Saturday, February 4, 2017

இவருடைய இசைப்பணிகள் எண்ணில் அடங்காதவை.



பல அறிஞர்கள் பல கலைஞர்கள் இவ்வுலகில் தோன்றியிருந்தாலும் என்னை இன்னும் மிக மிக வியக்க வைத்துக்கொண்டு இருப்பவர்கள் தமிழகத்தில் பிறந்த இரண்டு தமிழர்கள் மட்டுமே.
இவர்களால் இவர்கள் காலத்தில் எவ்வாறு இப்படியெல்லாம் சிந்தித்து இவர்களது வியத்தகு படைப்புகளை உருவாக்க முடிந்தது.
அல்லது ஒரு மனிதப் பிறவியினால் இவ்வளவு ஆழமாக, இத்தனை வகைகளாகச் சிந்தனை செய்ய இயலுமா?
மேலும் அச்சிந்தனை அனைத்தையும் தன் படைப்புகளாக மாற்றி இவ்வுலக மக்கள் யாவரும் நன்னெறியுடனும், நல்மகிழ்வுடனும் உயிர்வாழ வழி வகுக்க முடியுமா?
இந்த இரண்டு கேள்விகட்கும் 'முடியும்' என்று நிரூபித்துக்காட்டியவர்கள் இந்த இரண்டு தமிழர்கள்.
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பற்பல பொருட்களும், மனித இயக்கத்தை நம்பியிராமல் தானே துள்ளியமாய் இயங்கும் பற்பல தானியங்கி (computerised) கருவிகளும் குவிந்துவிட்ட இந்நாளைப் போல் அல்லாமல்,
இவைகள் எல்லாம் இல்லாத இவர்களது காலத்தில் இந்த இருவர் படைத்ததே 'மிகப் பெரிய சாதனை' என்று குறிப்பிடுவதே சாலச் சிறந்ததும், தர்மமுமாகும்.
இதோ அந்த தமிழ் ஞானிகள்:
ஒருவர்:
தன் உயர்ந்த சிந்தனையில் உதித்த உயர் கருத்துகளை எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடிகளில்,
12,000 சொற்களாய்,
1,330 பாடல்களாக,
133 அதிகாரங்களின் வடிவில்,
'அறம், பொருள், இன்பம்', ஆகிய மூன்று பால்களையும் கொண்டு உருவாக்கி அதற்கு 'முப்பால்' என பெயரிட்டு அழைத்தவர்.
பின்னர் அதுவே 'திருக்குறள்' என அழைக்கப்பட்டது.
ஆம் நான் சொன்ன இருவரில் ஒருவர் திருக்குறள் படைத்த மகான் திருவள்ளுவர் ஆவார்.
மற்றொருவர்:
தன் சிந்தனை அனைத்தையும் ஒலி வடிவாக சிறுவயது முதலாய் சேமித்து வைத்து, அவற்றையெல்லாம், சிறந்த இசைக்கலைஞர்களைக் கொண்டு, தகுந்த இசைக்கருவிகள் ஒவ்வொன்றையும், தன் இசைக்குறிப்பு(notes) எழுதும் ஆற்றல் ஒன்றை மூலதனமாய் வைத்து, இசைக்கச் செய்து, உயர்ந்த வகை இசையாய்,
40 க்கும் மேலான வருடங்களில்
1000 க்கும் மேலான படங்களுக்கு
6000 க்கும் மேலான பாடல்களாகவும்
வருடத்திற்கு சராசரியாக
30 படங்களுக்கு பின்னணியிசை(BGM)களாகவும் படைத்து சாதனை புரிந்தவர்.
இவரே இன்றைய இசை உலகின் இசைஞானி என்றழைக்கப்படும் இளையராஜா ஆவார்.
இந்த இரு தமிழர்களின் அபூர்வ திறன் பற்றி வியப்பில் ஆழ்ந்து, அவர்கள் பற்றிய விவரங்கள் அறிய கூகுளின் உதவியை நாடியபோது கிடைத்த பல விஷயங்களைக் கீழே பகிர்கின்றேன், என் நட்புகளும் அறிவதற்காகவும், மகிழ்வதற்காகவும்.
படித்து பெருமை கொள்வோம்.
பெருமையுடன்
இளையராஜா ரசிகன்
திருவள்ளுவர்:
-------------
படைப்பு: திருக்குறள்
நூலாசிரியர்: திருவள்ளுவர்
உண்மையான தலைப்பு: முப்பால்
செயற்பாட்டிலுள்ள தலைப்பு: திருக்குறள்
நாடு: இந்தியா
மொழி: பழைய தமிழ்
தொடர்: பதினெண் கீழ்க்கணக்கு
பொருண்மை: நன்னெறி, அறம்
வகை: கவிதை
வெளியிடப்பட்டது: சங்க காலத்தில்எழுத்தோலை(சுமார் கி.மு 3 – 1 நூற்றாண்டுகள்)
வெளியிடப்பட்ட திகதி: 1812 (முதலாவது அச்சிடப்பட்டது)
நிகழ்வுகள்:
இவர் மயிலாப்பூரில் வசித்தவர். இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.
"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது.
முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை.
இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து,
1330 ஆம் குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.
இளையராஜா:
-------------
பிறப்பு: ஞானதேசிகன், இராசையா
சூன் 2, 1943 (அகவை 73)
பண்ணைப்புரம், தேனி.
நாடு: இந்தியர்
பணி: திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர் கவிஞர் பாடகர்
அறியப்படுவது:
இசையமைப்பாளர், பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ இசைக்கலைஞர்
பெற்றோர்: ராமசாமி, சின்னத்தாயம்மாள்
வாழ்க்கைத் துணை: ஜீவா
நிகழ்வுகள்:
இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார்.
இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர்.
சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோகருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார்.
Image may contain: 2 people
அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகிபாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன.
முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
இவருடைய இசைப்பணிகள் எண்ணில் அடங்காதவை.
இளையராஜா, இதுவரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார்.
லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார்.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.
இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
2009இல் - பழஸிராஜா (மலையாளம்)
2016இல் - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...