கு எதிரானது. தவரான தீர்ப்புகள் கொடுத்த நீதிபதிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை ஏன்?
- 1. சொத்துக்கணக்கை காட்ட மாட்டார்கள்,
- 2. வாங்கும் பணத்துக்கு உரிய ரசீது தரமாட்டார்கள்,
-
3. தவறான தீர்ப்புகளுக்கு குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்க மாட்டார்கள்,
-
4. பள்ளிக் குழந்தைகளை விட அதிக நாட்கள் விடுமுறை வேண்டும்.
-
5. தீர்ப்பு எழுத எத்தனை வாய்தாக்கள் வேண்டுமானலும் வாங்கிக்கொள்வார்கள்,
-
6. தினமும் 50 ஆயிரத்துக்கும் குறையாமல் சம்பளம் வேண்டும்.
-
7. நீதிமன்றத்தை நாடுபவர்கள் இவர்களை பார்த்து கூழை கும்பிடு போட வேண்டும்.
-
8. சட்டம் படிக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் ( 30 வயதுக்கு மேல் மருத்துவம், கலை, பொறியியல் என எது வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் சட்டம் படிக்க முடியாது.)
- ஊழலில் திளைப்பவர்களே ஊழலுக்கு எதிராக இருக்கிறார்களாம்.
வாழ்க இந்திய சனநாயகம்!
வளர்க இந்திய நீதிபதிகளின் சட்ட தீவிரவாதம்!!
பின்குறிப்பு:-
செயலிதாவை எதிர்க்கிறேன், ஊழலை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சட்ட தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்காதீர்கள். நாளை நீங்களும் பாதிக்கப்படக்கூடும். அரசியலில் ஊழல்வாதிகள் பெருகிவிட்டதை போல நீதித்துறையில் பதவி வெறியர்கள் பெருகிவிட்டார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
- 1. சொத்துக்கணக்கை காட்ட மாட்டார்கள்,
- 2. வாங்கும் பணத்துக்கு உரிய ரசீது தரமாட்டார்கள்,
- 3. தவறான தீர்ப்புகளுக்கு குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்க மாட்டார்கள்,
- 4. பள்ளிக் குழந்தைகளை விட அதிக நாட்கள் விடுமுறை வேண்டும்.
- 5. தீர்ப்பு எழுத எத்தனை வாய்தாக்கள் வேண்டுமானலும் வாங்கிக்கொள்வார்கள்,
- 6. தினமும் 50 ஆயிரத்துக்கும் குறையாமல் சம்பளம் வேண்டும்.
- 7. நீதிமன்றத்தை நாடுபவர்கள் இவர்களை பார்த்து கூழை கும்பிடு போட வேண்டும்.
- 8. சட்டம் படிக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் ( 30 வயதுக்கு மேல் மருத்துவம், கலை, பொறியியல் என எது வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் சட்டம் படிக்க முடியாது.)
- ஊழலில் திளைப்பவர்களே ஊழலுக்கு எதிராக இருக்கிறார்களாம்.
வாழ்க இந்திய சனநாயகம்!
வளர்க இந்திய நீதிபதிகளின் சட்ட தீவிரவாதம்!!
பின்குறிப்பு:-
செயலிதாவை எதிர்க்கிறேன், ஊழலை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சட்ட தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்காதீர்கள். நாளை நீங்களும் பாதிக்கப்படக்கூடும். அரசியலில் ஊழல்வாதிகள் பெருகிவிட்டதை போல நீதித்துறையில் பதவி வெறியர்கள் பெருகிவிட்டார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment