இண்டர்நெட்டில் அதிகரித்து வரும் கிரெடிட் கார்டு மோசடிகளால், நிதித்துறை பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இன்றைய நாட்களில், சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் இணைய வழி மோசடி நடக்காமலிருக்கும் என உறுதிமொழியையும் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களையும் தங்களுடைய அட்டைகளுக்கு கொடுத்து வருகின்றன.
என்னதான் அவர்கள் உறுதி கூறினாலும் இது போன்ற திருட்டுகள் இன்னும் குறைந்தபாடு இல்லைய, தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே நமது பணத்தை நாம் தான் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனால் பாதுகாப்பு அம்சங்களை சரி வர பயன்படுத்தி கிரெடிட் கார்டு மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது நல்லது. இது பற்றி மேலும் அறிய பின்வரும் 8 டிப்ஸ்களை படியுங்கள்.
வருமுன் காப்பதே நல்லது' என்பது இந்த பிரச்சனைக்கு பொருத்தமான பழமொழியாகும். இணைய வழி வைரஸ்களில் இருந்து உங்களுடைய கம்ப்யூட்டரை பாதுகாக்க நினைத்தால், ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை நிறுவுவது நல்லது.
விண்டோஸ் மெயில் மற்றும் அவுட்லுக் போன்ற வெப் பிரௌஸர்கள் மற்றும் ஈமெயில் முகவர்கள் ஆகியவற்றை அப்டேட் ஆக வைத்திருப்பது அவசியமாகும். பிஷ்ஷிங் (Phishing) மற்றும் மால்வேர் (Malware) போன்றவற்றில் இருந்து உங்களுடைய கணிணியை பாதுகாக்கக் கூடிய முழுமையான ஆன்ட்டி-வைரஸை தேர்ந்தெடுப்பது நல்லது.
நீங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கும் இணைய தளங்கள் வழியாக பணம் செலுத்துவது நல்லது. அவர்களுடைய அஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் பிற ஆவணங்களை சேகரித்து அவர்களைப் பற்றி உறுதி செய்து கொள்வது அடுத்த படியாகும்.
ஏதாவதொரு தளம் நம்பிக்கையை தரவில்லையென்றால், அதை உபயோகிக்க வேண்டாம். PayPal மற்றும் AlertPay ஆகிய தளங்கள் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கையானதாக உள்ளது. eBay போன்ற இணைய வழியாக பெருமளவு வணிகம் செய்யும் தளங்கள் பைசா பே வழிமுறை (paisa pay option) போன்ற மிகவும் பாதுகாப்பான வழிமுறையை கொடுத்து, நீங்கள் பொருட்களை வாங்க உதவுகின்றன.
பாதுகாப்பான தளங்களில் மட்டுமே உங்களுடைய கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரௌசர் விண்டோவின் கீழ் வலதுபக்கத்தில் பேட்லாக் குறியீட்டை (Padlock Symbol) எப்பொழுதும் கவனித்து வாருங்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் இணைய தளம் 'https:\' என்று தொடங்குவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இது மிகவும் முக்கியமான விஷயமாகும்! ஊங்களுக்கு சொந்தமான எலக்ட்ரானிக் பொருட்களான டேப்லட்ஸ் மற்றும் மொபைல்களை பயன்படுத்தி நிதி பரிமாற்றங்களை செய்து வாருங்கள். பொது இடங்களில் இருக்கும் கணிணிகள் பொது நூலகங்களைப் போன்றவை, யார் வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்கலாம், படிக்கலாம். பொது இடங்களில் உள்ள பெரும்பாலான கணிணிகள் நமது பயன்பாட்டு பெயர் மற்றும் கடவுச் சொற்களை சேமித்து வைக்கும் குக்கிகளை கொண்டுள்ளன. இதனால் நமது இரகசியமான தகவல்கள் எளிதில் அம்பலமாகி விடுகின்றன.
மேலும், பாதுகாப்பான வை-ஃபை இணைப்பு மற்றும் கடவுச் சொல் வழியாக உங்களுடைய இணைய சேவை இணைக்கப்படுவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
பிஷ்ஷிங் தளங்கள் ஜாக்கிரதை! இணைய வழியில் பரிமாற்றங்கள் செய்யும் போது அந்த தளத்தின் ஆவணங்களை சரி பார்க்கவும். இந்த ஆவணங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் இந்த ஆவணங்கள் இருப்பதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்க முடியும். வெள்ளை மற்றும் பச்சை நிற கொடியுடைய தளங்களை எப்பொழுதும் தேர்ந்தெடுக்கவும். பச்சை நிற ஆவணங்கள் கொண்ட தளங்கள் அதிகமான பாதுகாப்பையும், உரிமையை உறுதிப்படுத்தம் தன்மையும் கொண்ட தளமாகவும் உள்ளன.
நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் மின்னஞ்சலுக்கு வரும் பிஷ்ஷிங் மெயில்கள். இது போன்ற மெயில்களை உங்களுடைய இன்பாக்ஸில் வைத்திருக்க வேண்டாம். இந்த வகை இமெயில்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையோ அல்லது கிரெடிட் கார்டு விபரங்கள் அல்லது ஒரு கிளிக் செய்து நீங்கள் செல்லும் இணைய தளத்தில் உங்களுடைய பயன்பாட்டு பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லை (Password) சரி பார்க்க சொல்லவோ அல்லது பிற விபரங்களை கேட்கும் வகையில் இருக்கின்றன. இவற்றை முடிந்த வரையிலும் தவிர்த்து விடுவதும், அழித்து விடுவதும் பாதுகாப்பை உறுதி செய்யும்.
உங்களுடைய பாஸ்வேர்ட் அல்லது கடவுச் சொல்தான் உங்களைப் பற்றி விபரங்களுக்கான சாவியாகும். இன்றைய நாட்களில் அனைத்து வங்கிகளும் மிகவும் உறுதியான மற்றும் பாதுகாப்பான தற்காலிக கடவுச் சொற்களை (Instant passwords) உங்களுடைய மொபைலுக்கு அனுப்பி அதன் வழியாக தங்களுடைய இணைய வழி பரிமாற்றங்களை நடத்தச் செய்கின்றன. இந்த வசதியை உங்களுடைய கணக்கிற்கும் ஏற்படுத்த நீங்கள் உறுதி செய்யுங்கள்.
இறுதியான தகவலாக இருந்தாலும், மிகவும் உறுதியான தகவலாக இருப்பது உங்களுடைய கணக்கினை நீங்கள் அவ்வப்போது பரிசோதித்து கவனித்து வருவதாகும். இவ்வாறு செய்யும் போது உங்களுடைய அட்டையை கடைசியாக எப்பொழுது பயன்படுத்தினோம் என்பதை கவனித்து வர வேண்டும். இவ்வாறு பரிசோதிக்கும் போது, உங்களுக்கு பரிச்சயமில்லாத பரிமாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அது புலனாகி விடும். இவ்வாறு தவறான பரிமாற்றங்கள் ஏதும்இருந்தால் உடனடியாக உங்களுடைய கிரெடிட் கார்டு நிறுவனத்தை அணுகி தகவல் தரவும்.
நீங்கள் இவ்வாறாக உங்களுடைய அட்டை, இரகசிய எண் அல்லது இணைய வழி கடவுச் சொற்கள் ஆகிய மோசடிகளுக்குள்ளான பின்னர், உடனடியாக தகவல்களை கொடுத்து விட்டால் கூட, உங்களுடைய வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனம் பணத்தை திரும்ப கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment