Friday, October 10, 2014

உடல் எடை குறைய - எண்ணெய் - கொழுப்பு -சில அலசல்கள்


சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது என்ற விவாதம் இப்போது ஓடிகொண்டிருக்கிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறீர்களா... உங்களை மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நல்லெண்ணெய் பயன்படுத்துகிறீர்களா? உங்களின் ரத்தக்கொதிப்பு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்களும் பயம் ஏற்படுத்துகிறார்கள். இதைப் பற்றி இணையத்தில் தேடும்போது பல தகவல்கள் கிடைத்தன. அதையே இந்த பதிவில் அலசப்போகிறோம்.

சிலர் நான் இந்த எண்ணெயைத் தவிர வேற எதையும் தொடறதே இல்லை-னு பெருமையா சொல்லிப்பாங்க. இது முழுக்க தவறான நம்பிக்கை. ஒரே வகையான எண்ணெயைப் பயன்படுத்துறதைவிட, எல்லா வகை எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துறது நல்லது. ஒரே வகையான எண்ணெயைத் தொடர்ந்து எடுத்துக்கும்போது அதிலிருக்கிற கெடுதல் தன்மை உடல்ல சேர்ந்துட்டே இருக்கும். அதனால எண்ணெய்கள்ல இருக்கிற நற்குணங்கள் மட்டுமே உடம்புல சேரணும்னா... எல்லா வகை எண்ணெய்களையும் மாத்தி மாத்தி கொஞ்சமா பயன்படுத்தணும். 

இதயத்துக்கு நல்லதுங்கிற விளம்பரத்தோட மார்க்கெட்டில் விற்கப்படும் சூரியகாந்தி ரீஃபைண்டு எண்ணெய், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை. எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுங்கிற மாதிரி, ஒரே எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தினா தீங்கானதுதான். அதனால சமையலுக்கான எண்ணெய் வகையை அடிக்கடி மாத்திக்கிறது நல்லது.

எண்ணெயைக் குறைக்கிறதால மட்டும் நோய்களைத் தடுக்க முடியாது. ஒட்டுமொத்த வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவை முன்னயெல்லாம் மக்களின் வாழ்க்கை, உடலுக்கு உழைப்பு தரும் விதமா இருந்துச்சு. இப்போ உடல் உழைப்பையெல்லாம் ஓரங்கட்டிட்டு, உடற்பயிற்சி செய்யறதுக்குனு சிரமப்பட்டு தனியா நேரம் ஒதுக்கறாங்க. இந்த நேரத்தை தினசரி வாழ்க்கைக்கான வேலைகளுக்கு ஒதுக்கினாலே போதும். 

பக்கத்துல பஸ் ஸ்டாப்புக்கோ, கடைக்கோ, கோயிலுக்கோ தினமும் நடந்து போறதையும்... வீட்டுல துணி துவைக்க, வீடுகூட்ட, சமைக்கறதுக்காக குனிஞ்சு நிமிர்றதையும் மறந்தவங்க... வீட்டுக்குள்ள வாங்கி வெச்சுருக்கற இயந்திரத்தில் ஏறி நின்னுடலாம்னு முடிவு பண்ணிடறாங்க. ஆனா, இயற்கை காற்றை சுவாசிச்சு, சூரிய ஒளியை சருமத்தில் வாங்கியபடி சாலையில் நடக்கிறதும்... வீட்டுக்குள்ள ஒரு மூலையில இருக்கிற ஒரு இயந்திரத்தில் ஏறி நின்னுகிட்டு ஓடுறதும் சமமான பலன்களைத் தராது.

ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு குணமிருக்கு. நிறைவடையாத கொழுப்பு அமிலங்கள் (Unsaturated Fatty Acids) அதிகமாவும், நிறைவடைந்த கொழுப்பு அமிலங்கள் (Saturated Fatty Acids)குறைவாவும் இருக்குற எண்ணெய்தான் உணவு தயாரிப்புக்கு ஏற்றது.

நிறைவடைந்த கொழுப்புகள் அதிகமிருக்குற எண்ணெய்களை அதிக வெப்பத்தில் பொரிக்கிறதுக்கு பயன்படுத்தலாம். கடலை எண்ணெயை வடை, முறுக்கு செய்ய பயன்படுத்தலாம். எள் எண்ணெயை (நல்லெண்ணெய்) பொடிக்கு உபயோகப்படுத்தலாம். சூரியகாந்தி, சோயா, கடுகு எண்ணெய்களை எல்லாவிதமான தயாரிப்புக்கும் உபயோகப்படுத்தலாம். விர்ஜின் தேங்காயெண்ணெயில நிறைவடைந்த கொழுப்பு இருந்தாலும், உடம்புக்கு பாதிப்பு ஏற்படுத்தாததோட, கொலஸ்ட்ராலையும் குறைக்குதுனு கண்டுபிடிச்சுருக்காங்க.

பொதுவா எந்த எண்ணெயையுமே திரும்பத் திரும்ப சூடு படுத்தக்கூடாது. அடுப்பில் சூடு படுத்தும்போது புகைய ஆரம்பிக்கிற நிலைவரை எண்ணெயைச் சூடுபடுத்துறது தப்பில்லை. அதுக்கு மேல சூடுபடுத்தும் போது அதுல இருக்குற கொழுப்புகள் சிதைந்து, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஒருமுறை சமையலுக்கு உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துறதும் நல்லதில்லை. அப்படிப் பண்ணும்போது குடலுக்கு ஆகாத 'அக்ரோலின்'ங்கிற வேதிப்பொருள் உண்டாகி உடலுக்கு தீமை செய்யும்.

எனவே முடிந்த வரை ஹோட்டல், ஸ்நாக்ஸ், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளையெல்லாம் தவிர்த்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டும் சாப்பிட்டா எதை நினைத்தும் பயப்படத் தேவையிருக்காது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...