Wednesday, October 8, 2014

ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது மோடியின் திட்டமா ??

ஜெயலலிதா இப்போது சிறையில் இருப்பது எல்லாம் மோடியின் திட்டம் என புதிய தகவல்கள் வர தொடங்கி விட்டன. பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் ஜெயலலிதா இருந்தே போதே மோடி அதனை விரும்பவில்லை. அவரை நோட் செய்து கொண்டார். லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்தும் பாஜக வால் 1 இடத்துக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை. இது மோடியை கடுமையாக பாதித்தது. இந்தியா முழுவதும் வேலை செய்த மோடி அலை தமிழகத்தில் வேலை செய்யாமல் போய்விட்டது.


பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சொல்லியுள்ளார். அதன் பிறகு தான் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு வேகமானது. சுப்ரமணிய சுவாமி இதனை முழுமையாக கவனித்து கொண்டார். ஜெயலலிதா வழக்கு குறித்து கேட்ட போது நீதிமன்ற தீர்ப்புகளில் தலையிட மாட்டேன் என கூறிவிட்டார்.
சரியாக மோடி இந்தியாவில் இல்லாத நேரம் பார்த்து தீர்ப்பு வந்தது. தீர்ப்பு குறித்து மோடி எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார்.
இப்போது அது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். ஹரியானாவில் தேர்தல் பிராசார கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி, எனது அரசு மக்களின் ஆதரவில் இயங்கி வருகிறது. எங்களுக்கு சிறையில் இருப்பவர்களின் ஆதரவு தேவையில்லை. அதேபோல் மாஃபியாக்களின் ஆதரவும் தேவையில்லை’ . இது அவர் மறைமுகமாக ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் கூறியுள்ளார் என கருத்துகள் வருகிறது. தமிழகத்தில் பாஜகவை மேம்படுத்த மோடி நினைக்கிறார். அதற்கு இது தான் சரியான தருணம் என்றும் முடிவு செய்துள்ளார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...