Saturday, November 8, 2014

வெற்றிக்கா​ன 14 மந்திரங்கள்​

மந்திரங்கள் சில நேரங்களில் தந்திரங்களாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் புத்தமதம் மற்றும் இந்து மதத்தினை சேர்ந்தவர்கள் தியானம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மந்திரம் போன்ற சில வார்த்தைகளை உச்சரிப்பதை அநேக இடங்களில் பார்த்திருக்கிறோம். இது ஆன்மீக ரீதியாகவோ அல்லது விஞ்ஞான ரீதியாகவோ அணுகுவோருக்கு வெவ்வேறு பார்வையில் தோன்றும். தியானம் செய்யும் போது இவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் பார்ப்பவர்களின் மனதிற்கு மந்திரங்களாகத் தோன்றுகின்றன. உண்மையில் இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று பலமுறை நினைத்ததுண்டு. அதன் காரணம் என்னவென்றால் அவர்கள் தங்களது தியானத்தில் கவனம் செலுத்த ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான மந்திரங்களை பயன்படுத்துவதுண்டு. இதேபோல்தான் நாமும், நாம் நினைத்த காரியத்தில் நமது கவனத்தினை வைக்க 14 மந்திரங்கள் உள்ளது. அவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

1. பொறுமையே வெற்றிக்கான வழி
இந்த மந்திரத்தினை புரியும்படி சொன்னால் “ஒரே நாளில் ஒபாமா” ஆக முடியாது என்பதுதான். வெற்றி ஒரே நாளில் கிடைத்திடாது, அதற்கு முக்கியமாக பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு என்ற மூன்று

மந்திரங்கள்​

ம் அவசியம். இத்துடன் அனுபவமும் ஒன்று சேர்ந்துவிட்டால் வெற்றி கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. நாம் திட்டமிட்டபடி நமது திட்டம் நடைபெறாதபோது கோபம், எரிச்சல் போன்ற தேவையில்லாத எண்ணங்கள் வரும், ஆனால் அதையெல்லாம் தாண்டி பொறுமையுடன் இருந்தால் மட்டுமே வெற்றிக்கனியினை ருசிக்க முடியும்.

2. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

வாய்ப்புகள் எப்போதாவதுதான் கிடைக்கும், அப்போது நாம் அதை பயன்படுத்தாவிட்டால் அந்த வாய்ப்பை நழுவவிட்டதை எண்ணி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வாய்ப்பு சரியாக அமைந்தது என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள்.
3. முன்னோக்கி முன்னேறுங்கள்
ஏற்கனவே செய்த தவறுகளை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்தநிலைக்கு ஒருநாளும் செல்ல முடியாது. வாழ்க்கையில் ஒரு உச்சநிலைக்கு வரும்வரை நடந்தது என்னவென்று பின்னோக்கி பார்க்கக்கூடாது, எத்தனை தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் கற்காவிட்டால் அதுதான் உண்மையான தோல்வி, அதனால் தோல்வியை வெற்றிக்கு படிக்கல்லாக்கி அடுத்த நிலைக்கு தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள்.
4. உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்!
வாழ்க்கை எளிது என்று எவருமே, ஒருநாளும் கூறியதில்லை. வெற்றியாளர்கள் ஒருநாளும் தங்களை தங்கள் பாதையிலிருந்து விலக்கிக்கொண்டதில்லை. தோல்விகளிடம் ஒருபோதும் உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்!

5. என்னால் முடியும்….

மற்றவர்கள் உங்களைப் பார்த்து “உங்களால் முடியும், நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும்” என்று கூறும் முன்னரே நீங்களாகவே முன்வந்து  அந்தச் செயலினை செய்யத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு முறை உங்கள் திறமையினைப் பற்றிய சந்தேகம் உங்களுக்கு வரும்போதும் “என்னால் முடியும்” என்ற மந்திரம் கண்டிப்பாக உதவும்.

6. யானையின் பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை

உலகில் பல புத்திசாலிகள் இருக்கின்றனர். ஆனால் அனைவராலும் தலைவராக முடிவதில்லை. ஏனெனில் அவர்களின் மீது அவர்களுக்கே நம்பிக்கை வருவதில்லை. “என்னால் இந்த செயலை முன்னின்று நடத்த முடியும்” என்ற நம்பிக்கை எப்போது வருகிறதோ அப்போது நாம் இந்த மந்திரத்தில் கைதேர்ந்தவராகிறோம்.

7. உழைப்பில்லையேல் ஊதியமில்லை!

நமது அனைத்து திறமைகளையும் நமது மனதுக்குள்ளே வைத்துக்கொண்டால் வெளியுலகிற்கு எப்படித் தெரியும். அதை வெளிக்கொணர நம்மிடம் இருக்கும் மந்திரம் தான் “உழைப்பு”. உழைத்தால் மட்டுமே நமது கனவினை நனவாக்க முடியும்.
வெற்றிக்கான மந்திரங்கள்!!!

8. கவலை ஏதுமில்லை….

நமது ஒவ்வொரு முயற்சிக்கும் தடையாக இருப்பது நமது பயம், கூச்சம் மற்றும் கவலைகள் தான். இவை மட்டும் நமக்கு இருந்தால் நமது எதிரிகள் தனியாக செய்வினை வைக்க வேண்டாம், ஏனென்றால் இவை இருக்கும்வரை நம்மால் முன்னேறவே முடியாது. அதற்கான மந்திரம் தான் இது “கவலை ஏதுமில்லை, தொல்லை இல்லை”. நடக்கும் செயல்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும்போது நமது கவலைகள் கடன்வாங்கியாவது அடுத்த நாட்டிற்குச் சென்றுவிடும்.

9. சக்திகள் அதிகரிக்கும்போது, பொறுப்புகளும் அதிகரிக்கும்.

இது நீங்கள் அடிக்கடி பார்த்து வியந்த “ஸ்பைடர்மேன்” படத்தில் இருந்து வந்தது. நமக்கு என்ன திறமை என்பது நாம் மட்டும் அறிந்த ஒன்று, அதை நாம் பயன்படுத்தினால்தான் சிறப்புற செயலாற்ற முடியும். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து அதை செயல்படுத்துங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

10.  இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்….

நமது வெற்றிக்கான பாதை எப்போதும் சமமாக இருக்கும் என சொல்ல முடியாது. மேடு பள்ளங்களுடன் தான் இருக்கும். அதை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவமும், சுயக்கட்டுப்பாடும் நமக்கு வேண்டும். இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் இருந்தால் கடைசிவரை வெற்றி நம் கையில்.

11. முடியாதது ஒன்றுமில்லை

இன்று வெற்றியாளர்களாக நாம் பார்க்கும் பலர் ஒரு நாள் அவர்கள் இப்போதிருக்கும் உயரத்தினை கனவாகக் கண்டவர்களாகத்தான் இருப்பார்கள். உங்கள் கனவினை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் யார் நிறைவேற்றுவார் என்ற எண்ணம் மனதிற்குள் இருக்கவேண்டும். அப்போதுதான் ‘நம்மால் முடியாது’ என்ற எண்ணமே வராது.

12. உங்களால் மற்றவர்களை மாற்ற முடியாது. உங்களால் உங்களை   மட்டுமே மாற்ற முடியும்.

இந்த உலகத்தில் உங்களால் மாற்றக்கூடிய ஒரே உயிர் நீங்கள் மட்டுமே அதனால் உங்களை நீங்களே கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் இந்த மந்திரத்தினை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

13. விழி எழு பற ….

வாழ்க்கையில் ஏதாவது ஒரு இலக்கு நமக்கு கண்டிப்பாக வேண்டும். அந்த இலக்கினை அடைவதற்கு தொடர்ந்து மூச்சுக்காற்று போல முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அதை சாதிக்க முடியும்.

14. சிறந்ததையே செய்யுங்கள்

ஒரு ஆசிரியர் மாணவர்களிடம், தேர்ச்சி அடைந்தால் மட்டும் போதும் என்று கூறுவதில்லை. அனைவரும் 100% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றுதான் கூறுவார். அதைப் போலத்தான் இதுவே போதும் என்ற எண்ணம் வந்துவிட்டால் நம்மால் எவ்வளவு முடியும் என்பது நமக்கே தெரியாமல் போய்விடும். அதனால் எப்போதும் உங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுங்கள்.
இதில் ஒரு சில மந்திரங்களை கடைபிடிக்கத் தவறினாலும், இவற்றை கடைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலே விரைவில் வெற்றி கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...