காங்கிரஸ் கட்சியில் மாநில தலைமைக்கு அதிகாரம் இல்லை என்றும், எந்தவொரு விஷயத்தையும் மாநில தலைமையிடம் கட்சி மேலிடம் ஆலோசிப்பதில்லை என்றும் தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ள ஞானதேசிகன் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேட்டியின் போது தெரிவித்தார். அகில இந்திய தலைமை மீது தமிழக வரலாற்றில் குற்றச்சாட்டை சுமத்தி வெளியேறும் முதல் தலைவர் என்ற பெருமையை கட்சிக்கும் அவருக்கும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.
மூப்பனார், காமராஜர் : நேற்று டில்லியில் காங்., நிர்வாகிகளிடம் ராஜினாா கடிதம் கொடுத்து விட்டு இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன் நிருபர்களை சந்தித்தார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது: மாநிலத்தில் கட்சியில் ஒற்றுமை ஏற்படுத்த முயற்சித்தேன். நான் பல முறை டில்லி சென்று வந்தேன். உறுப்பினர்கள் கார்டுகளை யாரிடமும் கொடுக்க கூடாது என்று சொன்னார்கள். மூப்பனார், காமராஜர் ஆகியோரை ஒதுக்கி வைத்து கட்சி நடத்த முடியாது. உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படங்களை அகற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்தேன். இதனை காங் ., தலைமை கேட்கவில்லை.
மாநில அளவில் கட்சியை வளர்க்க மாநில தலைவர்களுக்கு அதிகாரம் வேண்டும். மாநில அளவில் கட்சி பலமாக இருந்தால்தான் அகில இந்திய அளவில் கட்சி வளரமுடியும். கட்சியின் நலனுக்காக நான் பல சங்கடங்களை சந்தித்துள்ளேன். தலைவர் இருக்கும் போது அடுத்த தலைவர் குறித்து பேசுவது நாகரிகம் அல்ல. சமீபத்திய பார்லி., தேர்தல் குறித்து மாநில தலைமையிடம் அகில இந்திய தலைமை எவ்வித கருத்தும் கேட்கவில்லை.
கட்சியில் உள்ள நிர்வாகிகள் அழைப்பு விடுத்தும் கூட்டத்திற்கு வரவில்லை. இங்கு வேலை செய்பவர்களுக்கு, பதவி இல்லை. பதவி இல்லாமல் வேலை செய்பவர்களுக்கு பதவி என்னால் கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே பதவியில் இருப்பவர்களை என்னால் வேலை வாங்க முடியவில்லை. கட்சியை மறு சீரமைக்க வேண்டும் என நினைத்தால் நான் தடையாக இருக்க மாட்டேன் என டில்லியில் தலைவர்களிடம் சொல்லியிருக்கின்றேன்.
தலைவர் இருக்கும்போதே அடுத்த தலைவர் குறித்து பேசுவதா ? பல நிர்வாகிகள் கட்சி அலு<வலகத்திற்கே வருவதில்லை. செயலாளர்களை நியமிக்குமாறு பல முறை கட்சி தலைமைக்கு எடுத்து வைத்தும் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு தெரியாமல் ஒரு பொதுச்செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் ஆதரவாளர்கள் கட்சியில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். சிதம்பரம் தனி ஆவர்த்தனம் நடத்துகிறார்.
அவரது ஆதரவாளர்கள் யாரும் மாநில கூட்டத்திற்கு வருவதில்லை. எனக்கு தெரியாமல் கூட்டம் நடத்துகின்றனர். இது மாநில தலைவருக்கு அவமானம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். புதிய தலைவரை போட வேண்டுமென்றால் போடுங்கள் என்று சொன்னேன். மேற்கூறியா காரணங்களே எனது ராஜினாமாவுக்கு காரணம் என்று தெரிவித்தார்.
இவரது ராஜினாமாவை அடுத்து ஜி.கே.வாசன் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் மத்தியில் பெரும் பரபரப்பும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment