மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் ஓட்டிவந்த பஸ்ஸை பாதுகாப்பாக ஓரங்கட்டி 110 பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த டிரைவரின் கடமையுணர்வை அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் புகழ்கின்றனர்.
ஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், பஸ்ஸின் டிரைவர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பஸ்ஸை கட்டுப்படுத்தும் அவரது முயற்சியையும் மீறி சாலையின் குறுக்கே அந்த பஸ் இருமுறை அலைபாய தொடங்கியது.
இனியும், பஸ்ஸை முன்நோக்கி ஓட்டிச் சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்ட அப்துல் ரஹ்மான்(45) நீலக்கோட்டை என்ற இடத்தில் சாலையின் பக்கவாட்டு சுவரின் மீது சக்கரத்தை ஏற்றி பஸ்ஸை ஓரங்கட்டி நிறுத்தினார்.
பஸ் நின்ற அதே வினாடி ‘ஸ்டீரிங்’கின் மீது அவர் சுருண்டு விழுந்தார். பஸ்ஸில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ஆனால், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பஸ்ஸை வெகு சாதுர்யமாக அப்துல் ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பக்கவாட்டில் உள்ள மிகப்பெரிய பாதாளத்தில் பஸ் விழுந்திருக்கக் கூடும் என அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பஸ் டிரைவர் அப்துல் ரஹ்மான்(45) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்த பஸ்ஸின் கண்டக்டர் கூறினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் சுமார் 110 பயணிகளுடன் இன்று காலை உதகமண்டலம் நோக்கி மிகவும் பரபரப்பான மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது.
ஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், பஸ்ஸின் டிரைவர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பஸ்ஸை கட்டுப்படுத்தும் அவரது முயற்சியையும் மீறி சாலையின் குறுக்கே அந்த பஸ் இருமுறை அலைபாய தொடங்கியது.
இனியும், பஸ்ஸை முன்நோக்கி ஓட்டிச் சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்ட அப்துல் ரஹ்மான்(45) நீலக்கோட்டை என்ற இடத்தில் சாலையின் பக்கவாட்டு சுவரின் மீது சக்கரத்தை ஏற்றி பஸ்ஸை ஓரங்கட்டி நிறுத்தினார்.
பஸ் நின்ற அதே வினாடி ‘ஸ்டீரிங்’கின் மீது அவர் சுருண்டு விழுந்தார். பஸ்ஸில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ஆனால், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பஸ்ஸை வெகு சாதுர்யமாக அப்துல் ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பக்கவாட்டில் உள்ள மிகப்பெரிய பாதாளத்தில் பஸ் விழுந்திருக்கக் கூடும் என அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பஸ் டிரைவர் அப்துல் ரஹ்மான்(45) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்த பஸ்ஸின் கண்டக்டர் கூறினார்.
No comments:
Post a Comment