பண்டிகை என்று வந்துவிட்டால்
பணம் காசு பார்க்க வேண்டாம்
எந்த பண்டிகையாயினும்
எவரும் கொண்டாட
நாம்
எந்த
மதமும்
சம்மதம் எனக்கொள்வோம்.
எத்திக்கும் கொண்டாடட்டும்
தித்திக்கும் தீபாவளி.
எம்மதம் ஆயினும்
சம்மதே
யாம் என்போம்.
சாதிமதங்கள் பேதங்கள் மறந்து
சங்கங்கள் யாவும் தொலைத்து
சங்கமிப்போம்.
வருங்காலங்களில்
வல்லரசு
நல் மனமே என்போம்.
பணம் காசுக்கு
பழகிவிட்டது-
வருமையும் செழுமையும்.
பண்டிகைக்காக
பெற்ற மகன்
பாசமாயாய் தந்த
செல் ஃபோனை விற்கும் தாய்மார்களையும்
செல்ஃபி படம் போட்டு
சிலருக்காய்
பந்தா காட்டும்
ஃபேஸ் புக் நிபுணர்களையும்
நினைக்கும்போது.......
பணம் காசு பார்க்க வேண்டாம்
கொண்டாடத்தானே பண்டிகை
எனத்தோன்றுகிறது.
ஓடி ஓடி உழைத்து
ஒரு நாளாவது
நிம்மதியாக இருக்க(வோ) வே ?
பண்டிகைகள்.
ஆக
அகம் மகிழ
உளம்குளிர
கொண்டாடுங்கள்......
பண்டைய புராணங்களை
பகுத்தாராய வேண்டாம்
பண்டிகைகளின்
காரண காரியங்களை.
பழகிவிட்டப்பின்பு
பாசாங்குகள் எதற்கு?.
தூரம்
தேசம்
தூவும் மழை
யாவும் கடந்து......
தித்திக்கட்டும்
எத்திக்கும் இனிய தீபாவளி...
அனைத்து
அன்பு உள்ளங்களுக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
Anbudan,
விட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
No comments:
Post a Comment