தீபாவளி நெருங்கி வருவதால் அனைவரும் பிஸியாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களின் கர்மத்தை குறைத்து நல்ல வாழ்க்கை வாழ்வதற்க்கு ஒரு வழியை ஏற்படுத்தி தருவதற்க்கு ஒரு சில கருத்தினை உங்களுக்கு சொல்லுகிறேன். முடிந்தால் செய்து பாருங்கள்.
உங்களின் அருகில் அல்லது தெரிந்தவர்கள் ஏழையாக இருந்தால் அவர்களுக்கு ஆடைகளை தானமாக எடுத்து தரலாம். தீபாவளி செலவுக்கு என்று அவர்களுக்கு பணம் கொடுத்து உதவலாம். ஏதாவது அவர்களுக்கு விருப்பட்டதை வாங்க நினைப்பார்கள் அதற்கு பணம் தேவைப்படும் அதனால் கொடுத்து உதவுங்கள்.
ஏழை பெண்களாக இருந்தால் நல்ல தரமான சேலைகளை வாங்கி கொடுங்கள்.குறிப்பாக சேலைகளை கொடுப்பது மிகப்பெரிய செல்வவளத்தை உங்களுக்கு கொடுக்கும். அண்ணன் ஸ்தானத்தில் இருந்து கொடுப்பதாக இது இருக்கவேண்டும்.
பண்டிதனுக்கு உதவுவது மிகப்பெரிய அளவில் உங்களின் கர்மத்தை குறைக்கும். அதாவது பண்டிதன் என்பவன் சோதிடம் பார்ப்பவன் கோவிலுக்கு பூஜை செய்பவன் இவர்கள் அனைவரும் பண்டிதன் கணக்கில் வரும். இவர்களில் போதிய வருமானம் இல்லாதவர்களாக பார்த்து உதவுங்கள். எனக்கு அனுப்பிவிடாதீர்கள்.
இதனை செய்யும்பொழுது முடிந்தவரை முன்கூட்டியே செய்துவிடுவது நல்லது. ஏன் என்றால் இவர்கள் கடன்வாங்கி இதனை செய்வதற்க்கு முன் செய்துவிடுவது நல்லது.
ஒரு சில ஏழை குடும்பங்களில் இனிப்பு வகைகளை செய்வதற்க்கு அவர்களுக்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க கையில் பணம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு மளிகைப்பொருட்களை வாங்கிக்கொடுத்துவிடுவதும் நல்லது.
No comments:
Post a Comment