1. ஓ.பி.எஸ். தனது பதவி விலகல் கடிதம் கட்டாயத்தின் பேரில் வாங்கப்பட்டது என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும், இந்தக் கடிதத்தை அவர் நேரில் சென்று ஆளுநரிடம் தரவில்லை. அது, 'ஒளிநகல்' (fax) மூலம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அச்சமயத்தில், ஆளுநர் சென்னையில் இல்லை; கோவையில் இருந்துள்ளார். போதாததற்கு, இக்கடிதத்தை சசிகலாவின் ஆட்கள் தான் ராஜ் பவனுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள், கடிதத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியை (acknowledgement of receipt) உடனே தர வேண்டும் என்று அவசரப்படுத்தியதாகவும் தகவல் வந்திருக்கிறது. தன் பதவி விலகல் கடிதத்தில், பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ள நேரத்தில் (1-41 PM), அவர் எங்கே இருந்தார்?
இந்த நிலையில், பன்னீர் செல்வத்தின் பதவி விலகல் கடிதத்தின் நம்பகத் தன்மை என்ன?
2. சசிகலாவின் மேல் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, இன்னும் சில நாள்களில் வெளியாக உள்ளது. அந்தத் தீர்ப்பு என்னவாக இருக்கும்?
3. கூவத்தூரில் உள்ள பண்ணை வீடுகளில் பாதுகாப்புக் காவலில் உள்ள எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறார்களா? அல்லது, மிரட்டல், பணத்தாசை மற்றும் பதவி ஆசைக்கு அடிபணிந்து, அவர்களும் சசிகலாவைத் தேர்ந்தெடுக்கும் கடிதத்தில் கையொப்பமிட்டார்களா?
4. தற்போதுள்ள எம்.எல்.ஏக்களுக்கு பொது மக்கள் ஆதரவு எந்த அளவில் இருக்கிறது?
5. எந்தப் பிரிவை அழைத்தாலும், அரசு நிலையாக இன்னும் 4 ஆண்டுகள், 3 மாதங்களுக்கு ஆட்சி செய்ய முடியுமா?
6. யாரை முதலில் அழைப்பது? பன்னீர் செல்வத்தையா? சசிகலாவையா?
7. பன்னீர் செல்வத்தை அழைத்தால், அவருக்கு சட்ட மன்றத்தின் நம்பிக்கை வாக்கைப் பெற, எத்தனை நாள்கள் கால அவகாசம் வழங்கலாம்?
8. பன்னீர் செல்வத்தை அழைக்கும் பட்சத்தில், அவைத்தலைவரின் செயல்பாடு, நடுநிலையாக இருக்குமா?
9. நம்பிக்கை வாக்கெடுப்பில், பன்னீர் செல்வம் தோற்று விட்டால், அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்?
10. சசிகலாவை அழைப்பதா, ஸ்டாலினை அழைப்பதா?
11. தமிழகத்தின் ஒட்டு மொத்த சட்ட, ஒழுங்கு எவ்வாறு இருக்கும்?
12. இவ்விஷயங்களில், அரசியல் சாராத சட்ட வல்லுநர்களின் கருத்தென்ன?
No comments:
Post a Comment