Thursday, November 6, 2014

வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைத்த அரசு

வரி விதிப்பதில் இந்திய அரசை விட்டால் ஆள் கிடையாது. இருந்தால், நின்றால், காற்றுக்கு, தண்ணீருக்கு என்று அனைத்திற்கும் வரி விதிப்பார்கள் போல.. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒரு புது வரி வித்தியாசமாக கண்டுபிடிப்பார்கள்.


தற்போது அடுத்த கட்டமாக. தற்போது இந்திய அரசு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தலையிலும் கை வைக்க ஆரம்பித்து உள்ளது.

வேலைக்கு ஏம்ப்பா போற?

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணத்திற்கான கமிசன் தொகையில் 12.36% தொகை வரியாக கட்ட வேண்டுமாம்.

முதலில் தவறுதலாக நாம் அனுப்பும் மொத்த தொகைக்கும் 12.36% என்று செய்தி பரப்பப்பட்டு விட்டது. அதில் உண்மையில்லை. ஆனால் நம்மிடம் வங்கி பிடிக்கும் கமிசன் தொகையில் மட்டுமே 12.36% வரி கட்ட வேண்டும்.

கமிசனோ, எதோ இப்படி வெளிநாட்டில் சிலர் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் தொகையை சுரண்டி வாங்க வேண்டிய நிலையில் இந்திய அரசு இல்லை என்பதே உண்மை. மன்மோகன் சிங் கொண்டு வந்து கிடப்பில் போட்ட திட்டத்தை மோடி மீண்டும் எடுத்துள்ளார்.

இந்த வரியை கண்டிப்பாக வங்கிகள் சொந்த பணத்தில் கட்டப்போவதில்லை. அனுப்புபவர்கள் தலையில் தான் கட்டுவார்கள். இதனால் அடிக்கடி பணத்தை அனுப்பும் குறைந்த பட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்களே அதிகம் பாதிக்கபப்டுபவர். மீண்டும் குருவி, புறா போன்ற புறம்பான முறைகளில் ஹவாலா பணம் அதிக அளவில் புழங்க வாய்ப்புகள் உள்ளது. தவறான வழிகளில் அதிக பணம் அனுப்பப்படும் போது அதுவும் பொருளாதரத்தை பாதிக்கவே செய்யும்.


இது வரை ஒரு லட்ச ரூபாய் அனுப்பும் போது ஆயிரம் ரூபாய் அளவு கமிசனாக பிடித்தம் செய்யப்படும். இனி 1200 ரூபாய் வரை அதிகமாக பிடிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தொகை தற்போது குறைவானது என்றே தோன்றும். ஆனால் இதனை வழியாக பயன்படுத்தி இனி ரெமிட்டன்ஸ் தொகையிலும் எளிதாக கை வைப்பார்கள்.

இந்தியாவில் வேலை செய்து பிழைப்பதற்கான வாய்ப்புகளையும் நமது அரசு ஏற்படுத்தாது. ஆனால் பிழைப்பிற்கு வழியாக எங்கோ சென்று குருவிக் கூண்டு போன்ற அறையில் தங்கி ஒரு சிறு பணத்தை ஈட்டுகின்றனர். அதற்கு தாங்கள் வாழ்கிற நாட்டிலும் வரி கட்டி வருகின்றனர். அதன் பிறகு அனுப்பும் பணத்தில் நேரடியாக தமக்கும் பங்கு வேண்டும் என்று கேட்பது கொடுமையானதே,

இந்தியாவில் இரண்டாவது பெரிய அந்நிய செலாவணி பெறுவதும் இந்த பணம் தான். இவ்வாறு பெருமளவு இந்தியாவில் முதலீடு செய்யும் பணம் பலருக்கு இங்கே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி வருகிறது. அதனை எண்ணிப் பார்க்கும் நிலையில் நமது அரசுகள் என்றுமே இருந்ததில்லை.

இந்த வருமானத்தை ஈட்டுவதற்கு நமது அரசின் பங்கு என்ன? வெளிநாடு போக ஏதாவது உதவி செய்தனரா? இல்லை வெளிநாட்டில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக ஓடி வரும் அரசா? என்று கேட்டால் சுத்தமாக இல்லை. ஆனால் பங்கு மட்டும் வேண்டுமாம்.

உண்மையில் இதனை வரி என்று சொல்வதை விட அரசு நம்மிடம் கேட்கும் கமிசன் அல்லது லஞ்சம் என்றே சொல்ல வேண்டும்.

இதன் மூலம் 350 கோடி வருமானம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால்  அதற்கு வேறு வழியே இல்லாமல் இருக்கும் நிலையில் இந்திய அரசு இல்லையே.

இவ்வளவு தூரித அரசு இன்றைக்கு கோர்ட்டில் ஒரு சூப்பர் அறிக்கை கொடுத்து கருப்பு பணத்தை மட்டும் நல்ல கூடு கட்டி பாதுகாக்கிறார்கள். மொத்தமாக போகிறதை விட்டு விடுவார்கள். சில்லறையாக வருவதற்கு பல செக் வைப்பார்கள்.

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"

யாருக்காக வள்ளுவர் பாடியதோ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...