உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்ததை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை, விரைவு பெறும்.
சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, பெங்களூரு, தனி நீதிமன்றம், கடந்த மாதம், 27ம் தேதி உத்தரவிட்டது.
அனைத்து வாய்ப்புகளும் தரப்பட வேண்டும்
இடைக்கால மனுக்கள்: தனி நீதிமன்ற உத்தரவை, ரத்து செய்யக் கோரியும், தடை செய்யக் கோரியும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும், தனித்தனியே அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை, தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்கக் கோரி, இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்தனர்.தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்கக் கோரிய மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது, உச்ச நீதிமன்றம், நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கி உள்ளது.அது மட்டுமல்லாமல், 'ஜெ., உள்ளிட்டோர், தங்கள் தரப்பு ஆவணங்களை, டிச., 18க்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; அதன் பின், மூன்று மாதங்களுக்குள், அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை, கர்நாடக உயர் நீதிமன்றம் முடிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலவரம்பு:கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம், அதற்கு விடை கிடைத்து விட்டது.சொத்து குவிப்பு வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளித்ததை தொடர்ந்து, முதல்வர் பதவியை, ஜெயலலிதா இழந்தார். பெங்களூரு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ரத்து செய்யப்பட்டால் தான், தேர்தலில், ஜெயலலிதா போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது, ஆவணங்கள் தாக்கல் செய்த பின், 'அப்பீல்' வழக்கை, மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்துக்கு, கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதேநேரத்தில், ஜெயலலிதா தரப்பிலும், இரண்டு மாதங்களுக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே, ஜெ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்கள், இந்தமாத கடைசியில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. அந்த அப்பீல் மனுக்களுடன், தனி நீதிமன்ற தீர்ப்பின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு ஆவணங்கள், உயர் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்படும். நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கை மட்டுமே, தனி நீதிமன்றம் விசாரித்ததால், அந்த ஆவணங்கள் எல்லாம், தயாராகவே இருக்கும்.ஜெ., தரப்பிலும், உயர் நீதிமன்றத்தில், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
தங்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் யார் யார் ஆஜராவர் என்பதை, ஜெயலலிதா முடிவு செய்வார். லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகிறார்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெ.,யின் அப்பீல் மனுவை, வழக்கமாக குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியே விசாரிக்கலாம் என்றும், அந்த நீதிபதிக்கு வேலைப்பளு அதிகம் இருந்தால், வேறு நீதிபதிக்கு வழக்கை ஒதுக்கலாம் என்றும் அதுகுறித்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நிர்வாக ரீதியாக முடிவெடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.அப்பீல் வழக்கு விசாரணைக்கு வரும் போது, இருதரப்பு வழக்கறிஞர்கள் தரப்பை கேட்டு, எந்த நாளில் வாதத்தை துவங்குவது என, நீதிபதி முடிவு செய்வார். அந்த நாளில் இருந்து, வழக்கறிஞர்களின் வாதம் துவங்கும்.
வாய்ப்பு தரவேண்டும்:இதுகுறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறியதாவது:மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதை, சட்டப்பூர்வ கட்டளையாகக் கருத முடியாது; நெறிசார்ந்த கட்டளை தான். வழக்கு விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது என்பதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, அனைத்து வாய்ப்புகளும் தரப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் கால தாமதமானால், கால அவகாசத்தை நீட்டிக்க கோரலாம்.ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் கூட, உச்ச நீதிமன்றம், கால அவகாசம் நிர்ணயித்தது. அதன்பின், அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.அப்பீல் வழக்கின் மீதான முடிவைப் பொறுத்து தான், தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா என்பதற்கு, விடை கிடைக்கும். அதற்கு, மார்ச் மாதம் வரை, பொறுத்திருக்க வேண்டும்.

No comments:
Post a Comment