சசிகலா இருக்கும் மனநிலையைப் பார்த்தால் வெகு சீக்கிரமே சிறையிலடைப்பது நன்று. நிச்சயம் தமிழகத்தைச் சீர்குலைக்க எதையும் செய்யுமளவு மனநிலை தவறிய நிலையிலே இருக்கிறார். போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டால் ஜெயலலிதாவிடம் தோற்று விடுவோமென்ற தாழ்வுணர்ச்சி காணப்படுகிறது. சசிகலாவிற்கு இருக்கும் சொத்து பலத்தில் தமிழகத்திற்க்கெதிராக எந்த விபரீதம் கொண்டு சேர்ப்பாரோ என்பதற்கு சொல்வதற்கில்லை.
முதல்வர் நாற்காலியை தொட்டு விடக் கூட அனுமதிக்கக் கூடாது. மிகவும் ஆபத்தானவர்.
ஸ்டாலின் எதிர்க் கட்சி என்பதைக் கூட மறந்து முதல்வரை ஆதரிக்கத் தயாராகிறாரென்றால் விஷயம் லேசானதல்ல. சசிகலா அந்த அளவு தகுதியில்லாதவர்.
முதல்வருடன் (OPS) பாமரனும் வாதிட முடியும். மன்னார் குடி மாஃபியா கும்பலிடம் தமிழகம் சிக்கி விட்டால் .. அந்தோ பரிதாபம்.தமிழகம்.
சசிகலா ஜெயலலிதா இத்தனை காலம் எப்படி உடன் இருந்திருக்க முடியும்.
முதல்வருடன் (OPS) பாமரனும் வாதிட முடியும். மன்னார் குடி மாஃபியா கும்பலிடம் தமிழகம் சிக்கி விட்டால் .. அந்தோ பரிதாபம்.தமிழகம்.
சசிகலா ஜெயலலிதா இத்தனை காலம் எப்படி உடன் இருந்திருக்க முடியும்.
என்னென்னவோ சந்தேகங்களை விதைக்கிறது வீடியோக்கடை..
எம்.ஜி.ஆர் மரணத்தில் கூட சந்தேகமே..
எது எப்படியோ இப்போது வந்து கொண்டிருக்கும் ஆதாரங்கள்.. மிரட்டி நிலம் அபகரிக்கப்பட்டது.. ஏமாற்றி நகைக்கடை உரிமையாளரை இல்லாதாக்கியது.. தமிழகத்தில் இருக்கும் சொத்து மதிப்பு.. வெளிநாடுகளில் இருக்கும் சொத்து மதிப்பு.. தோண்டித் துருவினால் அடுத்த ஜென்மம் வரையிலான தண்டனை உண்டுதான்.
எம்.ஜி.ஆர் பாடல் வரி நியாபகம்
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
பல காலம் பலரை ஏமாற்றலாம். அவனை..?
No comments:
Post a Comment