Thursday, November 6, 2014

உட்கார்ந்து யோசிச்சது-2014

மகன்:- I am a complan boy
மகள்:- I am a complan Girl 
தந்தை:- என்ன கொடுமைடா இது, நான் பெத்த புள்ளைங்க கண்ட கண்டவன் பேரையெல்லாம் சொல்லிக்கிட்டு திரியுது.

நீதிபதி:- இந்த கோர்ட்டில் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
அரசியல்வாதி:- உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனார்.
நீதிபதி:- ????????????????


நீதிபதி:- சாகரதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
குற்றவாளி :- என்னை தலைகீழா தூக்குள போடணும் எஜமான் .
நீதிபதி:- ????????????????

"உங்க மெஸ்ல, கல்யாணம் ஆனவங்களுக்குதான் வேலை குடுபீங்களா?
"ஆமா அவங்கதான் கீழ்படிதலா வேலைப்பாப்பாங்க
"சரி ... கல்யாணம் ஆனவங்களைதான் மெஸ்லே சேர்ப்பீங்கலாமேய அது ஏன்??
" யோவ் அவன்தான்யா எத குடுத்தாலும் பேசாம சாப்பிட்டுவிட்டு போவான்.. 


"என்னதான் நெருப்புக்கோழியா இருந்தாலும் அவிச்ச முட்டை போடாது!!!!!!!!!!!!!!!

மாணவன்1:- டேய் மாப்ளே தென்னை மரத்துல ஏரிப்பார்த்தாள் ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியுதுடா
மாணவன்2:- கைய விட்டு பாரு மச்சி மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியும் ட.... 

நர்ஸ்:- ஐய்ந்து நிமிடம் கழிச்சு வந்திருந்தால் இவரை காப்பாத்தி இருக்கலாம்
நபர்:- எப்படி??
நர்ஸ்:- டாக்டர் ஊருக்கு போயிருப்பார்!!!!!!!!!!!!!!!!!

படித்ததில் ரசித்தது:- 

எதேச்சையாக தொடும்போது பாக்கெட்டில் மொபைல் இல்லாதது போலத்தோன்றும் அந்த ஒரு நிமிட உணர்வை, நமக்கு அப்படிபட்ட திகில் படத்தாலும் தர முடியாது.....

பாசிடிவ் பதில்:-

ஆசிரியர்:- 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ளே கட்டுராங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ளே கட்டுவாங்க???
மாணவன்:- ஏற்கனவே கடின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டனும். 


எப்பவும் இந்த நிகழ்ச்சியில் ஒரு டச்சு வைக்காம இருந்ததில்லை!!!!!!!!!!!!!


கருவறையில் இருக்கும் வரைதான் உன்னை எதிர்ப்பார்க்கும் இந்த உலகம். 
வெளியில் வந்துவிட்டால் நீதா எதிர் கொள்ளவேண்டும் இந்த உலகை...!!!!
#தெருவோரத்தில் அனாதைகள்...!!!!!!!!!!!!!!!!!!!!!!

 "என் தேசத்தை நாசமாக்கிய சொல் "இலவசம்" 

பஞ்ச்:-
1. கண்ணா பன்னிங்கத்தான் கூட்டமா எக்ஸாம் எழுதும், சிங்கம் சிங்கிலாத்தான் அரியர்ஸ் எழுதும்.
2. தூண்டிலில் சிக்கிய மீனும், காதலில் சிக்கிய ஆணும் துடித்துதான் ஆகணும் அது விதி. 
3. 100 கிலோ அரிசிமூட்டை அதை தூக்குறவனுக்கு அதை வாங்க சக்தி இல்லை, 100 கிலோ அரிசிமூட்டையை வாங்குரவனுக்கு அதை தூக்க சக்தியில்லை (தொழிலாளி மற்றும் முதலாளி)

தத்துவம்:- 

ஒரு பொண்ணுகிட்டே போயி உன் அப்பாட்டக்கருனு சொன்னா தப்பில்லை அதுவே ஒரு அப்பாக்கிட்டே போயி பொண்ணு டக்கருன்னு சொன்னா...???????

டாக்டர் ஜோக்:-

நர்ஸ்:- டாக்டர் எதுக்காக இப்படி அழறீங்க???
டாக்டர்:-  நான் காலைலே ஆப்பேரசன் பண்ணின பேஷண்ட் செத்துட்டாறு...
நர்ஸ்:- யோவ் டுபுக்கு நீன் காலைலே பண்ணினது ஆபேரசனில்லை, போஸ்ட்மார்ட்ம் !!!!

டச்சிங்:- 

மனசுக்கு புடிச்சவங்க முன்னாடி அழுவதும், மனசுக்கு புடிக்காதவங்க முன்னாடி சிரிப்பதும் ரொம்ப கஷ்டம். 

ஆபீஸ் ஜோக்:-

லீவ்லே இருக்கும் பொது ஆபீஸ் கால் வந்தா அட்டென்ட் பண்ண மாட்டீங்களா? ஏன் ?
நீங்க மட்டும் ஆபீஸ் நேரத்துல பர்சனல் பண்ணக்கூடாதுன்னு சொல்றீங்களே அது ஏன் ?

பட்டு சேலை கட்டுனா எல்லாப்பொண்ணுங்களுக்கும் எடுப்பாதான் இருக்கும்.அதை வாங்கித்தரும் புருசனுக்குத்தான் கடுப்பா இருக்கும்

No comments:

Post a Comment