தமிழக முன்னாள் முதல் அமைச்சர் செயலலிதாவை உச்சநீதிமன்றம் சாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேல் முறையீட்டு விசாரனையை 3 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை செயலலிதாவை விடுதலை செய்வதோடு தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி. லோகூர், ஏ.கே.சிக்ரி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து செயலலிதா உடனடியாக விடுதலையாகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க தடை இல்லை என்பது கூடுதல் செய்தி.
ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே ராசியாகிவிட்ட '7’ ம் எண்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது.
மேல் முறையீட்டு மனு விசாரணையை 3 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த மனு தொடர்பான ஆவணங்களை 2 மாத காலத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேல் முறையீட்டு மனு விசாரணையைத் தாமதப்படுத்தும் எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். இதனை ஜெயலலிதா தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிகழ்வின் மூலம் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவுக்கு 7ம் எண் ராசியானது என்பது மீண்டும் ஒரு முறை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
இன்று 17.10.2014 என, கூட்டு எண் 7 என்றும், இன்று அதிமுக.,வின் 43 வருட துவக்க நாள் என்றும் அதிலும் 7 வருவதாகவும் கூறி, இரட்டை லட்டு இனிப்பு என அதிமுகவினர் இரு மகிழ்ச்சியையும் சேர்த்துக் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அதிகம் குவிந்துள்ளனர். பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment