Saturday, February 4, 2017

ஆளும் அரசின் ஏகோபித்த ஆதரவும் இருப்பதால் ....

கோகோ கோலா மற்றும் பெப்ஸி இந்தியாவில் எப்படி காலூன்றினார்கள் என்பதை சற்று பார்ப்போம். இன்றைக்கு அதன் அடிப்படையில் ஒரு நிறுவணம் இங்கே வலிமையாக காலூன்ற நினைக்கின்றது.
.
அதிகம் மக்கள் பயன்படுத்தும் குளிர்பான நிறுவணங்களை அதிக விலை கொடுத்து வாங்கினார்கள். அதன் அடிப்படை அந்த நிறுவணங்களை நடத்துவதற்கு அல்ல. அவைகளை முற்றிலுமாக முடக்கி தங்கள் குளிர்பானத்தை முதன்படுத்துவது. சிறிய அளவு குளிர்பான நிறுவனங்களை ஓரங்கட்ட பெரிய அளவு விளம்பரப்படுத்தி அதனையும் முடக்கினார்கள். விளையாட்டு நிகழ்ச்சிகளை ஸ்பார்னர் செய்து. தங்களை முதன்மைபடுத்தி தங்கள் குளிர்பான நிறுவணங்களை முன்னனி நிறுவணமாக மாற்றினார்.
.
இப்போது நடப்பு விஷயங்களுக்கு வருவோம். ஆன் லைன் வர்த்தகத்தில் இப்போது Flip cart மற்றும் Amazon நிறுவணங்கள் முன்னிலை வகிக்கின்றது. அவைகளையும் மிஞ்சும் வகையில் ஒரு நிறுவணம் வலுவாக இந்தியாவில் காலூன்ற மிகப்பெரிய அளவில் முயற்சிக்கின்றது. அந்த அடிப்படையில் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்ட சிறிய நிறுவணங்களை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். அந்த நிறுவணங்களை எடுத்து நடத்துவதற்கு அல்ல. அந்த நிறுவணங்களை மூடி தன் நிறுவணத்தை முன்னிலை படுத்தவே செய்கின்றது. சிறிய நிறுவணங்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. அந்த நிறுவணம் ஏற்கனவே வேறொரு ஆன் லைன் பரிவர்த்தனையில் இந்தியாவில் குறுகிய காலத்தில் பெரிய அளவு இந்தியாவில் கால்பதித்துள்ளது என்பது குறிப்பிடதக்க ஒன்று. விளையாட்டு நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்து கொண்டு இருக்கின்றது. விரைவில் வங்கி ஒன்றையும் திறக்க உரிமை பெறப்போகின்றது. அதற்கு பின்னனியில் ஆளும் அரசின் ஏகோபித்த ஆதரவும் இருப்பதால் எல்லாத்துறையிலும் கால்பதிக்க தட்டிய உடனே அரசுத்துறையின் அனைத்து கதவுகளும் விரைவில் திறக்கப்படுகின்றாம்,. அரசின் ஆதரவுக்கு பின்னியில் உள்ள அடிப்படை அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...