அதன்படி இந்தியாவில் வெஸ்டர்ன்யூனியன், எக்ஸ்பிரஸ் மணி, மணிக¤ராம், ட்ரான்ஸ் ஃபாஸ்ட் ஆகிய நிறுவனங்கள் மூலை முடுக்கெல்லாம் தங்கள் நிறுவன கிளைகளை திறந்து வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங¢கி வந்தது. அதே நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை இந்தியாவில் உள்ளவர்கள் பெற்று கொள்ளும் நடைமுறை இருந்து வந்தது.இதற்காக இந்த நிறுவனங்கள் குறைந்த பட்ம் 0.6 சதவீதம் முதல் அதிகபட்சமாக 0.9 சதவீதம் வரை கமிஷன் பெற்று இந்த சேவையை செய்து வருகிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் நிதி வரவில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்கு வரியாக கட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் கடந்த 14ம் தேதி முதல் அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், ‘ இனிமேல் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் எந்த நிதிக்கும் சேவை வரியாக 12.36% விதிக்க வேண்டும்‘ என உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் நிதி நிறுவன வட்டாரங¢கள் தெரிவிக்கையில், ‘ வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு 70 பில்லியன் அமெரிக்க டாலர் வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமான வரியாக சுமார் ரூ.350 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் அதைவிட அதிக வருவாய் பெற வேண்டும் என்பதற்காக நிதியமைச்சகம் சேவை வரி விதித்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் பலர் சேவை வரியை செலுத்துவதற்கு பதிலாக மீண்டும் ஹவாலா முறைக்கு மாற வழிவகுத்து விடும். ஒரு வார காலமாக சேவைவரியை இந்த நடைமுறை மூலம் விதிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய நடைமுறையை கொண்டு வர மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment